செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து!   மருதுபாண்டியன் ரகுபதி திருப்பூர் குணா
அமித்ஷாவுக்கு ஆதரவு!
--------------------------------------
1) என்ஜிஓ புரட்சியாளர் அரவிந்த் கெஜ்ரிவால்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை வரவேற்கிறார்.
அமித்ஷாவை ஆதரிக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

2) பகுஜன் கட்சித் தலைவர் மாயாவதி வரவேற்கிறார்.
பகுஜன் கட்சி ஆதரித்து வாக்களிப்பு.

3) ஒடிஷாவின் பிஜு ஜனதா தளம் வரவேற்பு.
ஆதரித்து வாக்களிப்பு.

4) தெலுங்கானாவில் TRS கட்சி வரவேற்பு.
மகிழ்ச்சித் துள்ளலில் சந்திரசேகர ராவ்.
ஆதரித்து வாக்களிப்பு!

5) ஆந்திராவின் YSR காங்கிரஸ் முதல்வர்
ஜெகன்மோகன் ரெட்டி வரவேற்பு.
ஆதரித்து வாக்களிப்பு!

டாக்டர் அம்பேத்கார் கூறியது:-
"இந்தியா உங்களின் எல்லைகளைப் பாதுகாக்க
வேண்டும்; உங்கள் பகுதியில் சாலைகள் அமைத்துத் 
தர வேண்டும்; உங்களுக்கு உணவு தானியங்களை
அளிக்க வேண்டும்; மேலும் இந்தியாவுக்குச் சமமான
அந்தஸ்து உங்களுக்கு வேண்டும் என்றெல்லாம்
நீங்கள் விரும்புகிறீர்கள். இந்திய அரசாங்கத்துக்குக்
குறைந்த அளவிலான அதிகாரங்களே இருக்க வேண்டும்
என்றும் காஷ்மீரில் இந்தியாவுக்கு எந்த உரிமையும் இருக்கக்
கூடாது என்றும் சொல்கிறீர்கள்.

இந்த ஆலோசனைக்கு ஒப்புதல் தெரிவிப்பது இந்தியாவுக்கு
துரோகம் இழைப்பதாகும். இந்தியாவின் சட்ட அமைச்சராக
ஒருபோதும் இதைச் செய்ய மாட்டேன்."  
ஷேக் அப்துல்லாவிடம் டாக்டர் அம்பேத்கார்.

எனவே நேருவின் நண்பரும், முன்பு காஷ்மீரின்
பிரதமராக இருந்தவரும் (ஆம், அப்போது பிரதமர்
பதவிதான் காஷ்மீருக்கு)  ஆகிய கோபால்சாமி
ஐயங்காரை அழைத்து இந்த 370ஆவது பிரிவை
எழுதச் சொன்னார் நேரு. இது வரலாறு.    

இது இந்துத்துவ அஜெண்டாதான். பாஜக என்பது
நெருக்கடி நிலைக்குப் பிறகு வந்த கட்சி.
அதற்கு முன்பிருந்த கட்சி ஜனசங்கம். அந்தக்
கட்சி தன் பிறப்பு முதலே காஷ்மீரின் சிறப்பு
அந்தஸ்தை எதிர்த்து வருகிறது. எனவே இது
இந்துத்துவ அஜண்டாவேதான்!

எனது கேள்வி! ஒரு இந்துத்துவ அஜெண்டாவுக்கு
இவ்வளவு ஆதரவு எப்படி வந்தது?
பரம வைரிகளான அமித்ஷாவும் மாயாவதியும்
இதை ஆதரிப்பது எப்படி?

பல்வேறு மாநிலக் கட்சிகள் இதை ஆதரிப்பது எப்படி?

   
  ல் 369க்கு அடுத்து 370 சிரஞ்சீவியாக இருக்கிறது.
அதை யாரும் நீக்கவில்லை. நீக்கும் அதிகாரம்
ராமானுஜனுக்கே கிடையாது!

6) தமிழ்நாட்டின் அதிமுக வரவேற்பு.
ஆதரித்து வாக்களிப்பு!

7) சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி
வரவேற்பு! ஆதரித்து வாக்களிப்பு!

8) சிவசேனை வரவேற்று ஆதரித்து வாக்களிக்கிறது.

இது தமிழில் தீக்கதிரில் வந்து விட்டதா?

சற்று முன் (30 நிமிடங்களுக்கு முன்)
மாநிலங்களவையில் காஷ்மீர் மசோதா
(Kashmir reorganisation bill) பிரம்மாண்டமான
பெரும்பான்மையுடன் நிறைவேறியது. எதிர்ப்பை விட
ஆதரவு இரண்டு மடங்கிற்கும் மேல். டிவிஷன் முறையில்
வாக்கெடுப்பு நடைபெற்றது. வெளிநடப்பு வேறு இருந்தது.
இதையொட்டி இத்தகவல் கட்டுரை எழுதப் பட்டுள்ளது.

இதன் நோக்கம் மாயாவதியும் சந்திரபாபு நாயுடுவும்
கேஜ்ரிவாலும் தீவிர பாஜக எதிர்ப்பாளர்கள்.
இவர்கள் இதை ஆதரிக்கக் காரணம் என்ன?

நிர்ப்பந்தம்  இருப்பதாக நான் கருதவில்லை.
பாஜகவுக்கும் மாயாவதிக்கும் ஒரே நிலைபாடு
எப்படி ஏற்பட்டது என்ற கேள்விக்கு விடை கேட்கிறேன்.


 

எதிர்க்கட்சிகளின் யோக்கியதை பாரீர்!


=============================================
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து என்பது
இந்துத்துவ அஜண்டாவா அல்லது
தேசநலன் சார்ந்த செயல்பாடா?
ஒரு அரசியல் பகுப்பாய்வு!
-----------------------------------------------------------
1) காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப் பிரிவுகளை
(370 மற்றும் 35A) ரத்து செய்ய வேண்டும் என்று அன்றைய
ஜனசங்கமும் இன்றைய பாஜகவும் கடந்த 70 ஆண்டுகளாகக்
கூறி வந்துள்ளன. உண்மையில் இது ஒரு இந்துத்துவ
அஜண்டாதான். (பொது சிவில் சட்டமும் ஒரு இந்துத்துவ
அஜண்டாதான்).

2) இந்த இந்துத்துவ அஜெண்டாவைச் செயல்படுத்தும்போது
மோடி தனிமைப் பட்டு விடுவார் என்ற எதிர்பார்ப்பு
பலருக்கும் இருந்தது.

3) அனால் உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கிறது
என்பது இன்று மாநிலங்களவையில் நடந்த
காஸ்மீர் மசோதா வாக்கெடுப்பில் தெரிந்து விட்டது.

4) இந்தியாவின் பிரதமர் வேட்பாளரும் தலித்துகளின்
தனிப்பெருந் தலைவரும் ஐந்து முறை உபியில்
முதல்வராக இருந்தவருமான மாயாவதி இந்த
இந்துத்துவ அஜெண்டாவை ஆதரிக்கிறார். இதன் பொருள்
அந்த அளவுக்கு தலித்துகள் இந்தக் கோரிக்கையை
ஆதரிக்கின்றனர் என்பதே.

5) மாபெரும் என்ஜிஓ புரட்சியாளர் அரவிந்த் கெஜ்ரிவால்
தீவிர பாஜக எதிர்ப்பாளர். அவர் இந்த இந்துத்துவ
அஜெண்டாவை ஆதரிக்கிறார். இதன் பொருள்
நகர்ப்புற அறிவுஜீவிகள் மற்றும் நகர்ப்புற
நடுத்தர வர்க்கம் இந்த அஜெண்டாவை ஆதரிக்கிறது
என்பதே.

6) ஆந்திரத்தில் உள்ள ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும்
போட்டி போட்டுக் கொண்டு இந்த அஜெண்டாவை
ஆதரிக்கின்றன. ஜெகன்மோகன் ரெட்டியும் சந்திரபாபு
நாயுடுவும் அமித்ஷாவுக்கு ஆந்திரத்தில் ரசிகர் மன்றம்
வைத்து விட்டனர். இவை எல்லாம் மாநில சுயாட்சி
தேவைப்படும் மாநிலக் கட்சிகள். அப்படி இருந்தும்
இந்துத்துவ அஜெண்டாவை இவை ஆதரிக்கின்றன.
இதன் பொருள் என்ன? இவை ஆதரிக்கக் காரணம் என்ன?

7) தெலுங்கானாவை ஆளும் TRS கட்சியின் சந்திரசேகர
ராவ் இந்த இந்துத்துவ அஜெண்டாவை முழுமனதுடன்
ஆதரிக்கிறார். ஆக ஆந்திரா தெலுங்கானா என்று
ஒட்டு மொத்த தெலுங்கு தேசிய இனமும் இந்த
இந்துத்துவ அஜெண்டாவை ஆதரிக்கிறது. இதற்கு
என்ன காரணம்?

8) ஒடிஷாவின் நவீன் பட்நாயக் இந்த இந்துத்துவ
அஜெண்டாவை ஆதரிக்கிறார். ஒடிஷாவில் பெரும்
மக்கள் செல்வாக்குப் பெற்றவர் இவர். அதிக முறை
முதல்வராகத் தேர்ந்து எடுக்கப் பட்டவர். இவர்
ஏன் இந்த இந்துத்துவ அஜெண்டாவை ஆதரிக்கிறார்?
இதற்கு காரணம் என்ன?

9) தமிழ்நாட்டில் அதிமுகவும், மராட்டியத்தில்
சிவசேனையும் ஆதரிப்பதில்லை வியப்பில்லை.

10) அரசமைப்புக் சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கார்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தருவதை ஏற்கவில்லை.
கடுமையாக எதிர்த்தார் என்பது வரலாறு.

11) இன்று (ஆகஸ்ட் 5) மாநிலங்களவையில் நடந்த
வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பல எம்பிக்கள்
வெளிநடப்புச் செய்துள்ளனர். வெளிநடப்பு என்பது
மசோதாவுக்கான மறைமுக ஆதரவே ஆகும்.
ஏன் இவர்களும் இந்துத்துவ அஜெண்டாவை
ஆதரிக்கின்றனர்? காரணம் என்ன?

12)  மோடியோ அமித்ஷாவோ பாஜகவோ தனிமைப்
படவில்லை என்பது நிதர்சனம். ஏன் தனிமைப்
படவில்லை? ஒரு பரிசுத்தமான இந்துத்துவ அஜெண்டாவை நிறைவேற்றும்போது பாஜக தனிமைப்பட  வேண்டும்
அல்லவா?  ஏன் தனிமைப் படவில்லை?

13) அப்படியானால் இது இந்துத்துவ அஜெண்டா இல்லையா?
தேசத்துக்குப் பொதுவான அஜெண்டாவா? அல்லது
இந்துத்துவ அஜெண்டாவாக இருந்தாலும் அது
நியாயமானது என்று இந்த எதிர்க்கட்சிகளும்
அவர்களுக்கு வாக்களிக்கும் மக்களும் கருதுகிறீர்களா?
கேள்விகள் பதிலுக்குக் காத்திருக்கின்றன.
********************************************
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக