செவ்வாய், 18 செப்டம்பர், 2018

சிஐஏயின் பலிகடாவான விஞ்ஞானி நம்பி நாராயணன்!
-----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------------
நம்பி நாராயணன் அசலான தமிழர். தமிழ் விஞ்ஞானி.
இஸ்ரோவில் பணியாற்றியவர். கிரையோஜெனிக்
(cryogenic) தொழில்நுட்பத்தைத் தம் சொந்த அறிவில்
முயற்சியில் கண்டறிந்தவர்.

இந்தியா கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை
உருவாக்கித் தன்னிறைவு பெறுவதை அமெரிக்கா
விரும்வில்லை. இதைத் தடுக்க அமெரிக்கா தனது
சிஐஏ உளவு அமைப்பை இறக்கியது.

தொழில்நுட்ப ரகசியங்களை அந்நிய நாட்டுக்கு
விற்றதாக நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு
புனையப் பட்டது. நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்
பட்டார்.

மாத்யூ என்ற கேரள போலீஸ் அதிகாரி சிஐஏயின்
கையாளாகச் செயல்பட்டான்.

நீண்ட சட்டப் போராட்டத்தின் பின் நம்பி நாராயணன்
நிரபராதி என்று நிரூபித்தார். வழக்கிலிருந்து விடுதலை
ஆனார்.  

நம்பி நாராயணனைக் கைது செய்து பொய்வழக்குப்
புனைந்த சிஐஏ கைக்கூலிகளாகச் செயல்பட்ட போலீஸ்
அதிகாரிகளை உடனடியாகக் கைது செய்து சிறையில்
அடைக்க வேண்டும்.
********************************************************************

மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை ஏற்றுக்
கொண்டு,  கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி,
இந்தியாவில் ஒரு புரட்சியை நடத்துவதற்காகச்
செயல்படுவோரின் பெயரே நக்சல்பாரிகள்.
அர்பன் நக்சல் என்றோ காவி நக்சல் என்றோ யாரும்
கிடையாது. அத்தகைய பதப் பிரயோகங்கள்
ஏற்கத் தக்கவை அல்ல. அத்தகைய பதங்களை
நியூட்டன் அறிவியல் மன்றம் தடை செய்கிறது.

எல்லோரும் நக்சல்பாரிகள் ஆகி விட முடியாது.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக