வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

விண்ணுலகில் இருக்கும் கலைஞருக்கு மகிழ்ச்சி!
CBI கஸ்டடியில் ப சிதம்பரம்!
----------------------------------------------------------------------------

பனி கொட்டும் மாதத்தில்-உன்
வெட்கம் ஆனந்தம்!

சிதம்பரத்தின் கையைப் பிடித்துக்கொண்டு
கெஞ்சினார் கலைஞர்! 2G வழக்கு வேகம் எடுத்த
நேரம்! 2011 சட்ட மன்றத் தேர்தல் நேரம்!

UNDUE FAVOUR எதையும் கலைஞர் கேட்கவில்லை.
தயாளு அம்மாளின் மூப்பு கருதியும், கனிமொழியின்
நலன் கருதியும் அவர்களிடம் மென்மையாக நடந்து
கொள்ளுங்கள் என்று வேண்டினார்.

சிதம்பரம் கேட்டாரா? இல்லை!
"இவர்களை எல்லாம் கைது செய்து ஜெயிலில்
போட்டால்தான் திருந்துவார்கள், நாஸ்டி பீப்பிள்" 
என்றுதான் சிதம்பரம் நினைத்தார்.

கனிமொழியைக் கைது செய்யாமலே விசாரிக்கலாம்
என்பது சட்ட பூர்வமான ஒரு சலுகை. It is the prerogative
of the IO. ஆனால் கைது பண்ணி உள்ளே போடு
என்று உத்தரவிட்டவர் சிதம்பரம்.

இவ்வளவுக்கும் காங்கிரசும் திமுகவும் கூட்டணியில்
இருக்கின்றன. இடப்பகிர்வு நடந்து கொண்டிருக்கிறது.
கலைஞரை மிரட்டியே 63 இடங்களைப்  பெற்று
விட்டார் சிதம்பரம். இதைத்தான் பின்னாளில்
63 நாயன்மார்கள் என்று குறிப்பிட்டார் கலைஞர்.

கலைஞர் மிகவும் நொந்து போனார். சிதம்பரத்தின்
மீது மிகவும் மனக்கசப்பு ஏற்பட்டது அவருக்கு.
எனவேதான் கூட்டணியை முறித்தார் அவர்.

தற்போது சிதம்பரத்தை கைது செய்து விட்டது CBI.
கஸ்டடியும் எடுத்து விட்டது CBI என்ற செய்தியை
விண்ணுலகில் இருந்து அறிந்து கொண்ட கலைஞர்
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார்.

ஆ ராசா ஆனந்த லஹரியில்!
கனிமொழி ஆனந்த லஹரியில்!
ராஜாத்தி அம்மாள் ஆனந்த லஹரியில்!
தளபதி ஆனந்த லஹரி!
பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அனந்த லஹரி!

சுதர்சன நாச்சியப்பன் ஆனந்த லஹரி!
வட இந்தியக் காங்கிரஸ் தலைவர்களில் பலர்
ஆனந்த லஹரி!

ஆனால் இங்கு சில திமுகஆதரவு அசடுகளுக்கு மட்டும்
ஒரு இழவும் புரியவில்லை!
அவர்களின் மண்டையில் நல்ல விஷயம் எதுவும்
ஏற மாட்டேன் என்கிறது!
-----------------------------------------------------------------------------
பின்குறிப்பு: விண்ணுலகில் கலைஞர் என்பது ஒரு
கவைக்காக மட்டுமே; உண்மையில் விண்ணுலகு
எதுவும் இல்லை.
(கவை= நெல்லையில் புழங்கும் பழகு தமிழ்ச்சொல்)
****************************************************

கவை = தேவை.
ஒரு கணக்கில் தேவையான ஒன்றை x என்று
வைத்துக் கொள்கிறோம். இப்படி வைப்பது ஒரு தேவை.
அதாவது கவை.

Avoid your petty bourgeois absurdity. We state anything
and everything in unequivocal terms with authority and
aplomb. Our posts are prescribed for those with IQ > 110.
Not meant for any Tom Dick and Harry.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக