திங்கள், 26 ஆகஸ்ட், 2019

சிதம்பரத்தைப் பற்றி ராம் ஜெத்மலானி!
கறுப்புப் பணத்தின் தந்தை யார்?
------------------------------------------------------------
சண்டே கார்டியன் என்று ஓர் ஆங்கில ஏடு. இதில்
ராம் ஜெத்மலானி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.
ப சிதம்பரம் பற்றியது அக்கட்டுரை. ஆங்கிலக் கட்டுரை.

கட்டுரையின் தலைப்பு தமிழில்:
கறுப்புப் பணத்தின் தந்தை, மூல ஆசான், நண்பர்
எல்லாம் சிதம்பரமே!

மொழிபெயர்க்க இயலாது. ஆங்கிலம் தெரிந்த
அன்பர்கள் படித்துப் பயன் பெறலாம்.

ராம் ஜெத்மலானி இந்தியாவின் நம்பர் ஒன் வழக்கறிஞர்.
இந்திரா கொலை வழக்கில் பல்பீர் சிங்கிற்கு
விடுதலை வாங்கித் தந்தவர்.

சாந்தன் முருகன் பேரறிவாளனுக்கு மரண தண்டனை
நிறைவேற்றப்பட இருந்த நிலையில் சென்னை
உயர்நீதிமன்றத்துக்கு வைகோவின் அழைப்பின் பேரில்
வந்து வாதாடி மரண தண்டனையை ரத்து செய்தவர்.

அதே நேரத்தில் பிரேமானந்தா சாமியாருக்காகவும்
வாதாடியவர்.

படியுங்கள்!  படிக்க வேண்டும்!
*******************************************

நிதி அமைச்சர் பிராணாப்  முகர்ஜி அலுவலகத்தில்
ஒட்டுக் கேட்டது யார்?
--------------------------------------------------------------------------------
இது ஒரு முக்கியமான சம்பவம்.
சம்பவம் நடந்தது 2011ல். அப்போது மன்மோகன்
பிரதமர். பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சர்.
உள்துறை அமைச்சர் ப சிதம்பரம்.

சம்பவம் நடந்தது ஜூன் 2011ல். என்ன சம்பவம்?
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகங்களில்
நிதி அமைச்சகத்தின் அறைகளில் ஓட்டுக்கு கேட்கும்
கருவிகள் பொருத்தப் பட்டிருந்தன. இது கண்டு
பிடிக்கப் பட்டது.

யார் பொருத்தியது? விடை பிரணாப் முகர்ஜிக்குத்
தெரியும்.

ஓட்டுக்கு கேட்கும் கருவிகளைக் கண்டு பிடித்ததுமே
முகர்ஜி என்ன செய்திருக்க வேண்டும்? உள்துறை
அமைச்சர் சிதம்பரத்திடம் சொல்லி இருக்க வேண்டும்.
CBI இருக்கிறது. ஒட்டுக்கேட்டது யார் என்று
கண்டு பிடிக்கும் வேலை CBIயின் வேலை.

அனால் முகர்ஜி சிதம்பரத்திடம் பொறுப்பை
ஒப்படைக்கவில்லை. CBIயையும் அழைக்கவில்லை.
மாறாக CBDT மூலம் ஒரு தனியார் துப்பறியும்
நிறுவனத்தை அமர்த்தி எல்லாக் கருவிகளையும்
பிடுங்கி எறிந்தார்.

இந்த விஷயம் நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்
பட்டது. நாட்டுக்கே தெரிந்து விட்டது.

பாகிஸ்தானாக இருக்குமோ? ஒரு மயிரும் இல்லை.
இதற்கும் பாகிஸ்தான் சீனாவுக்கும் எந்த
சம்பந்தமும் கிடையாது.

மூளை இருந்தால், IQ > 110 இருந்தால், சிந்தித்துப்
பாருங்கள். விடை கிடைக்கும்.

விடையைக் கண்டறிய இயலாது என்றால்,
இந்த விஷயம் குறித்து அன்று ஆங்கில ஏடுகளில்
வெளியான எல்லாச் செய்திகளையும் படியுங்கள்.
ஒரு பிடி கிடைக்கும்.   

பிராணாப் முகர்ஜி ஏன் சிதம்பரத்திடம்
சொல்ல வில்லை?
CBIஐ கையில் வைத்திருக்கும் சிதம்பரத்தை
விடவா ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம்
முகர்ஜிக்குப் பயன்படும்? யோசியுங்கள்!
**********************************************
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக