ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

சரியான விடை!
------------------------
11,259,375 என்பதே சரியான விடை.
இதை நன்கு விளக்கி இருக்கிறார்
நன்றி. கணினியில் ஹெக்சா டெசிமல்
எண்கள் பயன்படுகின்றன.

சரியான விடை!
-------------------------
அப்பலோனியஸ் என்பதே சரியான விடை.
இதை திரு எழுதி இருக்கிறார். அவருக்கு நன்றி.
ஆர்க்கிமிடிஸ் அப்பலோனியஸ் இருவருமே
கிட்டத்தட்ட சமகாலம். அப்பலோனியஸ் இளையவர்.
ஆர்க்கிமிடிஸ் மூத்தவர்.

இவர்களின் காலம் பொது சகாப்தத்துக்கு
முந்திய காலம். அதாவது கிமு காலம்.
அதாவது 2000 ஆண்டுக்கு முந்திய காலம்.
அப்போதே conics பற்றி அறிந்துள்ளனர்.
அதைத்தான் இன்று சந்திரயானில் பயன்படுத்துகிறோம்.

செல்போனை நன்கு பயன்படுத்துங்கள்!
சரியான விடை!
--------------------------------------------------------------
sin 62ன் (degree) மதிப்பு = 0.8829 ஆகும்.
இங்கு கோணமானது (62 degree) முதல் கால்வட்டத்தில்
(first quadrant) உள்ளது. முதல் கால்வட்டத்தில்
எல்லாமே பாசிட்டிவ் மதிப்பு என்பதையும்
நினைவு கூர்க.

அடுத்து factorial 12 = 1 x 2 x 3 x 4 x .......... x 12 ஆகும்.
12! = 479,001,600 ஆகும்.
10! = 3,628,800 என்பதை எப்போதுமே மனதில்
பதித்து வைத்திருக்க வேண்டும்.

விடையளிக்க அனைவருக்கும் நன்றி.
உங்களின் செல்போனில் நூற்றுக்கும் மேற்பட்ட
செயல்பாடுகள் உள்ளன. அவற்றைப்
பயன்படுத்துங்கள்.
------------------------------------------------- 
பின்குறிப்பு:
உங்கள் செல்போன் கால்குலேட்டரில் trigonometric tables
ரேடியன் (radian) அளவில் இருக்கக் கூடும்.
அப்படி இருந்தால் அதை user parametersஜப் பயன்படுத்தி
degree measureக்கு கொண்டு வாருங்கள். அதன் பிறகு
சைன் மதிப்பு பாருங்கள்.
-------------------------------------------------------------------- 
சரியான விடை
---------------------
ராமானுஜனின் எண்ணான 1729 ஒரு பகு எண்.
அது பிரைம் நம்பர் அல்ல.
எளிய முயற்சியிலேயே அதின் சில காரணிகளைக்
கண்டறியலாம். 7ஆல் மீதியின்றி வகுபடுகிறது
13ஆல் மீதியின்றி வகுபடுகிறது. மாற்றாக காரணிகளை
சிறிது முயன்று அறியலாம்.
 1729ன் காரணிகள் = 1,7,13,19,91,133,247,1729.
விடையளிக்க அனைவருக்கும் நன்றி.
===================================
சரியான விடையும் விளக்கமும்!
--------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------
Apogee = a(1+e) என்பது அனைவரும் அறிந்ததே.
Perigee = a(1-e) என்பதும் அனைவரும் அறிந்ததே/
இங்கு a = semi major axix of ellipse ஆகும்.
e = eccentricity ஆகும்.
****
தற்போது ஒரு சிறிய derivation.
Apogee minus Perigee = a(1+e)-a(1-e)      
= a + ae-a +ae
= 2ae.
Apogee minus Perigee = 2ae
Therefore eccentricty, e = Apogee minus Perigee (divided by) 2a
இந்த derivation புரிகிறதா? இதை அப்படியே வைப்போம்.
இப்போது அடுத்த ஒரு derivationஜப் பார்ப்போம்.
******
a = semi major axix of the ellipse.
a = (Apogee + Perigee)/2 (this is known to us)
Therefore 2a = Apogee + Perigee.
ஆக 2aன் formula கிடைத்துள்ளது.
*****
இப்போது eccentricityக்கான நமது முந்திய derivationல்
2aவின் மதிப்பை இடுவோம்.
eccentricity e = Apogee minus Perigee (divided by) Apogee plus Perigee.
****
கணக்கில் Apogee, Perigee ஆகியவற்றின் மதிப்பை
இஸ்ரோ கொடுத்துள்ளது. அந்த மதிப்புகளை
கணக்கில் பிரதியிட்டால் விடை கிடைக்கும்.

Apogee = 89472 km
Perigee = 277 km
Apogee minus Perigee = 89195 km             
Apogee plus Perigee =  89749 km
Therefore eccentricity = 89195/89799
= 0.9932738672
= 0.99
*************
ஆக eccentricity = 0.99 என்று கண்டறிந்துள்ளோம்.
நீள்வட்டத்தின் eன் மதிப்பு பூஜ்யத்திற்கும் 1க்கும்
இடையில் இருக்கும். பூஜ்யத்தை நெருங்க நெருங்க
சுற்றுப்பாதையானது ஏறத்தாழ வட்ட வடிவில் இருக்கும்.
1ஐ நெருங்க நெருங்க மிக அதிகமான நீள்வட்டத்
தன்மையுடன் இருக்கும். அதாவது கிட்டத்தட்ட
ஒரு paraolic pathஐ பின்பற்றும். தற்போது சந்திரயான்-2 ஒரு பேய்த்தனமான
நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது என்பதை
eccentricityன் 0.99 என்ற மதிப்பு சுட்டுகிறது.
இது ஒரு real time sum.

e ன் மதிப்பு 1.414ஐ அதாவது square root of 2ன் மதிப்பை
அல்லது 2ன் மதிப்பை நெருங்கும்போது நீள்வட்டமானது
நேர்கோடுகள் போன்று ஆகி விடும் (pair of straightlines) 
 ---------------------------------------------------------------  
பூமியைச் சுற்றுவதில் இருந்து விடுபட்டு நிலவை
நோக்கிய பாதைக்குச் செல்லவே இத்தகைய
பேய்த்தனமான elliptical orbitல் சுற்றுகிறது.
சந்திரயான் தற்போது earth phaseல் தான் உள்ளது.
இதுவரை 4 orbit increase activities மேற்கொள்ளப்பட்டு
உள்ளன. நம்மிடம் பணம் இருந்தால் இப்படி
பூமியைச் சுற்றத்  தேவை இல்லாமல் நேரடியாகவே
direct injection orbitல் பயணம் செய்து விரைவில் நிலவைச்
சென்றடையலாம்.     



வேண்டுகோள்!
----------------------
இத்தகைய நீள்வட்டம் அதாவது ஒரு பேய்த்தனமான
நீள்வட்டம், eccentricity = 0.99 கொண்டுள்ள ஒரு
நீள்வட்டம் எப்படி இருக்கும் என்பதை யாராவது
வரைந்து காட்டினால் நல்லது. A rough sketch.

ஒரு காகிதத்தில் அதை வரைந்து அதை மொபைலில்
புகைப்படம் எடுத்து இங்கு பதியுமாறு அன்புடன்
வேண்டுகிறேன். (தற்போது எனது மொபைல் காமிரா
பழுதாகி உள்ளது). நீள்வட்டமானது நன்கு elongatedஆக
இருக்க வேண்டும். மிக மிகத் தட்டையாக இருக்க வேண்டும்.  
---------------------------------------------------------
நான்காவது பரிமாணம் இருக்கத்தான் செய்கிறது.
But we can't see it physically. We can only perceive.
முப்பரிமாண உலகில் வாழும் நாம் முப்பரிமாணத்திற்கு
மேற்பட்ட பரிமாணம் உடைய எந்தப் பொருளையும்,
ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துத் தடவிப்
பார்ப்பது போல பார்க்க முடியாது. எனவே tesseractன்
இருப்பை மறுக்க இயலாது. M Theory 11 பரிமாணங்களைக்
கூறுகிறது. 4 பரிமாணங்களைத் தவிர மீதிப்
பரிமாணங்கள் அந்த நான்கினுள் மடங்கி இருப்பதாக
அது கூறுகிறது.

ஆண்ட வெளிக்கு 3 பரிமாணங்கள் மட்டுமே என்று குறைத்துக்
கொண்டால் நவீன இயற்பியலைப் புரிந்து கொள்ள
முடியவில்லை.
--------------------------
ஐயா,
சொற்கள் இல்லை; சொல்வங்கியும் இல்லை.
கட்டுரை எழுதுகிறவனே சொல்லையும் உருவாக்கிக்
கொள்ள வேண்டும் என்ற நிலைதான் உள்ளது.
யார் எவருக்கும் எந்த ஒரு ஆங்கிலச் சொல்லுக்கும் 
இணையான தமிழ்ச்சொல் வேண்டுமேன்றால்,
சொல்வங்கியைத் தட்டினால் தேவையான
தமிழ்ச்சொல் கிடைக்க வேண்டும்.
அப்படி நிலைமை இல்லை.

தமிழ் போன்ற மொழிகள் அழிவின் விளிம்பில்
உள்ளன என்று பல ஆண்டுகளுக்கு முன்பே
ஐநா சபை கூறியது. அதைப்படித்த குமரி அனந்தன்
அழுது புலம்பி அப்போது ஓர் அறிக்கை வெளியிட்டார்.
அதன் பிறகு கவிஞர் வைரமுத்துவும் அழுது புலம்பி
ஓர் அறிக்கை வெளியிட்டார். இவ்விரண்டு
அறிக்கைகளையும் நான் படித்தேன்; நானும் அழுதேன்.


காலம் நிச்சயமாக ஒரு பரிமாணம்தான்.
மூன்று அண்ட வெளி பரிமாணத்துடன் காலத்தையும்
சேர்த்து நான்கு பரிமாணம் என்பது உண்மையே.
இது ஐன்ஸ்டின் சொல்லியது.

தற்போது அண்டவெளிக்கே மூன்று பரிமாணங்களை
விட அதிகமான பரிமாணங்கள் இருக்கின்றன
(காலம் நீங்கலாக)
என்ற கொள்கை முன்வைக்கப் பட்டுள்ளது.

Einstein....... space dimensions 3 plus taime dimension.. total =4.

latest theories..... space dimensions > 3 (apart from time)
Mathematically n dimensions are possible.
We can accept Interstellar. Nothing wrong in it. And we have to
move forward still beyond Interstellar.


பொருள்முதல்வாதமற்ற நாத்திகம்
போலி நாத்திகம்; அது விரைவில்
பல்லிளித்து விடும் என்ற உண்மையை
நிரூபித்து விட்டது அத்திவரதர் தேற்றம்!   என்கிறது இஸ்ரோ


நிலவில் ஒருநாள் என்பது பூமியில் 14 நாளுக்குச் சமம்.
one lunar day = 14 earth days!
ஏன் இப்படி? என்ன காரணம்?

இஸ்ரோ எழுதியது சரியே! அதன் பொருள் இதுதான்!
---------------------------------------------------------------------------------
நிலவு தன்னுடைய அச்சில் ஒரு முறை சுற்றி முடிக்க
பூமியின் கணக்கில் 28 நாள் ஆகிறது (சற்றுத் தோராயமாக).
இதில் 14 நாள் பகல் ஆகும்; 14 நாள் இரவு ஆகும்.

பகல் இரவு என்பவை பாதிப்பாதி ஆகும்.
ஒரு நாள் என்பதில் பாதி பகல்; பாதி இரவு.

நிலவில் ஒரு பகல் என்பது பூமியில் 14 பகல்களுக்குக் சமம்.
இதைத்தான் இஸ்ரோ குறிப்பிடுகிறது.
Therefore 1 lunar day = 14 earth days.
-----------------------------------------------------------

பூமியும் சந்திரனும்!
பூமி தன்னைத்தானே வேகமாகச் சுற்றுகிறது!
சந்திரன் தன்னைத்தானே மெதுவாகச் சுற்றுகிறது!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
ஒரு பம்பரம் சுற்றுவதைப் பார்த்து இருப்பீர்கள்!
பம்பரம் தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது.
இதற்கு rotation என்று பெயர்.

பம்பரம் சுற்றுவதைப் போல பூமியும் தன்னைத்தானே
ஒரு அச்சில் சுற்றிக் கொள்கிறது.இது rotation of earth ஆகும்.
இதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்று பார்ப்போம்.
ஏதாவது ஓர் அட்டவணையைப் பார்த்துத் தெரிந்து
கொள்ளலாம். அது மனதில் நிற்காது. எனவே
நமக்கு நாமே என்ற அடிப்படையில் கணக்குச் செய்து
பார்த்து உண்மையை அறிவோம்.

பூமியின் சுற்றளவு = 40,075 கிமீ
தன்னைத்தானே சுற்றும் வேகம் = 1674 kmph
எனவே இதற்கு ஆகும் காலம் = 40075 divided by 1674
= 23.9396657 hour
= 24 மணி.

ஆக, பூமி தன்னைத்தானே சுற்றும்போது, ஒரு
முழுச் சுற்றைச் சுற்றி முடிக்க 24 மணி நேரம் ஆகிறது.
இதைத்தான் ஒரு நாள் என்கிறோம்.
**********
அடுத்து சந்திரனைப் பற்றிப் பார்ப்போம்.
சந்திரனின் சுற்றளவு = 10,921 கிமீ (பூமியில் கால் பாகம்)
தன்னைத்தானே சுற்றும் வேகம் = 0.004627 km per second
(வேகம் மிகக்குறைவு என்பதை உணர்க)
எனவே இதற்கு ஆகும் காலம் = 10921 divided by 0.004627
= 2,360,276.637 second. (விடை வினாடியில் வரும்)
இதை மணியாக மாற்றுவோம்.

2,360,276.637 second = 655.63 மணி = 656 மணி = 27.32 நாள்.

இப்போது பூமியையும் சந்திரனையும் ஒப்பிடுவோம்.
பூமி தன் rotationக்கு 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.
சந்திரன் தன் rotationக்கு 656 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

சந்திரன் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.
எவ்வளவு அதிக நேரம் என்று பார்ப்போம்.
656 ஐ 24ஆல் வகுப்போம்.
656/24 = 27.33.
அதாவது பூமிக்கு ஆகும் நேரத்தைப் போல
சந்திரனுக்கு 27.33 மடங்கு அதாவது 28 மடங்கு
அதிக நேரம் ஆகிறது.

எனவே சந்திரனில் ஒரு நாள் என்பது பூமியில்
28 நாளுக்குச் சமம்.

இஸ்ரோ என்ன சொல்கிறது? சந்திரயான்-2வில்
உள்ள லேண்டரும் ரோவரும் சந்திரனில் கிடைக்கும்
சூரிய ஒளியில் இருந்து தாங்கள் இயங்குவதற்கான
ஆற்றலைப் பெறுகின்றன. (solar power).

இந்த ஆற்றலை சந்திரனில் உள்ள பகல் நேரத்தில்
மட்டுமே பெற முடியும். சந்திரனில் இரவு நேரம்
அதீதக் குளிராக இருக்கும். மைனஸ் 180 டிகிரி செல்சியஸ்
இருக்கும். எனவே லேண்டரும் ரோவரும் சந்திரனின்
பகல் பொழுதில் மட்டுமே வேலை செய்ய இயலும்.
அதை ஒட்டியே அவற்றின் வாழ்நாள் ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளது.

சந்திரனில் பகல் என்பது 14 நாள். (இரவு என்பதும்
14 நாள்). பகல் பொழுதை மட்டும் கணக்கில்
கொண்டு லேண்டர் ரோவரின் வாழ்நாள் பூமிக்கணக்கில்
14 நாள் என்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
***************************************************    
 
 


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக