வெள்ளி, 24 மே, 2019

லல்லு பிரசாத் மகள் தோல்வி!
பீகாரில் வாரிசு அரசியலுக்கு மரண அடி!
பாஜக வெற்றி பெற்றது எப்படி? உடையும் மர்மங்கள்!
---------------------------------------------------------------
1) மாட்டுத்தீவன ஊழல் பெருச்சாளி லல்லு பிரசாத்
யாதவ் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

2) லல்லுவின் மகள் மிசா பாரதி பாடலிபுத்திரம் தொகுதியில்
2019 தேர்தலில் போட்டி இட்டார். தோல்வி அடைந்தார்!
பீகார் மக்கள் வாரிசு அரசியலுக்கு மரண அடி கொடுத்தனர்.

3) பதிவான வாக்கு = 10,77,749
ராம் கிர்பால் யாதவ் பாஜக  = 5,09,557
மிசா பாரதி RJD =  4,70,236
39321 வாக்குகள் வித்தியாசத்தில் மிசா பாரதி தோல்வி!

4) கடந்த 2014 தேர்தலிலும் இதே தொகுதியில் மிசா பாரதி
போட்டியிட்டார்; இதே வேட்பாளரிடம் தோற்றார்.

5) தற்போது மிசா பாரதி ராஜ்ய சபா எம்பி ஆக
இருக்கிறார். இருந்தும் தேர்தலில் போட்டி இடுகிறார்.
நம்முடைய கனிமொழி போலத்தான். கனிமொழியும்
ஏற்கனவே ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார். இப்போது
தூத்துக்குடியின் மக்களவை எம்பி ஆகி விட்டார்.
உலகம் முழுவதும் வாரிசு அரசியல்வாதிகள்
ஒரே மாதிரிதான் சிந்திப்பார்கள் போலிருக்கிறது.

6) இந்த ராம்கோபால் யாதவ் யார் தெரியுமா? கடந்த
2014 தேர்தல் வரை லல்லு பிரசாத்தின் விசுவாசியாக
அவர் கட்சியில் இருந்தவர்தான். தேர்தல் நேரத்தில்
இவரின் தொகுதியை தன் மகள் மிசா பாரதிக்கு
வழங்கினார் லல்லு. இதனால் அதிர்ச்சி அடைந்த
ராம் கிர்பால் யாதவ் லல்லுவிடம் சென்று உரிமையுடன்
போராடிப் பார்த்தார். லல்லு இறங்கி வரவில்லை.
எனவே உடனடியாக பாஜகவில் சேர்ந்தார் ராம் கிர்பால்
யாதவ்.

7) பாஜக அவரைக் கட்சியில் சேர்த்து, அவரின் தொகுதியான
பாடலிபுத்திரத்தை அவருக்கு வழங்கி அவரை வேட்பாளர்
ஆக்கியது. அவர் வெற்றியும் பெற்றார். அவரை
அமைச்சராகவும் ஆக்கினார் மோடி. 

8) ஆக, லாலுவின் வாரிசு அரசியலும் குடும்ப அரசியலும்
அவரின் கட்சியைக் காலி பண்ணி விட்டது. இந்தச்
சூழலைச் சரியாகப் பயன்படுத்திய பாஜக, லல்லுவை
வீழ்த்தியது.

9) வாரிசு அரசியலையும் குடும்ப அரசியலையும்
வைத்துக் கொண்டு, பாஜகவை எதிர்க்க முடியாது.
2014 தேர்தலிலும் மிசா பாரதி தோற்றார். 2019 தேர்தலிலும்
தோற்கிறார். பாணலிபுத்திர மக்கள் தொடர்ந்து
குடும்ப அரசியலுக்கு மரண அடி கொடுத்து
வருகிறார்கள்.

10) இதற்கு அப்புறமாவது லல்லு திருந்துவாரா?
ஒருநாளும் திருந்த மாட்டார். .
********************************************** 

அறிவுடைமை என்பது காய்தல் உவத்தல் அகற்றி
ஒரு பொருளை ஆய்தல். மூளை நிறைய வெறுப்பை
வைத்துக் கொண்டு அந்த வெறுப்பை உமிழ்ந்தால்
என்ன ஆகும்? மோடி எதிர்ப்பாளர்களின் கதி என்ன?
அந்த அவலத்துக்குக்காரணம் என்ன? மண்டை
முழுவதும் புழுத்துப்போன வெறுப்பு அரசியல்!
அது படுதோலிவியைத் தந்துள்ளது.

எனக்கு புழுவினும் இழந்த சீமானைப் பிடிக்காதுதான்.
ஆனால் வெறுப்பும் காழ்ப்பும் என்னிடம் இல்லை.
எனவே சீமானை கமலை என்னால் பாராட்ட முடியும்.
உங்களின் சீமான் கமல் மீதான unjustified hatred
படுதோல்வியை மட்டுமே தரும்.
 

மருதுபாண்டியன்

மார்க்சியம் சரியான சித்தாந்தம்!
CPI, CPM கட்சிகளும் மற்றும் பல்வேறு போலி
நக்சல்பாரிகளும் முன்வைக்கும் சித்தாந்தம்
மார்க்சியம் அல்ல. அது வெறும் லிபரல் கதம்ப
சித்தாந்தம்! அது தாராளவாத முதலாளித்துவம்
( liberal capitalism). அது தோற்கும்!


பெரியாரின் பேரன் அவர். பெரியாரின் அண்ணன் மகன்
ஈ வெ கி சம்பத்தின் மகனே இளங்கோவன்.

அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்
பதவி இம்முறையும் காங்கிரசுக்கு இல்லை!
தேவையான 54 இடங்களைப் பெறவில்லை.

உலகம் முழுவதும் முதலாளித்துவ சமூக
அமைப்பு வந்து விட்டது. வரலாறு பின்னுக்குத்
திரும்பாது. எனவே இன்றும் என்றும் ஜனநாயகம்தான்.
வீண் வதந்திகளைக் குட்டி முதலாளித்துவம்
கிளப்பி விடுகிறது. அதற்கு இரையாக வேண்டாம்.

இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசு. இதற்கென்று
ஒரு அரசமைப்புச் சட்டம் இருக்கிறது. அதன்படிதான்
ஆட்சி நடத்த முடியும். இந்தியாவின் அரசமைப்புச் சட்டம்
நாடாளுமன்ற ஜனநாயகம் என்னும் முறையாகும்.
அதில் மாற்றமில்லை.

இந்திய நீதிமன்றங்கள் வழக்கை விரைந்து நடத்தி
தீர்ப்பு வழங்கி விடும் என்ற பிரமை வேண்டாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக