வெள்ளி, 7 செப்டம்பர், 2018

ஓரினச் சேர்க்கை குறித்து லெனின்!
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
1) ஜார் மன்னன் காலத்தில் ரஷ்யாவில் ஓரினச்சேர்க்கை
குற்றமாகக் கருதப்பட்டது. ஓரினச்சேர்க்கையில்
ஈடுபட்டால் தண்டனை உண்டு என்று ஜார் மன்னன்
காலத்தில் சட்டம் இருந்தது.

2) கிறித்துவ மதம் ஓரினச்சேர்க்கையை ஏற்பதில்லை.
பழைய ஏற்பாட்டில் கடவுள் சோடோமி பட்டணத்தை
அழித்தார் என்று உள்ளது. சோடோமி என்றால்
ஓரினச்சேர்க்கை என்று பொருள்.

3) 1917ல் ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டு, லெனின்
ரஷ்யாவைக் கைப்பற்றினார். லெனின் பதவி
ஏற்றதுமே, ஓரினச் சேர்க்கை குற்றம் என்ற
சட்டத்தை ரத்து செய்தார்.

4) லெனினின் கருத்தை இந்தியாவின் உச்ச நீதிமன்றம்
100 ஆண்டுகளுக்குப் பின்பு இன்றுதான் ஏற்றுள்ளது.
ஆக, லெனினை விட 100 ஆண்டுகள் பின்தங்கி
உள்ளது இன்றைய இந்தியா.

5) பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டு
158 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த சட்டம்
தற்போது ரத்து  செய்யப் பட்டுள்ளது. 1860-1862 காலக்
கட்டத்தில்  பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தச் சட்டத்தை
இந்தியாவில் ஏற்படுத்தினார். இங்கிலாந்தில்
இயற்றப்பட்ட இச்சட்டம் இந்தியாவிலும் சட்டம் ஆனது. 

6) ஆக, இந்திய ஆளும் வர்க்கமும் இந்திய முதலாளி
வர்க்கமும் 158 ஆண்டு காலப் பத்தாம் பசலித்
தனத்துக்கு விடை கொடுத்துள்ளார்கள்.

7) குட்டி முதலாளித்துவ மற்றும் தாராள முதலாளித்துவ
வர்க்கச் சார்பையும் அந்த வர்க்கத்தின் சிந்தனையையும்
கொண்டிருக்கும் நீதியரசர்கள் 158 ஆண்டு காலப்
பழமைவாதத்திற்கு முடிவுரை எழுதி உள்ளனர்.

8) இப்போது ஒரு கேள்வி எழுகிறது! தமிழக மார்க்சிஸ்டுகள்
 தங்களின் பழமைவாதச் சிந்தனையில் இருந்து
எப்போது விடுபடப் போகிறார்கள்?
******************************************************
 

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக