செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு
தேசமாகக் கருதுகிறது (India as a nation).பாரத் ஹமாரா
தேஷ் ஹை! இந்தியக் குடிமக்கள் அனைவரையும்
இந்தியர்கள் என்னும் ஒரு தேசிய இனமாகக் கருதுகிறது
(Indian nationality). இந்திய அரசமைப்புச் சட்டத்தின்
அடித்தளம், ஆதார சுருதி எல்லாமே இதுதான்.இந்த ஓர்மை
இல்லாவிட்டால், அடுத்துச் சொல்லப்படும் விஷயங்களைப்
புரிந்து கொள்ள இயலாது; பிறழ்புரிதல் நிகழும்.

maruthupaandiyan மருதுபாண்டியன்


இவர் சட்டவாதச் சாக்கடையில் விழுகிறார்.
இவர் சட்டம் பயின்றவரோ சட்ட நிபுணரோ அல்லர்.
அரசியல் தீர்வு என்ன என்பதை இவர் கூறினால் நல்லது.

அரசமைப்புச் சட்டமே ஒரு மோசடி என்கிற
உண்மையை மறைத்து விட்டு, அரசமைப்புச்
சட்டத்துக்கு எதிரானது என்று புலம்புவது
குட்டி முதலாளித்துவமே.

இந்தக் கட்டுரையை எழுதும் நான் ஒரு இந்தியனா என்றால்,
நிச்சயமாக இந்தியன்தான். ஆனால் நான் இந்தியன் என்ற
தேசிய இனத்தைச் சேர்ந்தவன் அல்ல. நான் தமிழன்;
தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்தவன். தமிழன், மலையாளி,
தெலுங்கன், வங்காளி, காஷ்மீரி, பஞ்சாபி போன்ற பல
தேசிய இனங்கள் ஒன்றிணைந்து இருக்கும் இந்தியா என்னும்
ஒன்றியத்தில் நான் வாழ்கிறேன். இந்தியா என் நாடு (country).

பாரத நாடு பார்க்கெலாம் திலகம்
நீர் அதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்..... (பாரதியார்)

இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டையும் என்
தாய்நாடாகக் கற்பனை செய்துகூட என்னால்
பார்க்க இயலாது. 1970களில் இந்தியப் புரட்சிக்குத்
தலைமையேற்று நடத்திய தோழர் சாரு மஜும்தார்
தமது எழுத்துக்களில் எப்போதும் "நம் அன்புக்குரிய
இந்தியா" (our beloved India) என்றுதான் எழுதுவார்.
அவரின் எழுத்துக்களை என் இளம் வயதில் இருந்தே
மொழிபெயர்த்தவன் என்ற முறையில் "நம் அன்புக்குரிய
இந்தியா" என்ற வாசகம் பசுமரத்தாணியாய் மனதில்
பதிந்து கிடக்கிறது.

"Breathes there the man
 With soul so dead
Who never to himself hath said,
"This is my own native land?"       

   

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக