வெள்ளி, 7 செப்டம்பர், 2018

தமிழில் எதுவும் மொழிபெயர்க்கப்படவில்லை.
ஆனால் லெனின் ஆட்சிக்கு வந்த உடனேயே,
ஓரினச் சேர்க்கை குற்றம் என்ற ஜார் மன்னன்
காலத்துச் சட்டத்தை ரத்து செய்தார். ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டு இருந்த ஓரினச் சேர்க்கையாளர்கள்
சிறையில் இருந்து விடுதலை செய்யப் பட்டனர்.

பின் 1933ல் தோழர் ஸ்டாலின் ஓரினச்சேர்க்கை குற்றம்
என்று சட்டம் கொண்டு வந்தார். ஓரினச் சேர்க்கை
செய்யும் ஆண்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை
என்று ஸ்டா சட்டம் கொண்டு வந்தார். 1933ல் ஸ்டாலின்
கொண்டு வந்த இந்தச் சட்டம் 1993 வரை நீடித்தது.
போரிஸ் யெல்ட்ஸின் ஜனாதிபதி ஆனவுடன் 1933ல்
ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்ற லெனின்
காலத்துச் சட்டத்தை மீண்டும் கொண்டு வந்தார்.     

மார்க்சிய இயங்கியல் வகுப்பு
09.09.2018 ஞாயிறு மாலை 5.30 மணி.
பேச்சும் விவாதமும் (Speech and discussion)!
உரை= 1 மணி நேரம். விவாதம்=1 மணி நேரம். வாரீர்!  

கூட்டம் அதே இடத்தில் நடைபெறும்.
OBC வாங்கி ஊழியர் சங்க அலுவலகம்
6, மேற்கு அவென்யூ, கோடம்பாக்கம், சென்னை 600 024.
அடையாளம்: மேனகா அட்டைகள் (Menaka Cards) எதிரில்.
கோடம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அருகில்.
பேருந்து நிறுத்தம்: சேகர் எம்போரியம், மீனாட்சி கல்லூரி.

இக்கூட்டத்தில் பேசப்படும் பொருள்:
------------------------------------------------------------------
1) இயங்கியலின் மூன்று விதிகளும் பருப்பொருளுக்கு
அதாவது இயற்கைக்கு பொருந்துகின்றனவா?
2) இயங்கியலுக்கு முன்பிருந்த மெய்காண் முறைகள்.
3) சாக்ரட்டீஸ், அரிஸ்ட்டாட்டில், ஹெக்கல் ஆகியோரின்
மெய்காண் முறைக்கும், கலிலியோ முன்வைத்த
மெய்காண் முறைக்கும் உள்ள வேறுபாடு.
4) தொடர்புள்ள ஏனைய அனைத்தும்.   

கூட்டம் ஐந்தரை மணிக்குத் தொடங்கும் என்பதை
தோழர்கள் கவனம் கொள்க. 5.30 PM என்பதை நினைவில்
இருத்துக. கூட்டம் சரியான நேரத்திற்குத் தொடங்கும்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் மலேசியாவில்
பிரம்படி தண்டனை வழங்கப் படுகிறது!


 


சே குமார் மருதுபாண்டியன்   செந்தழல் ஞானம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக