ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

நெகடிவ் மதிப்பெண் கூடாது என்ற
உயர்நீதிமன்றத் தீர்ப்பு மாணவர் நலனுக்கு எதிரானது!
இத்தீர்ப்பு மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழடிக்கும்!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
IIT JEE தேர்வுகளில் நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்
படுகிறது. நீட் தேர்விலும் கூடத்தான்.

IIT JEE (Main) தேர்வு எழுதிய ஒரு மாணவர்
நெகடிவ் மதிப்பெண் முறையால் தான்
பாதிக்கப் பட்டதாகக் கூறி சென்னை உயர்நீதி
மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
2013ல் தொடுக்கப்பட்ட வழக்கு இது. இதில் 
2019 ஜனவரியில் தீர்ப்பு வந்திருக்கிறது. நீதியரசர்
மகாதேவன் அவர்கள் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

நெகடிவ் மதிப்பெண் வழங்கக் கூடாது என்பதுதான்
தீர்ப்பு. நீதியரசர் மகாதேவன் தமது தீர்ப்பில்,
By awarding negative marks. the intuition of a student is crippled என்று
கூறியுள்ளார்.

நீதியரசர் மகாதேவன் தமது தீர்ப்பை நியாயப்
படுத்தி முன்வைத்த தர்க்கம் முற்றிலும்
அறிவியலுக்கு எதிரானது; பிற்போக்கானது.

Objective type தேர்வில் இருந்து நெகடிவ் மதிப்பெண்ணைப்
பிரிக்க முடியாது. நெகடிவ் மதிப்பெண்தான்
படித்துத் தேர்வு எழுதும்  மாணவர்களைப்
பாதுகாக்கிறது. அது ஒரு safety valve போலச்
செயல்படுகிறது. Descriptive type தேர்வில் நெகடிவ்
மதிப்பெண் வழங்கப் படுவதில்லை. அதற்கு
அங்கு தேவையில்லை.

Objective type தேர்வில் விடைகள் A, B, C, D என நான்கு
ஆப்ஷன்களைக் கொண்டிருக்கும். இந்நான்கில்
ஒன்று சரியான விடையாகும். ஒரு மாணவர்
கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் A என்ற
ஆப்ஷனையே விடையாக எழுதினாலும், நெகடிவ்
மதிப்பெண் இல்லாத நிலையில் அவர்
தேறிவிடுவார். எப்படி என்று பார்க்கலாம்.

1) 100 கேள்விகளைக் கொண்ட ஒரு தேர்வை எடுத்துக்
கொள்வோம்.
2) 100 சரியான விடைகளுக்கு 400 மதிப்பெண்
(100 x 4 = 400) என்றும் வைத்துக் கொள்வோம்.
3) தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் 80 என்றும் 
வைத்துக் கொள்வோம்.

100 சரியான விடைகள் A, B, C, D என்னும் நான்கு
ஆப்ஷன்களில் ஏறத்தாழ சம அளவில் பிரிந்திருக்கும்.
உதாரணமாக,
A ஆப்ஷனில் சரியான விடைகள் = 25
B  ஆப்ஷனில் சரியான விடைகள் = 22
C  ஆப்ஷனில் சரியான விடைகள் =  27
D ஆப்ஷனில் சரியான விடைகள் = 26
ஆக மொத்தம் = 100  

இப்போது, கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும்
ஒரு மாணவர்  A ஆப்ஷனை  எழுதுகிறார் என்று
வைத்துக் கொள்வோம். அவருக்கு என்ன மதிப்பெண்
கிடைக்கும்? A ஆப்ஷனில் 25 சரியான விடைகள்
உள்ளன. எனவே அவர் 100 மதிப்பெண்களை
(25 x 4 = 100) பெற்று விடுவார்.தேர்ச்சிக்குரிய .
மதிப்பெண் 80. நெகடிவ் மதிப்பெண் இல்லாததால்
100 மதிப்பெண் எடுத்த இவர் உறுதியாகத்
தேர்ச்சி அடைந்து விடுவார்.

அவர் மட்டுமல்ல, B ஆப்ஷனை  எழுதியவரும்
88 மதிப்பெண் ( 22 x 4 = 88) பெற்று தேர்ச்சி அடைந்து
விடுவார்.  இதே போல, C, D ஆப்ஷன்களை
எழுதியவர்களும் தேர்ச்சி பெற்று விடுவார்கள்.
இதன் விளைவாக தேர்வு என்பதே வெறும்
கேலிக்கூத்தாகி  விடும். இதைத் தடுக்கவே
நெகடிவ் மதிப்பெண் முறை கொண்டு வரப்பட்டது.

நெகடிவ் மதிப்பெண் வழங்கப் பட்டால் மேற்கூறிய
உதாரணத்தில் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

எல்லாக் கேள்விக்கும் A ஆப்ஷனை விடையாக
எழுதியவர் என்ன ஆகிறார்?
மொத்த விடைகள் = 100
எழுதப்பட்ட சரியான விடைகள் = 25
இதற்கான மதிப்பெண் = 25 x 4 = 100
தவறான விடைகள் = 75
தவறான விடைகளின் நெகடிவ் மதிப்பெண் = 75 x 1 =75.
எனவே நிகர மதிப்பெண் = 100 மைனஸ் 75 =25
இவர் தேர்ச்சி பெற மாட்டார். ஏனெனில் தேர்ச்சிக்குரிய
மதிப்பெண் 80 ஆகும்.

ஆக, நெகடிவ் மதிப்பெண் முறை இருப்பதால்தான்
படித்துத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதுகாக்கப்
படுகிறார்கள். கடும்போட்டி நிலவுகிற IIT, MBBS
இடங்களுக்கான தேர்வில் நெகடிவ் மதிப்பெண்
முறை இதனால்தான் தவிர்க்க இயலாத ஒன்றாக
இருந்து வருகிறது.

நீதியரசர் மகாதேவன் அவர்கள் இந்தப் புறநிலை
மெய்ம்மையை (objective reality) கணக்கில் கொள்ளத்
தவறியதன் மூலம் இமாலயத் தவறைச் செய்து
விட்டார். தேர்வாணையத்தின் வழக்கறிஞர்களும்
நீதியரசருக்கு அதை எடுத்துச் சொல்லத் தவறி
விட்டார்கள். காரணம்  இந்திய சட்டம் மற்றும்
நீதித்துறையானது அறிவியலில் இருந்து முற்றிலும்
துண்டித்துக் கொண்டு நிற்கிறது.

நீதியரசர்கள் மற்றும் வழக்கறிஞர்களில் அறிவியலோ
கணிதமோ கற்றவர்கள் மிக மிகக் கொஞ்சமே.
A ப்ளஸ் B whole square என்றால் என்ன என்றே
தெரியாதவர்களே வழக்கறிஞர்களாக உள்ளனர்.
Theory of probability, Permutations and Combinations ஆகிய
கணிதப் பாடங்களில் நல்ல புரிதல் உள்ள எந்த
வழக்கறிஞரும் இந்த வழக்கை எடுத்து நடத்த
மாட்டார்; எந்த நீதியரசரும் இப்படி ஒரு
தீர்ப்பை வழங்க மாட்டார்.

இந்தியா ஒரு அறிவியல் தற்குறித் தேசம்.
(scientifically illiterate country). இங்கு இப்படித்தான் நடக்கும்.
-------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
நெகடிவ் மதிப்பெண் தேவையே என்பதை
இக்கட்டுரையில் ஒரு உதாரணம் மூலம் விளக்கி
உள்ளோம். இதையே ஒரு தேற்றமாக (theorem)
முன்மொழிந்து அதை நியூட்டன் அறிவியல் மன்றம்
நிரூபிக்கும். நாங்கள் மட்டுமல்ல, கணிதத்தில்
புலமை உள்ள எவர் வேண்டுமானாலும்
நிரூபிப்பார்கள்.

In fact, நெகடிவ் மதிப்பெண் குறித்த ஒரு கணக்கு
BCA பாடத்தில் உண்டு, B.Sc கணிதத்திலும், MCA
நுழைவுத் தேர்விலும் உண்டு.
*****************************************************  




             






  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக