செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

சோதிடம் என்பது மிகவும் இழிந்த ஒன்று.
சோதிடந்தனை இகழ் என்கிறார் பாரதியார்
தமது புதிய ஆத்திசூடியில்.

க்ரஹ பலம் ஏமி க்ரஹ பலம் ஏமி
ஸ்ரீ ராமானுக்ரஹ பலமே பலமு என்கிறார்
தியாகையர் தமது கீர்த்தனை ஒன்றில்.

ராசிக்கட்டம் போடுகிற சோதிட மூடன், அக்கட்டத்தில்
யுரேனஸ் நெப்டியூன் இரண்டையும் விட்டு
விட்டான். வியாழனும் சனியும் இன்ன பிறவும்
மானுட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்
என்றால், யுரேனசும் நெப்டியூனும் பாதிப்பை
ஏற்படுத்தாதா? என்னே அறிவீனம்!

ராகு கேது இரண்டும் சோதிடத்திலும் 180 டிகிரி
தூரத்தில் இருப்பதாகக் கொள்ளப் படுவதால்
சோதிடமும் அறிவியல்பூர்வமானது என்று காட்ட
முயற்சி செய்தல் ஏற்புடையது அல்ல.
சோதிடம் பெரும் மூட நம்பிக்கையைக்
கொண்டது. அடித்து நொறுக்கப்பட .வேண்டியது.

சோதிடப் பித்துப்  பிடித்த ராஜாத்தி
அம்மாளுக்கும் துர்கா ஸ்டாலினுக்கும்
இன்ன பிற திராவிட முட்டாள்களுக்கும்
வக்காலத்து வாங்குகிற வேலை இங்கு
அனுமதிக்கப் பட மாட்டாது.
=================
போலிப் பகுத்தறிவுவாதத்தை வீழ்த்திய
கருத்துமுதல்வாதம் தன் முடிவைச் சந்திக்கும்!
*****************************************************
கடந்த நூறு ஆண்டுகளாக தமிழகத்தில்
நிலவி வந்த போலிப் பகுத்தறிவு வாதத்தை
கருத்துமுதல்வாதம் அடித்து நொறுக்கி விட்டது.
போலிப்பகுத்தறிவுவாதம் மண்ணைக் கவ்வியது.
கருத்துமுதல்வாதம் அதற்குக் கருமாதி
செய்து விட்டது.

கடவுள் இல்லை என்று கூறிய போலிப் பகுத்தறிவுவாதம்
தான் கூறியதை அறிவுபூர்வமாக நிரூபிக்கவும்
இல்லை. நிரூபிக்க முயற்சி செய்யவும் இல்லை.
அது ஒருவகையான பண்படாத vulgar materialismஆக
இருந்தது.

இப்போது களத்தில் கருத்துமுதல்வாதம் வெற்றிப்
பெருமிதத்துடன் நிற்கிறது. அதை எதிர்த்து
முறியடிக்க அறிவியல் வழிப்பட்ட போர்க்குணமிக்க பொருள்முதல்வாதத்தை
(scientific materialism) நியூட்டன் அறிவியல் மன்றம்
நிறுத்தி உள்ளது.

அண்மைக்கால வரலாற்றில் முதன் முறையாக
கருத்துமுதல்வாதம் தன்னால் ஒருபோதும்
முறியடிக்க முடியாத எதிரியுடன் மோதுகிறது.

அறிவியல் பொருள்முதல்வாதமானது கருத்து
முதல்வாதத்தை வீழ்த்தும்.

பழைய போலிப் பகுத்தறிவுவாதக் கும்பல்
இப்போது கருத்துமுதல்வாத முகாமில்     
இருந்து கொண்டு அறிவியல்
பொருள்முதல்வாதத்துடன் சண்டைக்கு
வருகின்றனர். இந்தச் சண்டையில் அவர்கள்
வீழ்ந்து மண்ணோடு மண்ணாக .ஆவது உறுதி.
************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக