வியாழன், 1 ஆகஸ்ட், 2019

மாதவன் நாயர் மயில்சாமி அண்ணாதுரை
பெருமையுடன் வழங்கியது சந்திரயான்-1 2008ல்.
சிவன், வனிதா முத்தையா பெருமையுடன் வழங்குவது
சந்திரயான்-2 (2019).

சந்திராயன்-1 2008ல் அனுப்பப்பட்ட போது
மாதவன் நாயர் இஸ்ரோ தலைவராக இருந்தார்.
மயில்சாமி அண்ணாதுரை திட்ட இயக்குனராக
(project director) இருந்தார்.

22019ல் சந்திரயான்-2 அனுப்பப் படும்போது டாக்டர் சிவன்
இஸ்ரோ தலைவராகவும் வனிதா முத்தையா திட்ட
இயக்குனராகவும் இருக்கின்றனர்.   

Project Director = திட்ட இயக்குனர்
Programme Director = திட்ட இயக்குனர்
Mission Director = திட்ட இயக்குனர்.
தமிழில் ஒரே சொல்லால் குழப்பம்!


வனிதா முத்தையா திட்ட இயக்குனராக உள்ளார் என்று
ஒரு இடத்திலும், ரித்து கரிதால் திட்ட இயக்குனராக
உள்ளார் என்று வேறொரு இடத்திலும் ஊடகச்
செய்தியாளர் எழுதி அச்சாகி வெளிவருகிறது.
இச்செய்தியைப் படிக்கும் மாணவனுக்கு ஒரே
குழப்பம்! யார் திட்ட இயக்குனர் என்று!

2, 3 ஆகியவை உரிய பொருளைத் தரவில்லை.
mission என்பது வெறும் பணி (ஒர்க்) அல்ல. அது
ஒரு குறிக்கோளைக் கொண்டது.

இந்தச் சொற்கள் எல்லாம் (project director, program director etc)
2008ல் சந்திரயான்-1 காலத்திலேயே புழங்கிய
சொற்கள். இவற்றுக்கு இன்றுவரை உரிய தமிழ்ச்சொற்கள்
இல்லை. அவை வழக்கில் வந்திருக்க வேண்டும். ஆனால்
வரவில்லை.
 

வீடியோவைப் பார்! அல்லது வெளியேறு!
---------------------------------------------------------
இந்த வீடியோவைப் பாருங்கள்.
இது சந்திரயான்-2 எப்படி விண்ணில் ஏறி
நிலவைச் சென்று அடைகிறது என்பதை
விளக்கும் ஒரு அனிமேஷன் வீடியோ.

இது இஸ்ரோவின் அதிகாரபூர்வ வீடியோ.
பாருங்கள். குழந்தைகள் மாணவர்களைப்
பார்க்க வையுங்கள்!

இதுபோன்ற வீடியோக்களைப் பார்க்கத்  தவறினால்
குழந்தைகள் "ரூட்டுத்தல" ஆகிவிடக் கூடும்.
பாருங்கள்!
  

தமிழில் சொல் இல்லாமல் படும் துன்பம்!
அறிவியலில் தமிழ் இல்லை!
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
2008ல் முதல் சந்திரயானின் காலத்திலேயே இந்தச்
சொற்கள் புழக்கத்துக்கு வந்து விட்டன. அதாவது
project director, programme director, mission director ஆகிய
சொற்கள் தமிழ்ச் சூழலில் புழக்கத்துக்கு வந்து
11 ஆண்டுகள் ஆகின்றன.

அதன் பிறகு 2013ல் மங்கள்யான் வந்தபோதும் இதே
சொற்கள் மீண்டும் வலம் வந்தன. இப்போது
சந்திரயான்-2விலும் இதே சொற்கள்.

என்றாலும் இந்த ஆங்கிலச் சொற்களுக்கு இணையான
தமிழ்ச் சொற்கள் இல்லை. இன்று வரை இல்லை.
இதைப்பற்றிக் கவலைப்படவும் நாதி இல்லை.

நான் கவலைப்படக் காரணம் என்னவெனில்,
சந்திரயான் பற்றி ஒரு கட்டுரை எழுதி அறிவியல் ஒளிக்கு
அனுப்பி உள்ளேன். அதில் மிஷன் இயக்குனர் என்றே
எழுதி உள்ளேன். உரிய தமிழ்ச் சொல் இல்லை.

இந்தப் பத்தாண்டுகளில் அறிவியல் சொல்வங்கி
உருவாக்கப்பட்டு, அதில் இந்தச் சொற்களுக்கான
தமிழ்ச் சொற்கள் சேமிக்கப்பட்டு இருக்க வேண்டும்
அல்லவா? இல்லையே!  

சொல்வங்கி இல்லை! ஏன் இல்லை?
ஏனெனில் உற்பத்தியில் தமிழ் இல்லை.
தமிழ் நம் சமூகத்தின் பொருள் உற்பத்திக்கான
மொழியாக இல்லை. (Tamil is not a language of production).

அப்படியானால் தமிழ்நாட்டில் (அல்லது இந்தியாவில்)
எது உற்பத்தி மொழியாக இருக்கிறது? 
ஆங்கிலமே உற்பத்தி மொழியாக இருக்கிறது.

சொற்கள் எங்கிருந்து உருவாகின்றன? சொற்கள்
சமூகத்தின் பொருள் உற்பத்தியில் இருந்தே உருவாகின்றன.
எனவே ஆங்கிலத்தில் கணக்கற்ற சொற்கள் உருவாகி
உள்ளன.

PROJECT DIRECTOR என்றால் சந்திரயான்-2வின் ஒட்டு
மொத்தமான Projectன் இயக்குனர் என்று பொருள்.
ஏவுகணையை சோதிப்பது, கவுண்ட் டவுன் செய்வது,
ஏவுகணையை விண்ணில் ஏற்றுவது, சந்திரயான்-2வை
உரிய வேலைகளைச் செய்ய வைப்பது, தரவுகளைப்
பெறுவது, தரவுகளைப் பகுப்பாய்வு செய்வது என்னும்
அனைத்தும் project directorன் பணி.

Mission director என்பவர் mission க்கு மட்டுமே பொறுப்பானவர்.
மொத்த ப்ராஜக்டிலும் மிஷன் என்பது ஒரு பகுதியே.
மிஷன் என்பது எது? சந்திரயான்-2 நிலவைச் சுற்றுவது,
தரையிறங்குவது, நிலவில் நடப்பது ஆகியவையே மிஷன்
ஆகும். Mission directorக்கு இந்த மிஷன் மட்டுமே பொறுப்பு.

Programme director என்பவர் திட்டத்தின் நிகழ்ச்சி நிரலுக்குப்
பொறுப்பானவர். இன்னின்ன தேதியில் இன்னின்ன
வேலைகள் நடக்க வேண்டும் என்பதே வேலைத்திட்டம்
(programme) ஆகும்.

ஆங்கிலச் சொற்கள் சுய விளக்கச் சொற்களாக உள்ளன.
(self explanatory). தமிழ் மொழிபெயர்ப்பும் அப்படியே
இருக்க வேண்டும். அதாவது அகராதியைப்
புரட்டாமலேயே  பொருளறியக்கூடிய சொற்கள் இவை.

தமிழார்வலர்கள், தமிழறிஞர்கள் என்போர் கடந்த
10 ஆண்டுகளாக மேற்கூறிய ஆங்கிலச் சொற்களுக்கு
உரிய தமிழ்ச் சொற்களை உருவாக்காமல் இருந்தனர்.
அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. தமிழானது
உற்பத்தியில் இல்லாத நிலையில் தமிழார்வலர்கள்
என்ன செய்ய இயலும்?

காலப்போக்கில் தமிழ் வெறும் பண்பாட்டு
அடையாளமாகவே எஞ்சும். பண்பாட்டு அடையாளம்
என்றால் என்ன? தமிழை வைத்துக் கொண்டு
பொண்டாட்டியைக் கொஞ்சலாம்; குழந்தையைக்
கொஞ்சலாம். அவ்வளவுதான்! அறிவியலில் உற்பத்தியில்
தமிழைப் பயன்படுத்த இயலாது. இதைத்தான் ஐ நா சபை
சொல்லி உள்ளது.
****************************************

யாரும் எதுவும் செய்யவில்லை.
அறிவியல் சொல்வங்கி உருவாக்கப் படவே இல்லை.
சொல் உருவாக்கம் இயல்பாக நடக்க வேண்டிய ஒன்று.
ஒரு மொழியானது உற்பத்தில் இருந்தால், சொல்லுருவாக்கம்
இயல்பாக நடக்கும். யாரும் முயற்சி மேற்கொள்ளத்
தேவையில்லை.

ஜெயலலிதா நான்காம் தமிழாக அறிவியல் தமிழ்
என்கிறார். ஒன்றும் நடக்கவில்லை.

தமிழில் எழுதுவதையே கைவிடலாமா என்று
ஒரு நினைப்பு ஓடுகிறது. தமிழில் எழுதினால்
நெஞ்சுவலி வருகிறது. 

சந்திரயான்-2ஐ  விவரிக்க  ஆங்கிலத்தில் 100 சொற்கள்
இருந்தால், தமிழில் ஒன்றிரண்டு கூட இல்லை.
இது குறித்து எவருக்கும் கவலையும் இல்லை.

நன்றறி வாரில் கயவர் திருவுடையார்
நெஞ்சத்து அவலம் இலர்.
  
 

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக