சில நுழைவுத் தேர்வுகளில் மட்டும்
நெகட்டிவ் மதிப்பெண் முறை ஏன் அவசியம்?
மாணவர்களைப் பாதுகாக்கவே நெகட்டிவ் மதிப்பெண்!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
1) நெகடிவ் மதிப்பெண் முறை ஏன் அவசியம் என்பதை
விளக்கி ஒரு கட்டுரை ஏற்கனவே எழுதி இருந்தோம்.
அதைப்படித்த வாசகர்கள் எழுப்பிய சில ஐயங்களுக்குப்
பதிலளிக்கவே இந்த இரண்டாவது கட்டுரை.
2) ஐஐடி ஜீ (IIT JEE) மற்றும் நீட் (NEET UG) தேர்வுகளில்
நெகடிவ் மதிப்பெண் வழங்கும் முறை இருக்கிறது.
3) அதே நேரத்தில் வேறு பல தேர்வுகளில் இந்த நெகட்டிவ்
மதிப்பெண் முறை இல்லை. ஏன்?
4) நெகடிவ் மதிப்பெண் முறை எங்கு தேவையோ
அங்கு இருக்கிறது. எங்கு தேவையில்லையோ
அங்கு இல்லை. அவ்வளவுதான். குளிர்ப்
பிரதேசங்களில் வாழ்பவர்கள் கம்பளி ஸ்வெட்டர்
அணிவார்கள். ஆனால் வெப்பப் பிரதேசங்களில்
உள்ளவர்கள் அணிவதில்லை. அது போன்றதுதான்
நெகட்டிவ் மதிப்பெண். எனவே அங்கு இல்லையே
இங்கு ஏன் இருக்கிறது என்று கேட்பது அபத்தம்.
5) பொறியியல் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்
தேர்வு எம்ஜியார் காலம் தொட்டு தமிழ்நாட்டில்
இருந்து வந்தது.2008ல் இது ரத்து செய்யப்பட்டது.
இத்தேர்வுக்கு TNPCEE (Tamil Nadu Professional Colleges
Entrance Exaination) என்று பெயர். இதில் நெகடிவ்
மதிப்பெண் கிடையாது.
6) ஆனால் நீட் தேர்வில் (NEET UG) நெகட்டிவ் மதிப்பெண்
உண்டு. ஏன்? TNPCEE, நீட் இரண்டுமே மருத்துவப்
படிப்புக்கான நுழைவுத் தேர்வுதான். ஆனால்
ஒன்றில் நெகடிவ் மதிப்பெண் கிடையாது;
இன்னொன்றில் உண்டு.ஏன்?
7) இதற்கு விடை காண இவ்விரண்டு தேர்வுகளையும்
பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். TNPCEE தேர்வில்
மொத்த மதிப்பெண் 100 ஆகும். ப்ளஸ் டூ தேர்வில்
உரிய பாடங்களில் எடுத்த 200 மதிப்பெண்களுடன்
இந்த 100ஐயும் சேர்த்து 300 மதிப்பெண் என்று
கணக்கில் கொள்ளப்பட்டு சேர்க்கை நிகழும்.
TNPCEE தேர்வில் 100க்கு 90க்கு மேல் மதிப்பெண்
எடுப்பது சாத்தியம்; சுலபம்.
9) ஆனால் நீட் தேர்வு அப்படி அல்ல. இதில் மொத்த
மதிப்பெண் 720. இதில் தேர்ச்சி பெற (to get QUALIFIED)
கடந்த ஆண்டான 2018ல் தேர்ச்சி மதிப்பெண்
(பாஸ் மார்க்) SC ST OBCக்கு 96 ஆகவும் (720க்கு 96)
பொதுப்பிரிவினருக்கு (OC) 119 ஆகவும் (720க்கு 119)
இருந்தது.
10) அதாவது 720க்கு 96 என்பது 13.33 சதம்.
720க்கு 119 என்பது 16.53 சதம். பாஸ் மார்க் என்றால்
40 எடுக்க வேண்டும் என்றெல்லாம் நீட் தேர்வில்
அவசியமில்லை. 13.33 சதம் மார்க் எடுத்தாலே ஒரு
பிற்பட்ட மாணவர் தேர்ச்சி பெற (QUALIFIED) முடியும்.
11) தேர்ச்சி மதிப்பெண் இவ்வளவு குறைவாக
இருப்பதும் லட்சக் கணக்கான மாணவர்கள்
720க்கு 200 சுலபமாக எடுக்க முடிகிற நிலை
இருப்பதும் நாம் கவனம் கொள்ள வேண்டிய
விஷயம் ஆகும்.
12) ஏனெனில் இதன் காரணமாகவே நீட் தேர்வில்
நெகட்டிவ் மதிப்பெண் முறை கொண்டு வரப்
பட்டுள்ளது. எப்படி என்று பார்ப்போம்.
13) நீட் தேர்வில் 180 கேள்விகள். ஒவ்வொரு
சரியான விடைக்கும் 4 மதிப்பெண் என்ற
வீதத்தில் மொத்தம் 720 மதிப்பெண். ஒவ்வொரு
தவறான விடைக்கும் 1 நெகடிவ் மதிப்பெண்
வழங்கப் படுகிறது. ஒரு கேள்விக்கான
விடையில் A, B, C, D என நான்கு ஆப்ஷன்கள்
இருக்கும். இந்த நான்கில் ஒன்று சரியான
விடையாகும்.
14) இரண்டு பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள் என்று
வைத்துக் கொள்வோம். ஒருவர் கஷ்டப்பட்டுப்
படித்து நன்கு தயாரித்து தேர்வை எழுதுகிறார்.
இன்னொருவர் தயாரிப்பே இல்லாமல்
விளையாட்டாக எழுதுகிறார்.
15) முதலாமவர் 180 கேள்விகளில் 50 கேள்விகளுக்கு
மட்டுமே பதிலளித்துள்ளார். அந்த 50க்கும் சரியான
விடையை எழுதி இருக்கிறார்.
16) விளையாட்டாக எழுதுபவரோ எல்லாக்
கேள்விகளுக்கும் A என்ற ஒரே ஆப்ஷனை
விடையாக எழுதுகிறார்.
16) தேர்வு முடிவு .வருகிறது. நெகட்டிவ் மதிப்பெண்
இல்லை என்று வைத்துக் கொள்வோம். இந்த
நிலையில், நன்றாகப் படித்து எழுதியவர் 200 மதிப்பெண்
பெறுகிறார் (50 x 4 = 200) . விளையாட்டாக எழுதியவரும்
200 மதிப்பெண் பெறுகிறார்.எப்படி? 50 கேள்விகளுக்கு
ஆப்ஷன் A என்பது சரியான விடையாக இருக்கிறது.
17) Theory of probabilityயின் இது சாத்தியம். சாத்தியம்
மட்டுமல்ல, சர்வ சாதாரணம். இதொன்றும்
அபூர்வமான நிகழ்வல்ல. நீட் தேர்வெழுதும்
13 லட்சம் மாணவர்களில் லட்சம் பேர் இவ்வாறு
ஒரே ஆப்ஷனை விடையாக எழுதி 200 மதிப்பெண்
பெறும் சாத்தியம் மிக மிக .அதிகம்.
18) இதை?த் தடுக்க வேண்டும் அல்லவா?
எப்படித் தடுப்பது? நெகடிவ் மதிப்பெண்
வழங்கும் முறை மூலமாகவே இதைத் தடுக்க
முடியும். இதனால்தான் நெகட்டிவ் மதிப்பெண்
முறை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
19) நெகட்டிவ் மதிப்பெண் முறை ,இருந்தால்,
விளையாட்டாக எழுதியவருக்கு என்ன மதிப்பெண்
கிடைக்கும்? அவருடைய 200 மதிப்பெண்ணில்
130 தவறான விடைகளுக்கான 130 மதிப்பெண்
கழிக்கப்பட்டு நிகரமாக 70 மதிப்பெண் மட்டுமே
கிடைக்கும்.
20) இந்தக் கட்டுரை மிகவும் எளிமையாக எழுதப்
பட்டுள்ளது. இருப்பினும் Theory of probability, Permutations
and Combinations பாடங்களில் புரிதல் இருந்தால்
மட்டுமே இக்கட்டுரை புரியும். இக்கட்டுரையில்
முன்வைக்கப்பட்ட எமது தியரியை எங்கும்
எப்போதும் நிரூபிக்க நியூட்டன் அறிவியல்
மன்றம் தயாராக .இருக்கிறது.
**********************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக