புதன், 6 பிப்ரவரி, 2019

பகடையை ஒருமுறை உருட்டும்போது ஆறு விளைவுகள் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன. அவற்றுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நிகழ்தகவு இருக்கிறது. இது நேர்ந்தவாறான நிகழ்வு, random event. இங்கு ஆறு எண்களுக்கும் சமவாய்ப்பு இருக்கிறது. அதனால் இது சமச்சீரான பரவல், uniform distribution. பல பொருள்களின் பண்புகளிடையேயோ பல நிகழ்வுகளிடையேயோ சார்புமை (dependence) இல்லாமலிருப்பது முறைமையின்மை. ஓரளவுக்கு உடனுறவு (correlation) இருந்தால் குறைந்த முறைமை இருப்பதாக சொல்கிறோம். இரண்டு கருத்துகளும் தொடர்புடையவை. நன்றாக குலுக்கிய சீட்டுக்கட்டு முறைமையற்றது. அதிலிருந்து ஒரு சீட்டை உருவுவது நேர்ந்தவாறான நிகழ்வு. இந்த தொடர்பால் இரண்டு சொற்களின் பொருளுணர்வெளிகளிடையே (semantic space) ஒரு மேற்பொருந்தல் (overlap) இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவற்றை ஒன்றிழைய (coalesce, fuse) விடக்கூடாது.அறிவியலில் எண்ணற்கரிய முறைமையற்ற நிலமங்களிலிருந்து நேர்வுமை எழுவதாக ஒப்புருவாக்குகிறோம். We model randomness as arising from numerous disordered modes. சீர்குலைவு (entropy) என்பது முறைமையின்மையின் அளவு. Randomness, disorder, entropy ஆகியவை பொதுமொழியில் ஒரே பொருளுடையனவாக தோன்றுகின்றன. ஆனால் disorder எனறு எழுதவேண்டிய இடங்களில் அறிவியலார் randomness என்று எழுதமாட்டார்கள். தமிழ் அறிவியலாளருக்கு 
இந்த வசதியை மறுக்கலாமோ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக