சனி, 2 பிப்ரவரி, 2019

திமுக  குறித்த எமது நிலைபாடு!
பகிரங்கப் பிரகடனம்!
------------------------------------------------------------
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக்
கொள்வது என்னவென்றால்,

1) திமுக என்பது தற்போது உதயநிதி பிரைவேட் லிமிடெட்
கம்பெனியாக ஆகி  விட்டதாலும்,

2) திராவிட இந்துத்துவக் கட்சியாக அது ஏற்கனவே
பரிணாமம் அடைந்து விட்டதாலும்,

3)  நேரடியாகவோ மறைமுகமாகவோ சுற்றி வளைத்தோ
திமுகவை ஆதரிக்கும் எந்தவொரு செயலும்
திராவிட இந்துத்துவத்தை வலுப்படுத்துவதாகவும்
கூத்தாடி உதயநிதியை தமிழர்களின் தலைவராக
ஆக்குவதற்குப் பயன்படுவதாகவும் மட்டுமே
அமையும் என்பதாலும்,

4) எந்தவிதத்திலும் கூத்தாடி உதயநிதிக்கு எள்முனை
அளவும் பயனளிப்பதாக எமது சிந்தனை வாக்கு செயல்
அமைந்து விடக் கூடாது என்பதே எமது நிலைபாடாக 
இருக்கும் என்று பகிரங்கமாக அறிவிக்கிறோம்.

5) இதுவே எமது உறுதியான நிலைபாடு. இந்த
நிலைபாடு குறித்து எவர் ஒருவருடனும் எத்தகைய
வாதப்பிரதிவாதத்திலும் ஈடுபடுவதற்கில்லை என்றும்
இந்த நிலைபாட்டை ஏற்காதவர்கள் எம்முடனான
தொடர்பில் இருந்து வெளியேறுவதற்கு முழுஉரிமை
படைத்தவர்கள் என்பதையும் இந்த பகிரங்கப்
பிரகடனம் வாயிலாக அறிவிக்கிறோம்.
********************************************************** 

இந்துத்துவத்தை எதிர்ப்பது என்பது
பாஜகவையும் திமுகவையும் ஒருசேர எதிர்ப்பதே!
பாஜக தேசிய இந்துத்துவம்!
திமுக திராவிட இந்துத்துவம்!


பின்குறிப்பு:
---------------------
திமுக என்பது ஒட்டு மொத்த திராவிடத்தின்
தலைமைச் செயலகம். திமுக என்பதற்குள்
அதிமுக, மதிமுக, அமமுக ஆகிய அனைத்தும்
அடங்கும். பல்வேறு திக கட்சிகளும் அடங்கும்.
இது தேர்தல் அரசியலின் செயல் தந்திரம் அல்ல.
இது தத்துவார்த்த முடிவு.

தோழரே, CPI, CPM  ஆகிய இரு கட்சிகளும்
போலிக்கம்யூனிஸ்ட் கட்சிகள். அவை அழிந்து
கொண்டு வருகின்றன.

இந்து கிறித்துவம் இஸ்லாம் சீக்கியம்
சமணம் பௌத்தம் ஆகிய அறுசமயங்களையும்
அவற்றின் மதவெறியையும் வீழ்த்தித் தரையில்
கிடத்தி அவற்றின் முதுகுத்தோலை உரிக்கும்
இடம் இது என்பதை உணர்க. 

முக்கிய அறிவிப்பு:
---------------------------------
அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை
பின்னூட்டம் இடுவார்கள் உடனடியாக
பிளாக் (block) செய்யப் படுவார்கள்.

தேர்தல் அரசியல் (electoral politics) பயனற்றது.
அது செக்குமாடு போன்று சுற்றிச் சுற்றி வருவது.
எனவே தேர்தல் அரசியலுக்கு வெள்ளியிலான
போராட்டங்களை முன்னெடுப்பதே இன்றைய
சூழலில் பயனளிப்பது. அதற்கு தற்போதைய
தேர்தல் அரசியல் கட்சிகள் .பயன்படாது. எனவே
எந்தவொரு தேர்தல் அரசியல் கட்சிக்கும்
முன்னுரிமை கொடுப்பதோ ஆதரவு கொடுப்பதோ
பயன் தராது. இதுவே எமது பொதுவான நிலைபாடு.

சில குறிப்பான நிலமைகளில், ஏதேனும் ஒரு
கட்சியை, தொடர்புடைய பிரச்சினையைப்
பொறுத்து ஆதரிக்க நேரலாம். அது சம்பந்தப்பட்ட
பிரச்சினையில் அந்தக் கட்சி எடுக்கும்
நிலைபாட்டைப் பொறுத்து அமையும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக