ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

நவீன அரசுகளின் ராணுவப் போர்த்தந்திரத்தில்
(military strategy) MAD policy என்று ஒன்று உள்ளது.
MAD = Mutually Assured Destruction. பரஸ்பரம் சர்வ நாசம்.

எனவே எந்த ஒரு அணுஆயுத நாடும் ஒரு போரில்
அணுஆயுதங்களைப் பிரயோகிக்காது. இது சுமார்
100 ஆண்டுகளுக்காவது செயல்பாட்டில் இருக்கும்.
அதுவரை மாறாது.

சரியான விடை!
-------------------------
சதுரங்கம் ஒரு மனப்பயிற்சிக் கூடம் என்று
கூறியவர் லெனின்.

நிரந்தரமாக மஞ்சள் துண்டை அணிந்தவர்
யாரோ அவர்தான் நிரந்தர ஜோசியப் பித்தர்.
உலகில் யாரும் இப்படி ஜோசியப்படி
மஞ்சள் துண்டை நிரந்தரமாக அணிந்ததில்லை. 

உலகின் அணுஆயுத நாடுகள் எட்டு!
1. அமெரிக்கா 2. ரஷ்யா 3. பிரிட்டன் 4. பிரான்சு
5. சீனா 6. இந்தியா 7. பாகிஸ்தான் 8.வடகொரியா.

மேற்கூறிய 8 நாடுகளும் அணுஆயுத வெடிப்புச்
சோதனையை நிகழ்த்திய நாடுகள்; மேலும்
தங்களிடம் அணுஆயுதம் உள்ளதை ஒப்புக்கொண்டு
பகிரங்கமாகப் பிரகடனம் செய்த நாடுகள்.
இவை எட்டையும் "பிரகடன நாடுகள்" (declared nations)
என்று அணுஆயுதத்துறை அழைக்கிறது.

இஸ்ரேல் அணுஆயுத வெடிப்புச் சோதனையை
எங்கு, எப்போது, எப்படி நிகழ்த்தியது என்று
எவருக்கும் தெரியாது. தான் அணுஆயுத வெடிப்புச்
சோதனையை நிகழ்த்தியதாகவோ, தன்னிடம்
அணுஆயுதம் இருப்பதாகவோ ஒருபோதும்
இஸ்ரேல் ஒப்புக் கொண்டதும் கிடையாது.

இஸ்ரேலின் அணுஆயுத வெடிப்புச் சோதனையை
அம்பலப் படுத்த முயன்றதாலேயே ஜான் கென்னடி
படுகொலை செய்யப்பட்டார் என்றும் ஒரு கதை உண்டு.
பிரகடன நாடுகளை (declared nations) மட்டுமே அணுஆயுத
நாடுகளாக ஐநா சபையும் பிற அணுஆயுத நாடுகளும்
ஏற்றுக் கொண்டுள்ளன. எனவே இஸ்ரேல் அணுஆயுத
நாடு அல்ல.

1960களில் இருந்த சர்வதேச அரசியல் நிலவரப்படி
இஸ்ரேலிடம் அணுஆயுதம் இருந்திருக்குமானால் அதை
அம்பலப்படுத்துவது மிகப்பெரிய விஷயமே. ஒருவரின்
top secretஐ இன்னொருவர் அறிந்திருப்பது பெரும்
அக்கறைக்குரிய விஷயமே. இர்விங் வாலஸ் எழுதிய
The Plot நாவலைப் படிப்பது சில விஷயங்களைப்
புரிந்திட உதவும். The Plot is a fiction though.
           

AANGILAM

ஆங்கிலப் புலமை இல்லாத திமுவின் சரவணன்!
இந்தியாவுக்கு எதிராகப் பேசும் மனநிலை
சரவணனுக்கு இல்லை!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
திமுக ஒரு காலத்தில் Once upon a time, Long long ago
பிரிவினை பேசிய கட்சிதான். அப்போதுகூட
அந்தரங்க சுத்தியுடன் அது பிரிவினை பேசவில்லை.
பிரிவினை பேசினால் ஓட்டு வாங்கலாம் என்பதால்
பிரிவினை பேசிய கட்சி அது.

இந்திய சீனப்போரை ஒட்டி ஜவஹர்லால் நேரு 1962ல்
பிரிவினைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
மறு நிமிடமே திமுக தன் திராவிடநாடு கோரிக்கையைக்
கைவிட்டது.

இந்தச் சட்டத்தை நேரு அவர்கள் இன்னமும் முன்பே
கொண்டு வந்திருந்தால், அப்போதே திமுக தன்
பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு இருக்கும்.
திமுக பேசிய பிரிவினை ஒரு போலிப்பிரிவினையே.

IQ குன்றிய சரவணன்!
----------------------------------
திமுக செய்தித் தொடர்பாளர் திரு சரவணன் ரிபப்ளிக்
டிவி நடத்திய விவாத நிகழ்ச்சி ஒன்றில் கடந்த வாரம்
பங்கேற்றார். அப்போது அவர் இந்திய இறையாண்மைக்கு
எதிராகப் பேசினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்
படுகிறது.

சரவணன் பேசியது என்ன? இதோ சரவணனே கூறுகிறார்:
“Kashmir was never an integral part of India” என்று பேசியதாக 
சரவணன் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். இதைத்
தொடர்ந்து காஷ்மீரின் வரலாற்றைக் கூற முற்படும்போது,
தான் இப்படிக் கூறியதாகவும் அதில் தவறில்லை என்றும்
திரு சரவணன் கூறுகிறார்.

சரவணன் பேசியது தவறு என்பதை விட, அதை
முட்டாள்தனமானது என்றே கருத வேண்டும்.
சரவணன் பயன்படுத்திய was, never போன்ற சொற்கள்
அவர் மனதில் நினைத்த கருத்தை வெளியிட ஏதுவான
சொற்கள் அல்ல.
"Kashmir was not an integral part of India once" என்பதே அவர்
சொல்ல நினைத்தது. ஆனால் அதற்கு முரணாக ஒன்றைச்
சொல்லி விட்டார். காரணம் என்ன? He was inarticulate to that
extent.

கேம்பிரிட்ஜில் படித்த அர்னாப் கோஸ்வாமியின் ஆங்கிலப்
புலமையுடன் இவரின் ஆங்கிலத்தை ஒப்பிட இயலாது.
Mr Saravanan is deficient in his expression. He does not enjoy command
over the content of the debate. Further he is clearly inarticulate. His command
over the English is pitifully weak.

எனவே காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக
இருந்ததில்லை என்று அவர் சொல்லி விட்டார். இது
உண்மைக்குப் புறம்பானது.

எனினும் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர் சரவணன்
என்று கருத இயலாது. பின் எதைக் கருத வேண்டும்?
அவர் IQ குன்றியவர் என்பதைக் கருத வேண்டும்.  

இந்தியா ஒரு அறிவியல் தற்குறி தேசம். இங்கு IQ
குன்றியவர்களே மக்கள் தொகையில் 98 சத்தம் பேர்..
சிந்தனைக் குள்ளர்களை அதிகம் கொண்ட நாடு
இந்தியா. ஒவ்வொரு சிந்தனைக் குள்ளரையும்
தேசத் துரோகியாகக் கருதினால், அதற்கு முடிவே
இல்லாமல் போய்விடும்.

திரு சரவணன் திமுகவைச் சேர்ந்தவர். திமுக என்பது
இந்திய ஆளும் வர்க்கப் பெருமுதலாளிகளின் கட்சி.
எனவே இந்திய இறையாண்மை மீது முழுமையான
நம்பிக்கை  கொண்ட கட்சியே திமுக.

எனவே அத்தகைய திமுகவைச் சேர்ந்த சரவணன்
எப்படி இந்தியாவுக்கு எதிராக இருப்பார்? மிக
மென்மையான ஓர் அடக்குமுறையை ஏவிப்
பார்த்தாலே, திமுக இந்தியாவுக்கு எதிரானது அல்ல
என்ற உண்மை புலப்பட்டு விடும்.

ஒரு கோடிப்பேரைக் கொண்ட இயக்கம் திமுக. இதன்
சராசரி IQ என்ன என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
ஆராய்ந்து வைத்துள்ளது. Our calculations reveal that their
mean IQ is clearly less than 100.

திரு சரவணன் இந்தியாவுக்கு எதிரானவர் அல்லர்.
அவர் தேசத் துரோகியும் அல்லர். அவர் ஒரு
சப் மீடியாக்கர் (sub mediocre). ஒரு மீடியாக்கர் என்று
வரையறுப்பதற்கான தகுதியைக் கூட இன்னும்
பெற்றிராத ஒருவரைப்போய் தேசத்துரோகி
என்று கூறுவது இமாலயத் தவறு.
************************************************ 

சட்டம் படித்தவர் என்றால் பெரிய அறிவுஜீவி என்று
பொருள் அல்ல. இந்தியாவில் sub standard talents மட்டுமே
சட்டத் துறைக்கு வருகிறார்கள். மதிப்பெண்
குறைந்தவர்களும் IQ குறைந்தவர்களுமே சட்டம்
படிக்கிறார்கள்.

அடுத்து சட்டம் படித்து விட்டார் என்பதாலேயே
ஒருவர் ஆங்கிலப் புலமை பெற்று விட்டார்
என்ற உங்களின் கருத்து பாமரத்தனமான கருத்து.

அவர் IQ குன்றியவர் என்று நான் அடித்துக் கூறி உள்ளேன்.
இதன் பொருள் அவரின் IQ < 100 என்பதாகும்.
அவரை ஓர் சப் மீடியாக்கர் என்று அடித்துக் கூறுகிறேன்.
He is not even a mediocre என்று தெளிவுபடக் கூறுகிறேன்.
இதற்கு அப்புறமும் அவர் பெரிய நிபுணர் என்று
நீங்கள் கருதுவீர்கள் என்றால், அது பரிதாபத்துக்கு
உரியது.

அவர் ஒரு சிந்தனைக் குள்ளர் என்றும் அடித்துக் கூறுகிறேன்.
இல்லை இல்லை அவர் மாபெரும் சிந்தனையாளர் என்று
நீங்கள் கருதுவீர்கள் என்றால், அது பரிதாபத்துக்கு
உரியது.
   
யார் யாருக்கு என்ன IQ என்பதைக் கணித்துச் சொல்லும்
உரிமையும் அருகதையும் கொண்ட ஒரே அமைப்பு
நியூட்டன் அறிவியல் மன்றமே. எனவே அவரின் IQ < 100
என்று நாங்கள் சொன்ன பின்னால், அது கேள்விக்கு
அப்பாற்பட்டது.

He is inarticulate. His command over English is very poor.
தற்போது இந்தியாவுக்கு எதிராக நான் எதையும்
பேசவில்லை என்று கூறி இருக்கிறார். இதைத்தான்
நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக