புதன், 14 ஆகஸ்ட், 2019

இது நிலாவை நோக்கிய பயணம்.
அடுத்து நிலவின் ORBITஐ அடைய வேண்டும்.
அதன் பிறகு தொடர்ந்து ORBIT REDUCTION செயல்பாடுகள்
நடக்கும். இறுதியில் 100 x 100 என்ற அளவிலான
நிலவின் orbitஐ அடைய வேண்டும். அதாவது
பெரிசெலின் 100 கிமீ என்றும் அபோசெலின் 100 கிமீ
என்றும் இருக்கும். இதுவே ideal orbit. இந்த orbitல்
ஓராண்டு காலம் சந்திரயான்-2 நிலவைச் சுற்றும்.    

கடவுள் இல்லை என்றுமனிதன் நிரூபிக்கிறான்.



சிவன் என்ன சொல்கிறார்?
-----------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------
நிலவுப் பயன்கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவையும் புலவியும் காதலர்க்(கு) அளித்து அங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி
கோலங்கொண்ட மாதவி அன்றியும்
என்கிறார் இளங்கோ அடிகள்.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்
எம்குன்றும் கொண்டார் யாம்எந்தையும் இலமே
என்கின்ற்னர் பாரி மகளிர்.

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
என்கிறார் வள்ளுவர்.

காற்று வெளியிடைக் கண்ணம்மா நிந்தன்
காதலை எண்ணிக் களிக்கிறேன் அமு
தூற்றினை ஒத்த இதழ்களும் நில
வூறித் ததும்பும் விழிகளும்.....
என்கிறார் பாரதியார்.

இவை யாவும் இலக்கியம் ஆகும். இவை தமிழின்
இலக்கியத்தின் மேன்மையைப் பறைசாற்றுபவை.
இவை இருக்கட்டும்!

இன்று நிலாவை கவிஞர்களிடம் இருந்து
விஞ்ஞானிகள் பறித்துக் கொண்டோம்.
எனவே இன்று சிவன் என்ன சொல்கிறார்
என்பதே முக்கியம்!

எந்த சிவன்?
"தோடுடைய செவியன் விடையேறி ஓர்
தூவெண் மதி சூடி"ய சிவனா?
இல்லை, இல்லை!
இவர் டாக்டர் கே சிவன், இஸ்ரோவின் தலைவர்.

இன்று சிவன் சொல்கிறார். Lunar Transfer Trajectoryஐ
சந்திரயான்-2 அடைந்து விட்டது என்கிறார்.
இன்றைய நிலையில் இதுவே முக்கியமானது.
பாரி மகளிர் சொன்னதை விட
டாக்டர் கே சிவன் சொல்வதே முக்கியமானது.

இளங்கோ அடிகள் சொல்வதை விட,
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் இளங்கோ சொல்வதே
முக்கியமானது. உணர்வீர் தமிழ் மாந்தரே!

சந்திரயான்-2 பற்றிய அறிவியலை அறிந்திடுங்கள்.
சரி, அறிவியல் வராது, கணக்கு வராது என்பீர்களானால்
மேற்கொற்றிய புறநானூறு சிலம்பு ஆகிய தண்டமிழ்
இலக்கியங்களையேனும் அறிந்திடுங்கள்.

இரண்டும் தெரியாது; இரண்டில் ஒன்றையேனும்
அறிந்திட மாட்டேன் என்பீர்களேயானால்
நீங்கள்தான் நிலக்குப்பொறை; அதாவது
பூமிக்குப் பாரம்!
***************************************       

சந்திரயான்!
என்னை வேற்று நினைவின்றித் தேற்றியே
இங்கோர் விண்ணவனாகப் புரியுமே!

இஸ்ரோ நடத்தும் குயிஸ் நிகழ்ச்சி!
உடனே பங்கேற்று வெல்லுங்கள்!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
இஸ்ரோ நடத்தும் வினாடிவினா நிகழ்ச்சியில்
பங்கேற்று விட்டீர்களா மாணவர்களே?

ஆகஸ்ட் 20 தேதியில் குயிஸ் முடிவடைகிறது!
முந்துங்கள்!

பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை
இஸ்ரோ நடத்தும் குயிஸ் நிகழ்ச்சியில்
பங்கேற்கச் சொல்லுங்கள்!

இந்த வினாடிவினா நிகாஹ்ச்சியில் பங்கேற்கும்
குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வதில்லை!
எனவே உங்களின் குழந்தைகளின் எதிர்கால
வாழ்வை உறுதி செய்யுங்கள்!
அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரியுங்கள்!

பரிசு:
வெற்றி பெரும் மாணவர்கள் சந்திரயான்-2 நிலவில்
இறங்கும் நிகழ்வை இந்திய பிரதமர் மோடி அவர்களுடன்
இஸ்ரோவில் கண்டு களிக்கலாம்
*************************************************
  



 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக