திங்கள், 4 பிப்ரவரி, 2019

தகவல் உதவி: Subramaniyan Balachandran
வழக்கமாக ஈ.வே.ரா ஆதரவு மூடர்கள் ஹிந்து திருமணங்களை சிறுமைப்படுத்த கீழே உள்ளதைச் சொல்வார்கள். (இப்போது வெறும் தலைவரும் அதையே உளறி இருக்கிறார்).
----------------------------------------------------------------------------------
திருமண மந்திரங்கள்!
தமிழர்கள் புரியாத, அழிந்து போன சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்லி திருமணம் செய்கிறார்கள்.
இந்த மந்திரங்கள் மிகவும் ஆபாசமனவை. திருமணம் முடிந்து முதலிரவில் நடக்கின்ற விடயங்களையும் ஆபாசமாக மந்திரங்களில் சொல்வார்கள்.
திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்.
''சோமஹ ப்ரதமோ
விவேத கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.
நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.
அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.
அத்துடன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.
-----------------------------------------------------------------------
இதைப்பற்றி சமஸ்க்ருதம் அறிந்த நண்பரின் விளக்கம்:
மேலே தந்திருக்கும் திருமண மந்திரத்தில் சொற்பிழை, பொருட்பிழை இரண்டும் இருக்கிறது.
மந்திரங்களை மட்டந்தட்டுவதில் உள்ள உங்கள் ஆர்வம் புரிகிறது. அப்படி மட்டம் தட்டுவதற்காகவே நீங்கள் மேற்கோள் காட்டும் மந்திரங்களை முக்கால் மந்திரங்களாக எழுதமாமல் சொற்பிழை இல்லாத முழுமந்திரங்களாக எழுத முயற்சி செய்யுங்கள்.
மேலுள்ள மந்திரத்தின் சரியான பிரதி கீழே உள்ளது (உச்சரிக்கும் வசதி கருதி ஆங்கிலத்திலே தருகிறேன்)
Somah prathamo vivide
Gandharvo vivida uttarah
Trtiyo Agnistepatih
Turiyastemanusyajah.
Somo dadad gandharvaya
Gandharvo dadadagna; ye
Rayincapputramscadad
Agnirmahyamatho imam
- Rigveda, 10. 85, 40. 41.
இதன் பொருள்:
"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்
பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்
மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்
நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்"
இதன் உட்பொருள்:
1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது
2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை. ஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது
3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹோமோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது
இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.
----------------------------------------------------------------------------
என் கருத்து:
இந்த மந்திரத்தில் அக்கினி பதி என்று சொல்லப்படுவதால் சமஸ்க்ருதம் ஒழுங்காகத் தெரியாத மூடர்கள் அக்கினி பெண்ணின் கணவன் என்று மொழிபெயர்க்கிறார்கள். பதி என்பதற்கு அரசன், ஆட்சியாளர், காப்பாளர், தலைவர், கணவர் என்று ஐந்து பொருட்களுண்டு. இடத்துக்குத் தகுந்தவாறு பொருள் கொள்ள வேண்டும்.
இந்த மூடர்கள் ராஷ்ட்ரபதி (குடியரசுத் தலைவர்) என்பதைத் தேசத்தின் கணவர் என்று மொழிபெயர்க்கக் கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக