ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

இந்தியாவின் ரூபாய் நோட்டடிப்பு எந்திரங்களை
பாகிஸ்தானுக்கு விற்ற சிதம்பரத்தின் செயல்!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
10 வருஷத்துக்கு முன்பு, 2009ல் நடந்த ஒரு நிகழ்வு.
நடந்தது மன்மோகன் ஆட்சி. .

இந்திய நேபாள எல்லையில் உள்ள 70 வங்கிகளில்
CBI சோதனை நடத்தியது. இச்சோதனையில்
பல நூறு கோடி ரூபாய் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்
பட்டன. இந்தக் கள்ள நோட்டுகள் எங்கிருந்து
கிடைத்தன என்று கேட்டதற்கு, வங்கி அதிகாரிகள்
ரிசர்வ் வங்கியில் இருந்தே இக்கள்ள நோட்டுக்களைத்
தாங்கள் பெற்றதாகக் கூறினர். 

அப்போது நிதியமைச்சராக இருந்தவர் பிராணாப் முகர்ஜி.
அவரிடம் சிபிஐ அதிகாரிகள் இத்தகவலைக் கூறியதுமே
பிரணாப் முகர்ஜி அதிர்ந்தார்.

பிரணாப் முகர்ஜியின் உத்தரவின் பேரில், ரிசர்வ்
வங்கியின் கிட்டங்கியை (RBI godown) சோதனை
இட்டது CBI. அப்போது 70 வங்கிகளிலும் நடந்த
ரெய்டின்போது கிடைத்த அதே வகை கள்ள
நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் கிட்டங்கியில் கிடைத்தன.
இவை அனைத்தும் பாகிஸ்தானின் ISI உளவு ஸ்தாபனம்
தயாரித்து இந்தியாவுக்குள் இறக்கிய கள்ள நோட்டுக்கள்
என்ற உண்மை தெரிய வந்தது.

தெடர்ந்து புலனாய்வு செய்தபோது, கள்ள நோட்டுக்களின்
சிதம்பர ரகசியத்தை அறிந்து கொண்டார் பிரணாப் முகர்ஜி.
அவருக்கு முன்பு நிதியமைச்சராக இருந்தவர் சிதம்பரமே.

பிரணாப் முகர்ஜியின் நிதியமைச்சகத்தில் நடைபெறும்
புலனாய்வுகள் பற்றி அறிந்த சிதம்பரம் விஷயம் கைமீறிப்
போகக்கூடாது என்பதற்காக, பிராணாப் முகர்ஜியின்
அறையிலும் நிதியமைச்சகத்தின் முக்கிய அறைகளிலும்
ஒட்டுக் கேட்கும் கருவிகளைப் பொருத்தினார்.

கள்ள நோட்டுக்கள் எப்படி இந்தியாவின் ரிசர்வ் வங்கி
மூலமாகவே நாட்டில் புழக்கத்துக்கு விடப்பட்டன?
இந்தச் செய்தி மக்களுக்குத் தெரிய வந்தால் என்ன ஆகும்?
பொருளாதாரம் முற்றிலும் சீர்குலையும். எனவே
செய்திகள் முற்றிலும் ஊடகங்களுக்குச் செல்லாமல்
தடுக்கப் பட்டன.

 கள்ள நோட்டுகள் மிகவும் எளிதாக எப்படி பாகிஸ்தானின்
உளவு ஸ்தாபனமான ISIஆல் அச்சடிக்கப் பட்டன?
இதற்குக் காரணம் இந்தியாவின் ரூபாய் நோட்டு அடிக்கும்
இயந்திரத்தை பாகிஸ்தான் விலைக்கு வாங்கியதுதான்.

பாகிஸ்தான் எப்படி விலைக்கு வாங்கியது? இந்திய அரசே
அதை  விலைக்கு விற்றது. ஆம், ப சிதம்பரம் நிதி அமைச்சராக
இருந்தபோது, இந்தியாவின் பழைய நோட்டடிப்பு
இயந்திரங்கள் (worn out machines) பாகிஸ்தானுக்கு விற்கப்
பட்டன. இதுதான் சிதம்பரத்தின் தேசபக்தி. இதனால்தான்
கள்ள நோட்டுக்கள் பெருமளவுக்கு இந்தியாவில் குவிந்தன.
***********************************************************   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக