அத்வைதம்
பொருளாதார வாதம்
மார்க்சிய முகாம்களில் இருந்து பல்வேறு புதிய கோட்பாடுகளை முன்வைக்கின்றனர். இவர்களில் யேர்மனி பிராங்பேட் நடைமுறைக் கொள்கையாளர் கருத்தோட்டம் என இருபகுதியினரை வகைப்படுத்துகின்றார் பேராசிரியர் கோ. கேசவன். இவர்கள் எந்தவகையான குறைபாடுகளைக் கொண்டுள்ளனர் என்பதைப் பார்ப்போம்.
சமூக நிகழ்வுப் போக்கை விளங்கிக் கொள்வதில் அகநிலைவாதத்தை அதிகம் வலியுறுத்தல்.
சமூக நடைமுறையில், அகநலை மனோபாவக் கூறுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தல்.
இதனால் கலாச்சார மேல்தளத்தின் ஒப்பீட்டுத் தன்மையின் முக்கியத்துவத்தைப் பெரிதுபடுத்தல்.
விஞ்ஞானத்தையும் தத்துவஞானத்தையும் இணைப்பதற்குப் பதில், தத்துவத்திலிருந்து முற்றாக விஞ்ஞானத்தைப் பிரித்தெடுத்தல்.
பாட்டாளி வர்க்கம் புரட்சிகரத் தன்மையை இழந்துவிட்டதெனக் கருதி, அதன் தலைமையை மறுத்துரைத்தல். இந்தப் பிராங்பேட் வகையினர் “--மார்க்சீயத்தின் இரண்டு அடிப்படைக் கூறுகளை-பொருளியல் முக்கியத்துவத்தையும் (The importance and principle nature of material conditions.- Tom Bottom) அதன் முதன்மையையும் பாட்டாளி வர்க்க புரட்சிகர மறுத்துவிட்டனர்--” என்கின்றார் ரொம்.
‘‘--மார்க்சிய நடைமுறைக் கொள்கையாளர் பிரிவு (Theorists of Marxian praxis) ‘‘என்ற பகுதியினர் இயங்கியில், வரலாற்றுப் பொருள்முதல்வாத்தில் இருந்து பின்வருமாறு மாறுபடுகின்றனர்.
‘‘சமூகத்தில் இயக்கவியல் விதிகள் செயல்படுகின்றனவெனினும் மனிதன் தனக்;கு இருக்கும் சுதந்திரமான படைப்பாக்கல் திறனால் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடைமுறையின் மூலம் இயற்கையை மாற்றியமைக்க முடியும்.
ஏங்கெல்ஸ், மார்க்சிய இயங்கியலைச் சரியாக வாங்கிக் கொள்ளாது, இயற்கைக்கு அதை இயந்திரமயமாகப் பொருத்தினர். ( ஜோர்ஜ் லூக்காஸ்)
இயக்கவியல் விதிகளை மனிதனுக்கும் சமூகத்திற்கும் மட்டுமே பொருத்த வேண்டும், இந்த வரையறையைத் தாண்டினால் மார்க்சீயம் “சித்தபிரமையாளனின் கனவாகும்.”( சாத்ரே)
இருத்தலுக்கும் (Being) சிந்தனைக்கும் இடையிலான இயங்கியல் உறவை மறுத்து அதில் இருத்தலின் முதன்மைத் தன்மையை மறுத்து, அத்தகைய போக்கு மனித உணர்வின் ஆக்கபூர்வமான பங்களிப்பை மறுக்கிறது. (ஜோர்ஜ் லூக்காஸ்)
பிரதிபலிப்புக் கொள்கை என்பது பதினெட்டாம் நூற்றாண்டு இயந்திரவியல் பொருள் முதல் வாதத்தின் மறுபதிப்பு.
பொருளியல் முரண்பாடு மட்டும் அனைத்தும் தீர்மானிக்கும் சக்தியாக (Determining Factor) இல்லை, அதுவும் பல மேல்தள அம்சங்களால் தீர்மானிக்கப்படுகின்றன.” (பக்.197-198 கோ. கேசவன்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக