காஷ்மீர் தற்கொலைப் படைத் தாக்குதல்
நிகழ்ந்த "புல்வாமா"வில் பேரழிவு நிவாரணப்
பணிகளில் BSNL ஐத் தவிர வேறு யாரும் இல்லை!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற ஊரில்
CRPF படைவீரர்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு
தாக்குதலில் 40 CRPF வீரர்கள் இறந்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத
அமைப்பான ஜெய்சி முகமது என்னும் அமைப்பு
இந்தப் படுகொலைக்குப் பொறுப்பேற்றுள்ளது.
புல்வாமா சாலையெங்கும் ரத்த வெள்ளம்.
பிணக் குவியல். சகல தகவல் தொடர்பும்
துண்டிக்கப்பட்ட நிலை. பேரழிவு மீட்புப் பணிகள்
நடைபெற வேண்டுமெனில் முதலில் தகவல் தொடர்பு
சீரமைக்கப்பட வேண்டும்.
WIRED NETWORK சர்வ நாசம்.பாரம்பரியமான வயர்லெஸ்
(Conventional wireless network) முற்றிலும் சேதம் அடைந்த நிலை.
இந்நிலையில் புல்வாமா என்னும் அந்த ஊரில்,
இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு தற்கொலைப்
படைத் தாக்குதல் நடத்திய அந்த இடத்தில்,
ஆட்களை அனுப்பி பழுதுபட்ட இணைப்புகளைச்
சரிசெய்வது என்பதெல்லாம் கற்பனைக்கும்
அப்பாற்பட்ட செயல்.
இந்நிலையில். NDMA ஒரு முடிவு எடுக்கிறது.
(NDMA = National Disaster Management Authority). NDMA
என்பது தேசிய பேரழிவு மேலாண்மை நிறுவனம்.
தகவல் தொடர்பை உடனடியாகச் சீரமைக்க
வேண்டும் என்று முடிவெடுத்த NDMA, அப்பொறுப்பை
BSNL நிறுவனத்திடம் ஒப்படைக்கிறது.
42.11 கோடி வயர்லெஸ் (மொபைல்)
சந்தாதாரர்களுடன் முதல் இடத்தில் இருக்கும்
வோடபோன் நிறுவனத்தையோ அல்லது
34.18 கோடி சந்தாதாரர்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஏர்டெல் நிறுவனத்தையோ NDMA
நாடவில்லை. அல்லது புதிதாகச் சந்தைக்கு
வந்து சந்தையையே கபளீகரம் செய்து
கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோவையோ
NDMA நாடவில்லை. மாறாக 11.38 கோடி
சந்தாதார்களை மட்டுமே கொண்ட BSNL
நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்ற வள்ளுவரின் வழி நின்றது NDMA.
முற்றிலும் தகவல் தொடர்பு சீரழிந்து, மனிதர்கள்
செல்ல முடியாத இடமாகி விட்ட புல்வாமா என்ற
அந்த ஊரிலும் அதைச் சுற்றிலும் உள்ள
இடங்களுக்கு உடனடியாக இணைப்பு
கொடுக்க வேண்டும் என்பது ஒரு Herculian task.
(Herculian task என்பதற்கு பொருள் தெரியாதோர்
உரிய அகராதியை நாடவும். எல்லாவற்றுக்கும்
கோனார் நோட்ஸ் போட்டுக் கொண்டு
இருக்க முடியாது).
இந்த Herculian taskஐ தன் வலிய தோள்களில்
அனாயாசமாகச் சுமந்தது BSNL. BSNLஇடம் VSAT
சேவை உண்டு. VSAT என்பது அதி உயர்
தொழில்நுட்பம்.
VSAT = Very Small Aperture Terminal. Aperture என்றால் என்ன
என்று புரிந்து கொள்ள 10,11 வகுப்புக்குரிய CBSE
Physics பாடநூல்களை நாடவும்.
சுருங்கக் கூறின், VSAT தொழில்நுட்பம் என்பது
மிகச்சிறிய ஆன்டெனாவைக் கொண்டது.
Geosynchronous செயற்கைக்கோளைப் பயன்படுத்துவது.
இதைப் பயன்படுத்தி ஒரு CUG ஐ உருவாக்கி
(CUG = Closed User Group) தகவல் தொடர்பைச்
சீரமைத்துக் கொண்டிருக்கிறது BSNL.
பொதுத்துறை நிறுவனமான,மக்களின் நிறுவனமான
BSNL இந்த தேசத்தை புனர்நிர்மாணம் செய்வதில்
தலையாய பங்கு வகிக்கிறது.
தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிர்த்தியாகம்
செய்த CRPF வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
130 கோடி மக்களின் சொந்தமாகிய BSNLன்
சேவையைப் போற்றுவோம்.
Breathes there the man with soul so dead
Who never to himself hath said,
"This is my own, my native land."
*******************************************************
சாதி ஒழிப்பு ஒரு பெரும் பொருளாதார, சமூக,
பண்பாட்டு மாற்றத்திற்குப் பிறகுதான்
சாத்தியம். சாதி ஒழிப்பு ஒருநாளில் நடந்து
முடிந்து விடக்கூடிய விஷயம் அல்ல.
மதமாற்றம் சாதி ஒழிப்புக்குத் தீர்வாகாது.
மத ஒழிப்பு என்பதும் சாத்தியமல்ல. கடவுள்
நம்பிக்கை இருக்கும் வரை மதம் இருக்கும்.
மதம் அரசியலில் தலையிடாதவாறு தடுக்கலாம்.
அதுதான் சோவியத்தில் சீனத்திலும்
செய்யப் பட்டது.
மதம் பற்றியும் சாதி பற்றியும் எந்த ஒரு
அடிப்படைப் புரிதலும் இல்லாமல்,
வெறுமனே ஒரு சான்றிதழ் வாங்கி வைத்துக்
கொண்டால் போதும் என்று நினைப்பது
குட்டி முதலாளித்துவ அறியாமை. அதைக்
கண்டித்து சம்மந்தப்பட்ட பெண்மணியை
சரியான அறிவு நோக்கி ஆற்றுப் படுத்துவதே
சமூக உணர்வு கொண்டோரின் கடமை.
அதை விட்டு சம்மந்தப்பட்ட குட்டி முதலாளித்துவப்
பெண்மணிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு
திரிவது சரியல்ல.
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்" - திருக்குறள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக