வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

அவர் விளையாட்டு வீரர் அல்லர்!
அவர் கணித நிபுணர்!
------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------
இந்த நிகழ்வு நடந்தது 2010ல். உலகக் கணித நிபுணர்களின்
மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற்றது. மாநாட்டு
நிகழ்வுகளில் ஒன்றாக, உலகம் முழுவதும் இருந்து
வந்திருந்த 40 கணித மேதைகளுடன் விஸ்வநாதன்
ஆனந்த் ஒரேநேரத்தில் சதுரங்கம் விளையாடினார்.

40 கணித நிபுணர்களுடன் ஒரே நேரத்தில் (simultaneously)
சதுரங்கம் விளையாடுகிறார் ஆனந்த்.(இங்கு simultaneously
என்ற சொல்லின் பொருளைப் புரிந்து கொள்வது அவசியம்.
simultaneously என்ற இந்தச் சொல்லுக்கு இணையான
தமிழ்ச்சொல் இல்லை. at the same time, simultaneously
எல்லாவற்றுக்கும் தமிழில் ஒரே சொல்தான்).

டெண்டுல்கருடனோ அல்லது தோனியுடனோ அல்லது
விராட் கோலியுடனோ கணித நிபுணர்கள் கிரிக்கெட்
விளையாட முன்வருவார்களா? அப்படி ஒரு நிகழ்வு
சாத்தியமற்றது என்பதை அனைவரும் அறிவோம்.

ஏன் ஆனந்துடன் கணித நிபுணர்கள் சதுரங்கம்
விளையாடுகின்றனர்? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
நான் ஆயிரம் முறை கூறி இருக்கிறேன்; பல கூட்டங்களில்
கூறி இருக்கிறேன்; எழுதியும் இருக்கிறேன்.

கணிதமே சதுரங்கம்! கணித விதிகளுக்கு உட்பட்டே
சதுரங்கம் விளையாடப் படுகிறது. அறிவியல் ஒளி
ஏட்டில் நான் எழுதிய "கணிதமே சதுரங்கம்" என்ற
கட்டுரையை வாசகர்கள் படிப்பது நல்லது.

இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால்,
ஆனந்தை ஒரு விளையாட்டு வீரராக (sportsman)
பார்க்கக் கூடாது. அவரை ஒரு கணித நிபுணராகப்
பார்க்க வேண்டும். ஆம், ராமானுஜன் போன்ற
கணித மேதைகளின் வரிசையில்தான் ஆனந்த்தை
வைக்க வேண்டும். அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, கால்குலஸ்
என்பது போல சதுரங்கமும் கணிதத்தின் ஒரு பிரிவே.

இந்தியாவிலேயே நுண்ணறிவுத் திறன் மிகுந்த மூவர்
(Top Three with highest IQ) 1) ராமானுஜன் 2) சர் சி வி ராமன்
3) ஆனந்த் என்று நான் பலமுறை கூறி இருக்கிறேன்;
எழுதியும் இருக்கிறேன்.

இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே இந்த உண்மையைக்
கூறியவன் நான் மட்டுமே. வேறு யார் எவரும் கூறவில்லை
என்பது குறிப்பிடத் தக்கது.

கான்பூர் ஐ.ஐ.டியானது  விஸ்வநாதன் ஆனந்துக்கு
கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது என்பதை
வாசகர்களுக்கு நினைவு ஊட்டுகிறேன். இது என் கருத்துக்கு
வலு சேர்க்கிறது. ஆனந்த் ஒரு கணித நிபுணர் என்ற என்
கருத்து,  கான்பூர் ஐ.ஐ.டியானது ஆனந்துக்கு டாக்டர் பட்டம்
வழங்கும் முன்னரே சொல்லப் பட்டது.

எனவேதான் விஸ்வநாதன் ஆனந்துக்கு மத்திய அரசு
பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் தொடர்ந்து கூறி வருகிறது.

இதை மோடி அரசு நிறைவேற்ற அனைவரும் குரல் கொடுக்க
வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு உரிய கேல் ரத்னா
விருது போதாதா என்று சிலர் கேட்கலாம். கேல் ரத்னா
விருது கணித நிபுணர்களுக்கு உரியதல்ல. எனவே
மெய்யான பாரத ரத்னா விஸ்வநாதன் ஆனந்தே!

சரி, ஒரே நேரத்தில் (simultaneously) உலகக் கணித
நிபுணர்கள் 40 பேருடன் ஆனந்த் விளையாடினாரே,
அந்த ஆட்டத்தின் ரிசல்ட் என்ன என்று வாசகர்கள்
கேட்கலாம். அதை நான் சொல்ல மாட்டேன். தங்களின்
சொந்த முயற்சியில் வாசகர்கள் அதை அறிந்து கொள்ள
வேண்டும் என்றே நியூட்டன் அறிவியல் மன்றம்
விரும்புகிறது. spoon feedingஐ நியூட்டன் அறிவியல்
மன்றம் விரும்பவில்லை.
-------------------------------------------------------------------
பின்குறிப்பு:
உலக சதுரங்க சாமியனாக ஒரு கணித நிபுணர்
இருந்தார். யார் அவர்? விடை தெரியாவிட்டால்,
அறிவியல் ஒளி ஏட்டில் நான் எழுதிய " சதுரங்கம்
கணிதமே" என்ற கட்டுரையைப் படித்து
விடையை அறியலாம்.
**************************************************** 
ஆம், உண்மைதான், 2010ல் ஹைதராபாத் பல்கலை
ஆனந்துக்கு டாக்டர் பட்டம் வழங்கப் போவதாக
அறிவித்தது. ஆனால் சிவப்பு நாடா முறையினால்
மத்திய அரசின் அனுமதி உரிய நேரத்தில் வரவில்லை.
இது விஷயமாக காங்கிரஸ் அமைச்சர் கபில் சிபல்
ஆனந்திடம் மன்னிப்புக் கேட்டார். ஆனந்த் டாக்டர்
பட்டத்தை ஏற்க மறுத்து விட்டார். இதெல்லாம்
கணித மாநாட்டை ஒட்டு 2010ல் நடந்த விஷயம். 

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு 12 வயதுச் சிறுவன்
ஆனந்தை எதிர்த்து விளையாடினான். அவன் ஒரு
கணித மேதை. ஆனந்தை எதிர்த்து விளையாடிய
40 கணித மேதைகளில் அச்சிறுவனும் ஒருவன்.
--------------------------------------------------------------------

இந்தியா பாகிஸ்தான் சீனா இடையே
அணுஆயுதப் போர் வராது. அணு ஆயுதப்
பிரயோகமும் ஒருபோதும் இருக்காது.
Nash equilibrium  பராமரிக்கப்படும்.

நாஷ் சமநிலை (Nash equilibrium) பற்றி அறிய
அறிவியல் ஒளி ஏட்டில் வெளியான எனது
பழைய கட்டுரையைத் தேடி எடுத்துப் படிக்கலாம்.
   

.


  



     


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக