செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

ராகு கேது என்றால் என்ன?
-----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------
புராணங்களிலும் சோதிடத்திலும் ராகு கேது
என்னும் இரண்டுக்கும் பெரும் முக்கியத்துவம் உண்டு.
ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்று
கருதப் படுகின்றன. சாயா கிரகம் என்றால்
நிழல் கிரகம் என்று பொருள்.

ஆனால் உண்மையில் ராகுவும் கேதுவும் நிழல்களும் அல்ல.
நிழல் கிரகங்களும் அல்ல. பின் என்னதான் அவை?

சூரியனை பூமி சுற்றி வருகிறது. இப்படிச் சுற்றி வரும்
பாதை சற்றே ஒரு நீள்வட்டப் பாதை ஆகும்.
அதே போல சந்திரனும் பூமியைச் சுற்றி வருகிறது.
இந்தப் பாதையும் ஒரு நீள்வட்டப் பாதையே.

பூமியின் சுற்றுப்பாதையும் சந்திரனின் சுற்றுப்
பாதையும் முற்றிலும் சுயேச்சையானவை (independent).
எனினும் இவ்விரண்டு சுற்றுப்பாதைகளும்
ஒன்றையொன்று வெட்டிக்கொள்வது நிகழும்.
இந்த வெட்டுப் புள்ளிகளே (points of intersection)
ராகு கேது என்று அழைக்கப் படுகின்றன.

மேற்கத்திய வானியலில் இவை lunar nodes என்று
அழைக்கப் படுகின்றன. ராகு என்பது தலைப்பகுதி
ஆகும். கேது என்பது வால் பகுதி ஆகும். மேற்கத்திய
வானியலில் இவை முறையே ascending node. descending node
என்று அழைக்கப் படுகின்றன. ராகு கேது இவ்விரண்டும்
ஒன்றுக்கொன்று நேர் எதிராக 180 டிகிரி தூரத்தில்
இருக்கும்.

சீன வானியலில் இவை dragon's head என்றும் dragon's tail
என்றும் அழைக்கப் படுகின்றன.

உலகெங்கும் lunar nodes உண்டு. இந்தியாவில் அவை
ராகு கேது என்று பெயர் பெற்றுள்ளன.

ராகு கேது பெயர்ச்சியால் பலன்கள் ஏதேனும் உண்டா?
ஒரு மயிரும் கிடையாது. இந்தப் பதில் நிச்சயமாக
திராவிட அரசியல்வாதிகளை கோபம் கொள்ளச்
செய்யும்.தமிழ்நாட்டில் கடந்த 100 ஆண்டுகளாக
செழித்து வளர்ந்த போலிப் பகுத்தறிவுவாதிகள்
இப்பதிலால் சினம் கொள்ளலாம். என்றாலும்
ராகு கேது பெயர்ச்சியால் மானுட வாழ்வில்
எவ்விதப் பாதிப்பும் இல்லை என்பதே உண்மை.
***********************************************************    

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக