வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது!
ஆனந்த் தெல்தும்டே கூறுகிறார்!
இவர் அம்பேத்கரின் பேத்தியை மணந்தவர்!
======================================== 
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
1) பெரும் அறிவாளியும் கற்றறிந்த கல்வியாளரும்
ஆகிய டாக்டர் ஆனந்த் தெல் தும்டே அவர்கள்
அதிர்ச்சிகரமான கருத்துக்களைக் கூறி உள்ளார்.

2) அரசியல் துறையில் வழங்கப்படும் SC, ST இட
ஒதுக்கீடு நிறுத்தப்பட வேண்டும் என்றும்
ஆனந்த் தெல் தும்டே மேலும் கூறுகிறார்.

3) அரசியல் துறையில் சட்ட மன்ற நாடாளுமன்றத்
தொகுதிகளில் SC, ST சமூகத்திற்கு இட ஒதுக்கீடு
வழங்கப் படுகிறது. உதாரணமாக சிதம்பரம்
தகுதி SC தொகுதியாக உள்ளது. திருமாவளவன்
அத்தொகுதியின் எம்பியாக இருக்கிறார்.
இது போல  சட்டமன்ற நாடாளுமன்றத்
தொகுதிகளில் SC,STக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக்
கூடாது என்கிறார் ஆனந்த் தெல் தும்டே. இதை
திருமாவளவன் ஏற்றுக் கொள்வாரா?

4) எல்லாவற்றுக்கும் மேலாக, இட ஒதுக்கீட்டை
ஜாதி அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்றும்
கூறி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி  அளிக்கிறார்
ஆனந்த் தெல் தும்டே.
Teltumbde wants reservation to be
 "delinked from castes", saying, this should be done 
by "creating a separate schedule."

5) ஏற்கனவே இட ஒதுக்கீட்டின் பயனை அனுபவித்த
ஒரு குடும்பம் மீண்டும் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கக்
கூடாது என்கிறார் தெல் தும்டே.

6) டாக்டர் அம்பேத்கார் எழுதிய இந்திய அரசமைப்புச்
சட்டமானது சாதி முறையை ஆழமாக வேரூன்ற
வைக்கிறது என்கிறார் ஆனந்த் தெல் தும்டே.

7) இந்தியாவில் சம காலத்தில் உள்ள சாதிகள்
அனைத்துக்கும் ஊற்று மூலம் இந்திய அரசமைப்புச்
சட்டமே தவிர இந்து மத சாஸ்திரங்கள் அல்ல
என்று அடித்துக் கூறுகிறார் ஆனந்த் தெல் தும்டே.
(Teltumbde says, "The contemporary castes are sourced 
more from Constitution than any Hindu religious scriptures".) 

8) இன்னும் நிறையச் சொல்லி இருக்கிறார்
தெல் தும்டே.எழுதி மாளாது. படிப்பவர்களுக்கு
மாரடைப்பு வரக்கூடும். எனவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம்.  
           
9) தமது கருத்துக்களை விளக்கி "தலித்துகளின்
எதிர்காலம் குறித்த  தரிசனம்" (Envisioning Dalit Futures)
என்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்
தெல் தும்டே. இந்த அறிக்கை ஆங்கிலத்தில் உள்ளது.

10) மேற்கூறிய கருத்துக்கள் அடங்கிய ஒரு
புத்தகத்தையும் ஆனந்த் தெல் தும்டே ஆங்கிலத்தில்
எழுதி உள்ளார்.683 பக்கம் உள்ள புத்தகம். புத்தகத்தின்
பெயர்; Alternate Futures: India unshackled.

ஆங்கிலத்தில் நல்ல புலமை உள்ளவர்கள் தெல் தும்டே 
அவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும்.  

*********************************************        



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக