புதன், 7 ஆகஸ்ட், 2019

காணாமல் போன எதிர்க் கட்சிகள்!
ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை?
ஏன் ஊரை ஏமாற்றுகிறீர்கள்?
------------------------------------------------------
மக்களவையில் காஷ்மீரின் ஷரத்து 370 நீக்கம் பற்றிய
தீர்மானம் ஆகஸ்ட் 6 அன்று ஓட்டுக்கு விடப்பட்டது.
ஆதரவு = 351
எதிர்ப்பு = 72
ஓட்டளிக்க மறுப்பு =1
மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 542. (வேலூர் நீங்கலாக)
அவையில் இருந்தவர்கள் = 424 (சபாநாயகர் நீங்கலாக)
இந்த 424 போக,  மீதி 118 எம்பிக்கள் எங்கே?
மீதி அனைவரும் வெளிநடப்பு.
(ஒரு சிலர் அவைக்கு வரவில்லை,ABSENT)  

எதிர்ப்பில் உறுதியாக இருந்த கட்சிகள் என்று நாம்
நம்புகிற கட்சிகள்:
காங்கிரஸ் = 52, திமுக = 23, CPI =2, CPM =3, விசிக =1,
IUML = 3, மஜ்லிஸ் (ஓவாய்சி கட்சி) =2, ஆக மொத்தம் = 86.
ஆனால் 72 பேர்தான்  வாக்களித்துள்ளனர்.
மீதி 14 பேர் ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை?

இதற்கு திமுக பதில் சொல்லுமா? ஸ்டாலின் பதில்
சொல்வாரா? காங்கிரஸ் கட்சி பதில் சொல்லுமா?

மாயாவதி கட்சியில் 10 எம்பிக்கள் உள்ளனர்.
அவர்கள் இந்த விஷயத்தில் மோடி அரசை ஆதரித்தனர்.
அடுத்து புரட்சி வீராங்கனை மமதா 22 எம்பிக்களை
வைத்துள்ளார். அவர் ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை?

சமாஜவாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் 5 எம்பிக்களை
வைத்துள்ளார். அவர்கள் ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை?
ஏன் வெளிநடப்பு நாடகம்?

பாஜகவுக்கு 303 இடங்கள் மட்டுமே கிடைத்தன. அதில்
சபாநாயகர் போக, மீதி 302 இடங்கள் மட்டுமே.
ஆனால் தீர்மானத்துக்கு ஆதரவாக 351 வாக்குகள்
கிடைத்துள்ளன.

அடுத்து இரண்டாவதாக காஷ்மீரை இரண்டு யூனியன்
பிரதேசங்களாக ஆக்கும் தீர்மானம் ஓட்டுக்கு
விடப்பட்டது.
ஆதரவு = 370
எதிர்ப்பு = 70
முந்திய தீர்மானத்தை விட இதற்கு ஆதரவு 19 அதிகம்.
எதிர்ப்பும் குறைவு (2 குறைவு).

இந்தக் கட்சிகளுக்கு ஓட்டுப்போட்ட மக்களும்
ஆதரித்துப் பிரச்சாரம் செய்தவர்களும் இதற்குப்
பதில் சொல்ல வேண்டும் அல்லவா?
பதில் சொல்ல மாட்டார்கள்! கயவர்கள்!!

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பார் யாம்கண்ட(து) இல்.  
*********************************************   . 






இரண்டும் ஒன்றுதான்!
வீரவநல்லூர் = வீரை
இளஞ்சேட்சென்னி என்பது புனைபெயர்.
இலக்கியப் பக்கங்களுக்காக மட்டும் இப்புனைபெயர்.

கரிகால் பெருவளத்தானின் தந்தை இளஞ்சேட்சென்னி.
தமிழ் இலக்கியங்கள் இவனை உருவப் பஃறேர்
இளஞ்சேட்சென்னி  என்று குறிப்பிடும்.
பல்+ தேர் +பஃறேர். தேர்களை விரைந்து ஓட்டுவதில்
வல்லவன் என்று பெயர் பெற்றவன் இந்த மன்னன்.

சோழர் வரலாற்றைப் படிக்கும்போது இவனைப் பற்றிப்
படிக்க நேர்ந்தது. அப்போது இளஞ்சேட்சென்னி
என்ற அரசனும் அவன் பெயரும் என்னைக்
கவர்ந்தன. அதை நான் வரித்துக் கொண்டேன்.    
--------------------------------------------------------------------------
VIDUTHALAI AANATHUM

விடுதலை ஆனதும் காஷ்மீர் சென்று
அங்கேயே தங்க சசிகலா முடிவு!
காஷ்மீரில் பங்களா ஆப்பிள் தோட்டம்
வாங்க சசியின் மேனேஜர் ஸ்ரீநகர் விரைந்தார்!  பயணம்

மொழிகள் இரண்டு வகை. 1. செவ்வியல் மொழி
(CLASSICAL) 2. நவீன மொழி (MODERN)
தமிழும் சமஸ்கிருதமும் செம்மொழி அந்தஸ்து
பெற்றவை. அவை நவீன மொழிகள் அல்ல.

இந்தி, வங்காளி, மலையாளம், மராத்தி போன்றவை
நவீன இந்திய மொழிகள் ஆகும். அவை பட்டியலில்
உள்ளன.
 

கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டம்
மட்டுமே உள்ளது. இருமொழித் திட்டத்தை
கல்விக் கொள்கை ஏற்கவில்லை.

ஆனாலும் மத்திய அரசு இதை வற்புறுத்துவதில்லை.
அதனால்தான் தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கை
செயல்பாட்டில் இருக்கிறது. மூன்றாவது மொழியைக்
கற்றே  ஆக வேண்டும் என்று மத்திய அரசு
வற்புறுத்துவதில்லை.

மப்டி மகமது சையதுவின் மகளும்
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபாவின்
சகோதரியுமான ருபையா சென்னை
சேத்துப்பட்டில் வசிக்கிறார்.

ருபையாவின் கணவர் ஷரீப் அகமது கார் விற்பனைத்
தொழில் செய்து வருகிறார். உயர் ரக கார்கள் பென்ஸ் கார்,
BMW கார், ஆடி கார் etc. 

கடந்த 10 ஆண்டுகளாக ருபையா இங்கு வசித்து
வருகிறார். அவரின் கணவர் சென்னை வேளச்சேரியில்
ஆட்டோமொபைல் ஷோரூம் (கார் விற்பனை நிலையம்)
நடத்தி வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின்
அவர்களுடன் மிக நெருங்கிய நட்பு உண்டு.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக