பாகிஸ்தானுடன் போர் வருமா?
Will India cross the Rubicon?
---------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------
Man needs war to work off the intolerable burden of civilisation.
-----Sigmund Freud.
போர் வேண்டாம் என்ற குரல்கள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன.
போர் வேண்டும் என்ற குரல்களும் கூடவே ஒலிக்கின்றன.
இவை இரண்டுமே குட்டி முதலாளித்துவத்தின் குரல்கள்.
போர் வேண்டாம் என்பதோ போர் வேண்டும் என்பதோ
ஒரு universal solution அல்ல. இவை குட்டி முதலாளித்துவத்தின்
wishful thinking மட்டுமே. அமைதியைக்கூட ஒரு போரின் மூலம்தான்
பெற இயலும். இதுதான் இன்றைய சர்வதேச அரசியல் நிலைமை.
முதலிரண்டு பத்திகளையும் படித்த பின்னர், இந்தக் கட்டுரை
போரை ஆதரிக்கிறது என்று உங்களுக்குத் தோன்றினால்,
நீங்கள் அருகிலுள்ள ரயில் நிலையத்திற்குச் சென்று,ரயில்
வரும் நேரம் பார்த்து ரயிலில் தலையைக் கொடுக்கவும்.
இக்கட்டுரை IQ 110 உடையவர்களை இலக்காகக் கொண்டு
எழுதப் படுவது. குன்றிய IQ உடைய சிந்தனைக் குள்ளர்கள்
விலகிச் செல்வதே நல்லது.
ஒன்றல்ல ஓராயிரம் காரணிகளால் தீர்மானிக்கப் படுகிறது
ஒரு போர். எனவே இன்றைய சூழலில் பாகிஸ்தானுடன்
ஒரு போர் தேவையா என்பதை இந்திய ராணுவமும்
இந்திய அரசும் முடிவு செய்யும். குட்டி முதலாளித்துவம்
தவளைக் கூச்சல் இடுவதால் எதுவும் நிகழப் போவதில்லை.
அண்மைக்கால வரலாற்றில் இந்தியா நடத்திய போர் கடந்த மில்லேனியத்தில் நடந்த கார்கில் போர். 1999 மே முதல் ஜூலை வரை இரண்டு மாதங்கள் நடந்த இப்போரை அடல் பிஹாரி வாஜ்பாய்
நடத்தினார்.
நேரு காலத்தில் 1962ல் சீனாவுடன் போர் நடந்தது. அந்தப்
போரில் இந்தியா தோற்றது. போர் புரிந்த நேருவுக்கு
இந்திய தேசம் முழுவதும் ஆதரவு இருந்தது. மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட்கள் மட்டுமே (இன்றைய CPM) நேருவை எதிர்த்தனர். தமிழ்நாட்டில், திமுக தலைவர் அண்ணா வரிந்து கட்டிக்
கொண்டு போரை ஆதரித்தார். பாவேந்தர் பாரதிதாசன்
போரை ஆதரித்தும் சீனாவைக் கண்டித்தும் பாடல்கள்
இயற்றினார்.
போனால் கிடைக்கும் போரில்- அந்த
சீனாக்காரன் ஈரல்
என்ற பாவேந்தரின் வரி இப்போதும் என் நினைவில்
நிழலாடுகிறது.
1971ல் இந்திரா பாகிஸ்தான் மீது போர் தொடுத்து
வங்கதேசத்தைத் தனியாகப் பிரித்துக் கொடுத்தார்.
இன்றைக்கு வங்க தேசம் அமைதியுடனும் நிம்மதியுடனும்
வாழ இந்தப்போரின் வெற்றியே காரணம். ஆக வங்கதேசம்
அமைதியை எப்படிப் பெற்றது? ஒரு போரின் மூலமே
பெற்றது. இப்போது இந்தக் கட்டுரையின் இரண்டாம்
பத்தியை மீண்டும் படியுங்கள். அமைதியைக் கூட
ஒரு போரின் மூலம்தான் பெற முடியும் என்ற வாக்கியம்
அதில் இருக்கிறதா? அது சரிதான் என்று உங்கள் மனதில்
படுகிறதா?
போரை நடத்திய இந்திராவுக்கு நாடு முழுவதும் முழுமையான
ஆதரவு இருந்தது. மொத்த தேசமும் இந்திராவை ஆதரித்து
நின்றது. கல்லூரி மாணவர்கள் CRUSH PAKISTAN என்ற
கோஷத்துடன் தன்னெழுச்சியாக ஊர்வலம் சென்றனர்.
மாணவராக இருந்தபோது அந்த ஊர்வலத்தில்
இக்கட்டுரை ஆசிரியர் பங்கேற்றது இப்போது நினைவுக்கு
வருகிறது. திருநெல்வேலி நகரத் தெருக்களைக்
குலுக்கியது அந்த ஊர்வலம்.
சீனப்போரை நடத்திய நேருவுக்கும் (1962), பாகிஸ்தான் போரை
நடத்திய இந்தியாவுக்கும் (1971), கார்கில் போரை நடத்திய
வாஜ்பாய்க்கும் (1999) ஒட்டு மொத்த தேசத்தின் ஆதரவு இருந்தது.
இப்போது இந்த 2019ல் பாகிஸ்தானுடன் ஒரு போரை மோடி
நடத்தினால், மோடிக்கு இந்திய மக்களின் பெருவாரியான
ஆதரவு கிடைக்குமா? முன்பத்தியில் கூறிய போர்கள்
அனைத்தும் கடந்த மில்லேனியத்தில் நடந்தவை. குறிப்பாக
கார்கில் போர் நடந்த காலம், எலக்ட்ரானிக்
மீடியா அப்போதுதான் தலைதூக்கி இருந்த நேரம். போர்ச்
செய்திகள் காணொளிகளாக வீடியோ காட்சிகளாக
டிவி சானல்களில் வெளியாகி போருக்கு ஆதரவான
மனநிலையை மக்களிடம் உருவாக்கி இருந்தன.
உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் கடந்த மில்லேனியத்தில்
முழுமையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
போகோ ஹராம், அல் கைதா, ISIS போன்ற பயங்கரவாதக்
குழுக்கள் தற்போதுள்ள பெரும் வல்லமையை அப்போது
பெற்றிருக்கவில்லை.
இன்று இந்த 2019ல் பாகிஸ்தானுடன் போர் என்பது பாகிஸ்தான்
என்ற ஒரு நாட்டுடனான போர் மட்டுமல்ல. அல் கைதா, ISIS
போன்ற சர்வதேசப் பயங்கரவாதக் குழுக்களும் போரில்
பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்கும். மேலும் பாகிஸ்தானில்
இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவதிற்கு
என்றே வளர்த்து விடப்பட்டுள்ள லஷ்கர் இ தைபா, ஜெய்சி
முகம்மது போன்ற பயங்கரவாதக் குழுக்களும் இந்தியாவுக்கு
எதிராக வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கும். இந்தியா
இவற்றையும் சமாளிக்க வேண்டும்.
அடுத்து உள்நாட்டு ஆதரவு பற்றிப் பார்க்க வேண்டும்.
நேருவுக்கும் இந்திராவுக்கும் வாஜ்பாய்க்கும் உள்நாட்டில்
கிடைத்த ஆதரவு கிட்டத்தட்ட முழுமையானது. அதே ஆதரவு
தற்போதைய இந்திய சூழலில், மோடிக்கு நிச்சயமாகக்
கிடைக்காது. ஒட்டு மொத்தக் குட்டி முதலாளித்துவமும்
மோடிக்கு எதிராகவும் போருக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு
ஆதரவாகவும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும்.
பாகிஸ்தானை விட எண்ணிக்கையிலும் ஆற்றலிலும் பெரிய
ராணுவம் இந்தியாவில் உண்டு. நவீன ஆயுதங்களிலும்
இந்தியா பாகிஸ்தானை விடவும் முன்னணியில் உள்ளது.
எனினும் பாகிஸ்தானில் இம்ரான் கானின் போர் முயற்சிக்கு
முழுமையான உள்நாட்டு ஆதரவு கிடைக்கும். ஆனால் மோடிக்கு
உள்நாட்டு ஆதரவு முழுமையாகக் கிடைக்காது. இது
மறுக்க முடியாத உண்மை.
We have canons to the right
canons to the left
canons in front
But in India there are canons to the back also.
உள்நாட்டில் தனது போர் முயற்சிகளுக்கு முழுமையான
ஆதரவு கிடைக்காது என்று மோடி அறிந்திருக்கிறார்.
இதை அவர் எப்படிச் சமாளிக்கப் போகிறார்?
வழக்கமாக ஒரு போர் நடக்கும்போது, நம் நாட்டில்
வெளியுறவு நெருக்கடி நிலை (external emergency) பிறப்பிக்கப்
படும். உள்நாட்டு நெருக்கடி நிலை போரை முன்னிட்டுப்
பிறப்பிக்கப் படாது. அதற்கான தேவையே இதுவரை
எழுந்தது இல்லை.
ஆனால் இன்று இந்த 2019ல் மோடி பாகிஸ்தானுடன் ஒரு
போரை ஆரம்பிப்பார் என்றால், உள்நாட்டு நெருக்கடி
நிலையைப் பிறப்பிக்காமல் அவரால் போரை வெற்றிகரமாக
நடத்த இயலாது. Because there are canons to his back.
வெளிநாட்டுடன் போர்! உள்நாட்டிலும் நெருக்கடி நிலை!
இது ஒரே நேரத்தில் சொந்த நாட்டுடனும் எதிரி நாட்டுடனும்
போர் புரிவதற்குச் சமம். சாராம்சத்தில் இது வரலாற்றின்
மாபெரும் முரணாகவும் மாபெரும் முட்டாள்தனமாகவும்
ஒரே நேரத்தில் திகழும். இதை மோடி மட்டுமல்ல வேறு
எந்தப் பிரதமரும் செய்ய முன்வர மாட்டார். இந்தியப்
பிரதமராக இருந்த IQ குன்றிய தேவ கவுடா போன்ற
முழு முட்டாள்களே இதைச் செய்ய மாட்டார்கள்.
ஜெய்சி முகம்மது, லஷ்கர் இ தைபா, ISIS அமைப்புகளின்
முகவர்கள் இந்தியாவில் கணிசமாக ஊடுருவி உள்ளனர்.
உள்நாட்டிலும் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவாளர்கள்
சுலபத்தில் கிடைப்பார்கள். கருத்தியல் ரீதியாகவும் மோடி
எதிர்ப்புப் பிரச்சாரம் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரமாக
metamorphosis அடையும். நெருக்கடி நிலைப் பிரகடனம்,
பயங்கரவாதிகளை ஒடுக்கிச் சிறையில் அடைத்தல்
அல்லது eliminate செய்தல், பத்திரிக்கைத் தணிக்கை,
எலக்ட்ரானிக் மீடியா தணிக்கை, முகநூல் முடக்கம்
ஆகிய விரும்பத்தகாததும் மக்களின் எதிர்ப்பைச்
சம்பாதிப்பதுமான நடவடிக்கைகள் இல்லாமல்,
மோடி போரில் இறங்குவார் என்றால், போரை அவரால்
வெற்றிகரமாக நடத்த இயலாது. This is the predicament in which
our PM is placed.
இம்ரான் கான் போரை விரும்பவில்லை என்று தெளிவாகச்
சொல்லி இருக்கிறார். அவர் சொன்னது முகநூலில்
வெளியான உடனேயே, அவருக்குத் தமிழ்நாட்டில் பலரும்
ரசிகர் மன்றங்களை அமைத்து விட்டார்கள். நாமும் கூடச்
சேர்ந்து கைதட்டுவோம். அதில் தவறொன்றும் இல்லை.
இம்ரான் கான் ஏன் அவ்வாறு கூறினார்? ஏன் அவர் போரை
விரும்பவில்லை? அவர் என்ன புத்த மதத்தில் சேர்ந்து
விட்டாரா? இல்லை. போர் நடந்தால் இம்ரான் கான்
பிரதமராக நீடிப்பது கடினமாகி விடும். ஏன்? எப்படி?
பாகிஸ்தான் இந்தியாவைப் போன்று இறையாண்மை
உள்ள நாடு அல்ல. எல்லைப்புற மாகாணங்களில்
பலுசிஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தானின் இறையாண்மை
குற்றுயிரும் குலை உயிருமாக உள்ளது.
இந்திய ராணுவம் இந்தியப் பிரதமருக்கு முழுமையாகக்
கட்டுப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான்
பிரதமருக்குக் கட்டப்பட்டதாக எப்போதுமே இருந்ததில்லை.
போரில் பாகிஸ்தானுக்குத் தோல்வி ஏற்பட்டாலோ, அல்லது
போர் நீடித்துக் கொண்டே சென்றாலோ, ராணுவம் சும்மா
இருக்காது. பிரதமரைச் சிறையில் அடைத்து விட்டு,
ராணுவத் தளபதி பிரதமராகி விடுவார். ராணுவ ஆட்சி
என்ற Damocles' sword எப்போதுமே பாகிஸ்தானின்
பிரதமர்கள் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டுதான்
இருக்கிறது. அயூப் கான் முதல் பர்வேஸ் முஷாரப் வரை
இதுதான் நிலைமை. இதனால்தான் இம்ரான் கான் போரை
விரும்பவில்லை.
கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஒரு போர் என்று வந்தால்
இம்ரான் கானும் மோடியும், இரண்டு பிரதமர்களுமே,
ஒரு சௌகரியமான நிலையில் இல்லை. ஒவ்வொருவருக்கும்
வெவ்வேறு வகையான கஷ்டங்கள்.
எனவே தற்போதைய சூழலில் போரைத் தவிர்ப்பதே
மோடிக்கு நல்லது. அத்தகைய முடிவைத்தான் மோடி எடுப்பார்.
இதன் பொருள் போரில் இந்தியா தோற்று விடும் என்பதல்ல.
இந்தச் சூழ்நிலையில், இந்த நேரத்தில், இந்தப் போர் ஒரு
தீர்வாக அமையாது என்பதே. India is an Augean sty. இந்தக் குதிரை
லாயத்தைச் சுத்தம் செய்யாமல், போர்க்குதிரையில் ஏற முடியாது.
அப்படியானால் என்றும் எப்போதும் போரே தேவையில்லை
என்று பொருள் இல்லை. வாசகர்கள் பிறழ் புரிதலைத்
தவிர்க்கவும். அமைதி என்பதை சமாதானம் என்பதை
ஒரு போர் மூலமாக மட்டுமே பெற முடியும் என்பதுதான்
இன்று நிலவும் உலகளாவிய யதார்த்தம். இதை நியூட்டன்
அறிவியல் மன்றம் அடித்துக் கூறுகிறது.
எனினும் எல்லை தாண்டிய பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு
எதிரான நடவடிக்கைகளை மட்டுமே இந்தியா எடுத்தால்
போதும். அதை முறையாகவும் ஒழுங்காகவும் இந்தியா
மேற்கொண்டாலே போதும். போர் வெற்றியையே விட
அதிகமான பயனை இந்த நடவடிக்கைகள் தரும்.
எனவே தற்போது பாகிஸ்தானுடன் போர் தேவையில்லை.
இந்த வாக்கியத்தில் உள்ள " தற்போது" என்ற சொல்லை
அடிக்கோடு இடவும். அதே நேரத்தில் சமாதானம் என்பதை
ஒரு போர் மூலமாக மட்டுமே பெற முடியும் என்ற உண்மையும்
மூளையில் இறங்கட்டும்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்.
--------------------------------------------------------------------------
பின்குறிப்பு: தர்க்க ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் மட்டுமே
இக்கட்டுரையின் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து
எழுதலாம். ஏனைய எவையும் அனுமதிக்கப் படாது.
பிறழ் புரிதலைத் தவிர்க்க IQ > or = 110 உள்ளவர்கள்
மட்டும் இக்கட்டுரையைப் படிக்கவும். ஏனையோர்
பிறழ் புரிதலைத் தவிர்க்கும் பொருட்டு, இக்கட்டுரையைப்
படிக்காமல் இருந்து ஒத்துழைப்பு நல்கவும்.
*******************************************************
ஒரு ஆங்கில செய்தி சானலின் செய்தியாளர் " போர் வருமா?"
என்ற தலைப்பில் ஒரு story தயாரிக்க விரும்பினார். அது
தொடர்பாக என்னிடம் கருத்துக் கேட்க விரும்பினார்.
அவரிடம் சொன்னவற்றையே தமிழில் ஒரு கட்டுரையாக
நடித்துள்ளேன். எனவே ஆங்கிலச் சொற்கள், தொடர்களைத்
தவிர்க்க இயலவில்லை. தெரியாத சொற்கள் தொடர்களுக்குப்
உரிய அகராதிகளைப் புரட்டிப் பொருளை அறிந்து
கொள்ளுமாறு வேண்டுகிறேன். ஆங்கிலப் பயன்பாட்டுக்கு
மன்னிப்பும் கோருகிறேன்.