வெள்ளி, 17 மே, 2019

மகாத்மா காந்தி!
ஒரு மார்க்சிய லெனினிய மதிப்பீடு!
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
மகாத்மா காந்திக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப்
போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. அதை
எவராலும் மறுக்க இயலாது. காந்தியின் வருகைக்கு முன்
சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கை படித்த மேட்டுக்குடி
இந்தியர்களின் கோரிக்கையாக மட்டுமே இருந்தது.
காந்தி தம் அயராத உழைப்பால் அதை மக்களின்
கோரிக்கையாக ஆக்கினார். இதை காந்தியைத் தவிர
வேறு யாரும் செய்யவில்லை.

எனினும் காந்தியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு பெரும்
சமரசங்களைக் கொண்டிருந்தது. பல்வேறு
சந்தர்ப்பங்களில் மக்களின் எழுச்சியை மட்டுப்
படுத்துவதே காந்தியின் வேலையாக இருந்தது.

இந்திய சமூகம் நிலவுடைமைச் சமூகக் கூறுகளைக்
கொண்டிருந்தது. இதை மாற்றி அமைப்பது பற்றி
காந்தி சிந்திக்கவில்லை. அவரின் வேலைத்திட்டத்திலும்
அது இல்லை.

இந்தியத் தரகு முதலாளிய வர்க்கத்தின் தலைவராக
காந்தி இருந்தார். பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியத்
தரகு முதலாளிகளுக்கு அதிகாரத்தை மாற்றிக்
கொடுப்பதில் தலைமைப் பங்கு வகித்தார்.

தேசப்பிரிவினையை காந்தி சரியாகக் கையாளவில்லை.
மிகவும் முட்டாள்தனமாகக் கையாண்டார். இதன் விளைவாக
லட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

மிகவும் கொடிய சர்வாதிகாரியாக காந்தி இருந்தார்.
ஜனநாயக மறுப்பே அவரின் உள்ளடக்கமாக இருந்தது.
நாட்டு நலனை விட தமது பிம்பம் பற்றியே அவர்
அதிகம் கவலைப் பட்டார். கோடிக்கணக்கான
இந்திய மக்கள் மீது ஒரவஞ்சனையுடனே எப்போதும்
நடந்து கொண்டார்.

1947ல் நடந்த அதிகார மாற்றத்துக்கு முன்னும் பின்னும்,
அதாவது சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் நடைபெற்ற
மதக் கலவரங்களை கட்டுப்படுத்தத் தெரியாத
கையாலாகாதவராகவே காந்தி இருந்தார். இதன்
விளைவாக நாடெங்கும் மக்களிடம் அவர் செல்வாக்கு
இழந்திருந்தார்.

இந்த நிலையில் நாதுராம் கோட்சே அவரைச் சுட்டுக்
கொன்று தீராப்பழியைத் தேடிக் கொண்டார். காந்தியின்
கொலை என்பது தவிர்க்க இயலாத ஓர் எதிர்வினையாக
இந்திய சமூகத்தில் நிகழ்ந்து விட்டது.

டாக்டர் அம்பேத்கார் காலமெல்லாம் காந்தியை
எதிர்த்தார். இந்து மகாசபை, ஆர் எஸ் எஸ்
அமைப்புகள் ஒருபுறமும், ஜின்னாவின் முஸ்லீம் லீக்
மறுபுறமும் காந்தியை எதிர்த்தன. மேற்கத்தியக்
கல்வியும் நவீனப் பார்வையும் கொண்டிருந்த
நேரு, அம்பேத்கார் ஆகியோருக்கு காந்தி ஒரு
முள்ளாகவே கடைசி வரை இருந்தார்.

சாதி, மதம், வர்க்கம் என பெரும் ஏற்றத் தாழ்வுகளைக்
கொண்ட எந்த ஒரு சமூகமும் கொந்தளிப்புடனே
இருக்கும். அவ்வப்போது சமாதான முயற்சிகள்
மேற்கொள்ளப் பட்டாலும் பகைமையானது நீறு பூத்த
நெருப்பாகவே இருக்கும்.

இத்தகையதொரு சமூகமே சுதந்திர காலத்தை
ஒட்டிய இந்தியச் சமூகம். எனவே இத்தகைய
சமூகத்தில் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களை
பாதிக்கப்பட்டவர்கள் அரசியல்கொலை (assassination)
செய்வது தவிர்க்க இயலாதது. இது தீவிரவாதமோ
பயங்கரவாதமோ அல்ல.

நக்சல்பாரி இயக்கம் வெடித்துக் கிளம்பியபோது,
நாடெங்கும் காந்தி சிலைகளை நக்சல்பாரிகள்
உடைத்தனர். மக்களிடம் இருந்த காந்தி மீதான
மூடத்தனமான பிரமை விலகாமல் மக்களை புரட்சியை
நோக்கி இட்டுச் செல்ல முடியாது என்று சாரு மஜூம்தார்
கருதினார்.   

கோட்சே காந்தியைச் சுட்டுக் கொன்றதன் மூலம்
அவரை நிரந்தர மகாத்மா ஆக்கி விட்டான்.
தனி மனிதத் தியாகம் என்று பார்த்தால்,
காந்தியை விட கோட்சேவே அதிகபட்சத்
தியாகத்தைச் செய்திருக்கிறான் என்பதே உண்மை.

காந்தி குறித்த வழிபாட்டு மனநிலை உடையோர் 
அதிலிருந்து விடுபட வேண்டும்.
***************************************************
சாதி, மதம், வர்க்கம் என பெரும் ஏற்றத் தாழ்வுகளைக்
கொண்ட எந்த ஒரு சமூகமும் கொந்தளிப்புடனே
இருக்கும். அவ்வப்போது சமாதான முயற்சிகள்
மேற்கொள்ளப் பட்டாலும் பகைமையானது நீறு பூத்த
நெருப்பாகவே இருக்கும்.

இத்தகையதொரு சமூகமே சுதந்திர காலத்தை
ஒட்டிய இந்தியச் சமூகம். எனவே இத்தகைய
சமூகத்தில் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களை
பாதிக்கப்பட்டவர்கள் அரசியல்கொலை (assassination)
செய்வது தவிர்க்க இயலாதது. இது தீவிரவாதமோ
பயங்கரவாதமோ அல்ல.

 






1 கருத்து:

  1. கொஞ்சம் காந்தி பற்றி படித்து விட்டு கருத்து கூறவும். உங்கள் பாராக்களே முரன்பாடு கொண்டதாக உள்ளன. குறைந்த பட்சம் ஜெயமோகனின் இன்றைய காந்தி படியுங்கள். உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கக்கூடும்.

    பதிலளிநீக்கு