புதன், 7 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் அறிந்து கொள்ள வேண்டிய சில!
(All you need to know series)
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
2019 நாடாளுமன்றத் தேர்தலும் அதன் முடிவுகளும்
இன்னும் நினைவில் பசுமையாகவே இருக்கின்றன.
காஷ்மீர் தேர்தல் முடிவுகளைப் பற்றியே இங்கு
குறிப்பிடுகிறோம்.

காஷ்மீரில் மொத்தம் 6 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
(இந்தியாவில் மொத்தம் 543). ஆறு தொகுதிகள் வருமாறு:-
1) காஷ்மீர் பள்ளத்தாக்கு = 3 தொகுதிகள்
(ஸ்ரீநகர், பாராமுல்லா, அனந்த்நாக்)
2) ஜம்மு : 2 தொகுதிகள்;
ஜம்மு, உதம்பூர்.
3) லடாக்: 1 தொகுதி (லடாக்)
************
காஷ்மீர் என்றாலே அதை மூன்று வேறுபட்ட பிரதேசங்களின்
தொகுப்பாகவே பார்க்க வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்குப்
பகுதி, ஜம்மு பகுதி, லடாக் பகுதி.Geographically and demographically
different regions. Demography என்ற சொல்லின் பொருள் அறிந்து
கொள்வது இங்கு முக்கியமானது.

பள்ளத்தாக்கில் முஸ்லிம்களும், ஜம்முவில் இந்துக்களும்,
லடாக்கில் புத்தர்களும் (பிரதானமாக) வாழ்ந்து
வருகின்றனர். மேலும் விவரம் அறிய உரிய GK booksஐ
படிக்கவும்.
********
2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணி!
----------------------------------------------------------
அ) மெஹ்பூபா அம்மையாரின் PDP கட்சி தனித்துப் போட்டி.
ஆ) பாஜக தனித்துப் போட்டி
இ) பரூக் அப்துல்லாவின் கட்சியான NCயுடன் காங்கிரஸ்
மூன்று தொகுதிகளில் மட்டும் கூட்டணி. மீதி மூன்றில்
ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டி.
மற்றும் உதிரிகள், சுயேச்சைகள், சுயேச்சைகளுக்கு
ஆதரவளிக்கும் கட்சிகள் இன்ன பிற.(Refer GK books)

குறைவான வாக்குப் பதிவுக்குப் புகழ் பெற்றது காஷ்மீர்
மாநிலம்.கடந்த 2019 தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்
வாக்குப் பதிவு = 29.39 சதவீதம் மட்டுமே.

2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்:
-------------------------------------------------------
அ) மொத்த இடங்கள் =6
ஆ)  பாஜக வெற்றி =3 (ஜம்மு, உதம்பூர், லடாக்)
இ) பரூக் அப்துலாவின் NC வெற்றி =3.
(அனந்தனாக், பாராமுல்லா, ஸ்ரீநகர்)
ஈ) காங்கிரஸ் = வழக்கம் போல பூஜ்யம்.

பள்ளத்தாக்கில் உள்ள 3 இடங்களை NC கட்சியும்,
ஜம்முவின் 2 , லடாக்கில் 1 என  மூன்று இடங்களை
பாஜகவும் கைப்பற்றின.

மெஹ்பூபாவின் PDP கட்சி போட்டியிட்ட அத்தனை
இடங்களிலும் தோற்றது. routed என்று ஆங்கிலத்தில்
சொல்வார்கள். rout, routed சொற்களின் பொருள் அறிக.
முதலமைச்சராக இருந்த மெஹ்பூபா, அனந்த்நாக் தொகுதியில் தோற்றுப்போனார். படுமோசமாகத் தோற்று 3ஆம் இடம்
வந்தார். இத்தொகுதியில் NC கட்சி வென்றது. காங்கிரஸ் 2ஆம்
இடம் வந்தது.
************
தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அம்சம்
-------------------------------------------------------------
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவோம்;
70ஆவது ஷரத்து மற்றும் 35A ஷரத்து ஆகியவற்றை
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீக்குவோம் என்று
வெளிப்படையாக மாநிலம் முழுவதும் பிரச்சாரம்
செய்தது பாஜக கட்சி.

இதுவே இந்தத் தேர்தலின் முக்கிய அம்சமாக இருந்தது.
2014 தேர்தலில் பாஜக 23 சதம் வாக்குகளைப் பெற்றது.
அதற்கு முன்பு பாஜகவுக்கு 13 சதம் வாக்கு மட்டுமே
கிடைத்திருந்தது.   

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை PDP கட்சியுடன் இணைந்து
ஆண்ட கட்சி என்ற அடிப்படையிலும், தேர்தல் பிரச்சாரத்தில்
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவோம் என்று
வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்து, மக்களுக்கு எங்கள்
கொள்கையை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி
அளித்ததன் அடிப்படையிலும் சிறப்பு அந்தஸ்தை நீக்கி
உள்ளோம் என்கிறது பாஜக.
***********************************************************


ஜம்மு காஷ்மீரிலும் லடாக்கிலும்
நிலவுடைமைச் சமூக அமைப்புதான்
(feudal society) நிலவுகிறது. அங்கு முதலாளித்துவம்
ஒரு trace level கூட இல்லை.


தேசிய இனங்களை ஒழிக்க முடியாது.
அவை நீடித்து நிலவும். ஆனால் இந்தியன் என்னும்
தேசிய இன  ஓர்மையை அதிகரிப்பதில் இந்திய அரசு
கவனம் செலுத்தும். இந்தியன் என்னும் ஓர்மை
இருக்கிறதா என்றால் இருக்கிறது; அதன் இருப்பை
மறுக்க இயலாது

இந்தியன் என்னும் தேசிய இனம் ஒரு சமூகக்
கட்டுமானம் (a social construct). அது தமிழ் தேசியஇனம்
என்பது போல் வரலாற்றுத்தன்மையும் மரபும்
ethnic தன்மையும் உடையது அல்ல. எனவே இயற்கையானது அல்ல.


வாசகர்கள் கவனிக்க!
-----------------------------------
TET தேர்வு, VAO தேர்வு, TNPSC தேர்வு, UPSC தேர்வு,
வங்கித் தேர்வு,ரயில்வே தேர்வு என்றெல்லாம்
போட்டித் தேர்வு எழுதுவோர் எமது கட்டுரைகளைப்
படிக்க வேண்டும்; படித்து வருகிறார்கள் என்பதை
அறிவேன். படித்துப் பயனடைந்த பலர் எம்மிடம்
கூறியுள்ளனர்.

மிகவும் சரிபார்த்தே பின்பே இவை எழுதப் படுகின்றன.
விளையாட்டுப் போல படித்து விடலாம். தேநீர் குடித்து
விட்டு, படிக்க வேண்டும் என்று புத்தகத்தை எடுத்து
வைத்துக் கொண்டு சிரமப்பட்டுப் படிக்கத் தேவை
இல்லாமல், மூச்சு விடுவது போல இயல்பாகப்
படிக்க இது உதவும். படித்தபின் இவற்றை
உங்கள் மூளையின் மெமரியில் UPLOAD பண்ணுங்கள்.
காலத்தை மீறி நிற்கும்.

   
   



       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக