புதன், 6 பிப்ரவரி, 2019

மற்ற ஊழல்களில் இருந்து வேறுபட்டு
ஏழை எளிய மக்களைப் பாதித்த
மமதாவின் சாரதா சீட்டு நிதி ஊழல்!
உலக  வரலாற்றின் கயமை மிகுந்த ஊழல்!
----------------------------------------------------------------
1) போபர்ஸ் பீரங்கி ஊழலில் ராஜிவ் காந்தி
சாப்பிட்ட தொகை ரூ 66 கோடி மட்டுமே.
எனினும் நீதிமன்றத்தில் இந்த ஊழல்
நிரூபிக்கப் படவில்லை.

2) இந்த 66 கோடி யாருடைய பணம்? குப்பன்
சுப்பனுடைய பணம் அல்ல. யாரோ ஒரு வெளிநாட்டுக்
கம்பெனியின் பணம். ராஜிவ் காந்தி அந்தக்
கம்பெனியிடம் லஞ்சம் வாங்கி இருந்தாலும்,
அதனால் ஏழை எளிய மக்களுக்குப் பாதிப்பு இல்லை.
ஏனெனில் ஏழை எளிய மக்களின் பணத்தை
ராஜிவ் காந்தி கொள்ளை அடிக்கவில்லை

3) ஊதிப் பெருக்கப்பட்ட 2G ஊழலில், ஆ ராசாவும்
கனிமொழியும் ரூ 30,000 கோடி சாப்பிட்டதாக
CBI வழக்குத் தொடர்ந்தது. நீதிமன்றத்தில் இந்த
ஊழல் நிரூபிக்கப் படவில்லை.

4) ஆ ராசாவும் கனிமொழியும் CBI  கூறியபடி       
ரூ 30,000 கோடி சாப்பிட்டு இருந்தால், அது யாருடைய
பணம்? யாரோ தனியார் கம்பெனிகளின் பணம்.
நிச்சயம் ஏழை  எளிய மக்களின் பணம் அல்ல.

5) இப்போது சாரதா ஊழலுக்கு வருவோம். சாரதா
ஊழலில் மமதா பானர்ஜியும் அவரின் கூட்டாளிகளும்
சாப்பிட்ட தொகை ரூ 20,000 கோடி முதல் ரூ 30,000
கோடி வரை.

6)  மமதா  கொள்ளையடித்த பணம் யாருடைய பணம்?
அரசாங்கப் பணம் அல்ல. தனியார் முதலாளிகளின்
பணம் அல்ல. ஏழை எளியநடுத்தர மக்களின் பணம்.
குப்பன், சுப்பன், ,ராமசாமி, ,முத்துசாமி, துலுக்காணம்
ஆகியோரின் பணம்.

7) மகளுக்கு கல்யாணம் செய்வதற்காக, வாயைக்
கட்டி வயிற்றைக் கட்டி பெற்றோர்கள் சேமித்த
பணம். நகை வாங்குவதற்காக தாய்மார்கள்
சேமித்த பணம். கடை கண்ணி வைத்துப்
பிழைப்பதற்காக நடுத்தர மக்கள் சேமித்த பணம்.

8) ரிட்டயர்டு ஆன கிழங்கள் தங்களின் ஓய்வுகாலப்
பயனாகக்  கிராச்சுட்டி தொகையை சாரதா சீட்டு
நிதியில் முதலீடு செய்தால் கிடைக்கும் வட்டியில்
வாழ்க்கை நடத்தலாம் என்று முதலீடு செய்த பணம்.

9) இப்படி ஏழை எளிய நடுத்தர மக்களின் பணத்தை
கொள்ளையடித்த கொள்ளைக்காரிதான் மமதா.
அரசாங்கப் பணத்தை அவர் கொள்ளையடித்து
இருந்தால் ஏழை எளிய மக்கள் பாதிப்படையப்
போவதில்லை.      

10) மேற்கு வங்கம், அசாம், ஒடிஷா என்று பல மாநில
ஏழை எளிய மக்களின் பணத்தைக் கொள்ளை
அடித்தவர் மமதா.

11) ராஜிவ் காந்தி, ஆ ராசா, கனிமொழி ஆகியோர்
இப்படி மமதாவைப் போல, ஏழை எளிய
மக்களின் பணத்தைக் கொள்ளைஅடிக்கவில்லை.

12) எனவே மமதாவின் சாரதா ஊழல் உலக
வரலாற்றிலேயே மிகவும் கொடிய ஊழல்.
பணத்தை இழந்த பலரும் தற்கொலை செய்து
கொண்டனர். இப்படித் தற்கொலை செய்து
கொண்டவர்கள் 220 பேர்.

13) போபர்ஸ் பீரங்கி ஊழலால் யாரும் தற்கொலை
செய்து .கொள்ளவில்லை. 2G ஊழலால் ஏழை எளிய
மக்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை.
ஆனால் 220 பேரைக் கொன்ற கொலைகாரி மமதா.

14) உலக வரலாற்றிலேயே மிகவும் கொடிய
ஊழல் மமதாவின் சாரதா ஊழல். மமதாவின்
ஊழலை மன்னிக்கவே முடியாது.

15) மமதாவை ஆதரிப்பவன் கயவாளியே. 220 பேரின்
பிணத்துக்கு, மமதாவும் அவரை ஆதரிக்கும்
கயவர்களும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
******************************************************** 

தங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம்.
அதற்கு எந்த validityயும் கிடையாது. ஒரு வீட்டில்
புகுந்து ஒரு திருடன்

ஏற்படுத்தும் பாதிப்பே இங்கு முக்கியம்!
------------------------------------------------------------------------
மற்ற ஊழல்கள் ஏற்படுத்திய
பாதிப்புக்கும் சாரதா ஊழல் ஏற்படுத்திய
பாதிப்புக்கும் உள்ள வித்தியாசம் பாரதூரமானது.

ஒரு  உதாரணத்தைப் பார்ப்போம்.
மகளின் கல்யாணத்துக்காக ரூ 2 லட்சத்தை
சாரதாவில் முதலீடு செய்த ஒரு பெரியவரின்
பணம் அம்போ என்று போய்விட்டது.
மகளின் கல்யாணம் நின்று விட்டது.
அந்தத் தகப்பன் தற்கொலை செய்து கொண்டான்.

போபர்ஸ் ஊழலால் இது போல ஏதாவது
பாதிப்பு ஏற்பட்டதா? யாராவது தற்கொலை
செய்து கொண்டார்களா?
2G ஊழலால் இதே போல ஏதாவது
பாதிப்பு ஏற்பட்டதா? சொல்லுங்கள்.

சராசரி மனிதர்களின் வாழ்வில் பாதிப்பை
ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தைப்
பறித்துக் கொண்டது சாரதா ஊழல்.

குட்டி முதலாளித்துவச் சிந்தனை உடையவர்களால்
சாரதா ஊழலின் பாதிப்பை உணர முடியாது.
  

தமிழ்நாட்டில் குப்பன் சுப்பன்! மேற்கு வங்கத்தில்
பாஸ், சென், ரே. எல்லாம் ஒன்றுதான். நடுத்தர
வர்க்கம்தான்.


OK,OK. நடைபெற்ற ஊழல்களிலேயே ஆபத்து
மிகுந்த ஊழல் சாரதா ஊழல். மிகவம் கொடிய
கிரிமினல் தன்மை கொண்ட ஊழல் இது.
இது போன்ற ஊழல்கள் மீண்டும் நடக்கக் கூடாது.
அப்படி நடந்தால் மொத்த மக்களுமே தற்கொலை
செய்து கொண்டு சாகத்தான் வேண்டும்.

சாரதா ஊழல் என்பது லல்லு பிரசாத்தின்
மாட்டுத் தீவன ஊழல் போன்றதல்ல. மற்ற
ஊழல்களால் சாதாரண மனிதனுக்கு ஏற்பட்ட
பாதிப்பை QUANTIFY செய்ய இயலாது. ஆனால்
சாரதா ஊழலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு
மனிதனின் பாதிப்பையுயும் QUANTIFY செய்ய
முடியும். இதுதான் மற்ற ஊழலுக்கும்
மமதாவின் ஊழலுக்கும் இடையிலான வித்தியாசம். 

காங்கிரசின் கொள்கையும் இந்துத்துவமே என்று
நிரூபிக்கிறார் ம.பி காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்!
இறைச்சிக்காக மாட்டைக் கொன்றதாக 
மூன்று முஸ்லிம்களை NSA சட்டத்தில் கைது செய்தார்!
------------------------------------------------------------------------------------
1) மத்தியப் பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி
நடக்கிறது. பாஜக ஆட்சிக்கு சங்கு ஊதப்பட்டது.
கமல்நாத் முதல்வராக இருக்கிறார்.

2) மாட்டுக்கறி சாப்பிட்டதாக
மாட்டுக்கறி விற்றதாக
மாட்டைக் கொன்றதாக
பாஜக ஆட்சியில் பலரும் கைது செய்யப் பட்டார்கள்.

3) சோனியா மாட்டுக்கறி தின்பவர். எனவே காங்கிரஸ்
ஆட்சிக்கு வந்தால் நிம்மதியாக மாட்டுக் கறி
திங்கலாம். மாட்டுக்கறி விஷயத்திற்காக யாரையும்
காங்கிரஸ் ஆட்சியில் கைது செய்ய மாட்டார்கள்
என்று பலரும் மனப்பால் குடித்தார்கள்.

4) ஆனால் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.
காண்டுவா (Khandwa) என்ற ஊரில் இறைச்சிக்காக
மாட்டைக் கொன்றதாக மூன்று பேரைக் கைது
செய்தார் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்.

5) கைதான மூன்று பேரும் முஸ்லிம்கள். ஷக்கீல்,
ஆஸம், நதீம் (Shakeel, Azam, Nadeem) ஆகியோரே
அவர்கள்.

6) கைதான மூவர் மீதும் பசுவதைத் தடுப்புச்
சட்டத்தின் (Prevention of cow slaughter act) பல்வேறு
பிரிவுகளின் கீழ்  வழக்குத் தொடரப் பட்டுள்ளது.
அத்தோடு கூடவே  தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்
கீழும் அவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

7) பாஜக ஆட்சியின் போது, 2017ல் இதே நதீம் என்னும்
நபர் கைது செய்யப் பட்டார். ஆனால் அவர் ஜாமீனில்
வெளிவந்து விட்டார்.

8) அவர் ஜாமீனில் வந்து விடக் கூடாது என்பதற்காகவே
காங்கிரஸ் அரசு அவரை தேசியப் பாதுகாப்புச்
சட்டத்தில் (NSA = National Security Act) கைது செய்துள்ளது.

9) மாட்டுக்கறி விஷயத்தில் கைது செய்யப் பட்டால்
பாஜக ஆட்சியில் ஒரு சௌகரியம். ஜாமீனில்
வந்து விடலாம். காங்கிரஸ் ஆட்சியில் இந்த
சௌகரியமும் பறிபோய் விட்டது. NSAவில்
உள்ளே தள்ளுவார்கள். ஜாமீன் கிடையாது.
கம்பி எண்ண வேண்டியதுதான்.

10) தேர்தலில் பாஜக தோற்று இருக்கலாம். ஆனால்
பாஜகவின் கொள்கையான இந்துத்துவம்
தோற்கவில்லை என்பதைத்தான் இந்த நிகழ்வு
காட்டுகிறது.

11) மதவாதம் என்பதில் காங்கிரசும் பாஜகவும்
ஒரே கொள்கை உடைய கட்சிகளே என்பதை
இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

12) மதவாத பாஜகவை எதிர்க்க
மதச்சார்பற்ற காங்கிரசை ஆதரிக்க வேண்டும்
என்று முழங்கிய போலி முற்போக்குகள் எங்கே
போனார்கள்?

13) காங்கிரசும் பாஜகவும் ஆளும் வர்க்கக் கட்சிகளே!
இரண்டுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது!
காங்கிரஸ் என்பது பாஜகவுக்கு மாற்று அல்ல என்ற
உண்மையை குட்டி முதலாளித்துவ முட்டாள்கள்
உணருவது எப்போது?
**********************************************************    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக