வெள்ளி, 31 மே, 2019

மார்க்சிஸ்ட் கட்சி ஒரு கற்பழிப்புக் கட்சி!
-----------------------------------------------------------------
30/05/1990 மேற்கு வங்காளம்
3 பெண் மருத்துவ அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கொஸாபா என்னும் இடத்தில் மருத்துவ முகாமைப் பார்வையிட்டு தத்தமது அலுவலை முடித்துக்கொண்டு கல்கத்தா திரும்புகிறார்கள்.
அனிதா தேவான் & உமா கோஷ் – இருவரும் மேற்கு வங்காள மாநில சுகாதாரத்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள்.
ரேணு கோஷ் – யூனிசெஃப் அமைப்பின் (WHO) பிரதிநிதியான மருத்துவ அதிகாரி.
மாலை 6.30 மணியளவில் மூவரும் சென்ற வாகனம் பண்டலா அருகே கிழக்கு மெட்ரோபாலிட்டன் பை பாஸ் சாலை அருகே வரும் போது பக்கத்தில் இருந்த மார்க்ஸிய கம்யூனிஸ்ட் அலுவலகத்திலிருந்து வெளியே ஒரு அணியாக வந்த அக்கட்சிப் பிரமுகர்கள் 5 பேரால் வலுக்கட்டாயமாக நிறுத்தப்படுகிறது. வாகன ஓட்டி அபானியை பலமாகத் தாக்க அவர் தப்பிக்க முயற்சித்திருக்கிறார். வாகனத்தை வேகமாக திசை மாற்றி செலுத்தத் துவங்க, சிறிது தூரம் செல்வதற்குள் அந்த வாகனத்தை மேலும் 11 தோழர்கள் அடங்கிய அணி பலவந்தமாக நிறுத்தி இருக்கிறது.
முதலில் வழிமறித்த ஐவரும் அந்த 11 பேருடன் சேர்ந்து கொண்டனர். வாகனத்தின் உள்ளே இருந்த பெண்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அவர்களை தூக்கிக்கொண்டு போக முயல வாகன ஓட்டி அபானி அதை தடுத்திருக்கிறார். அனைவரும் சேர்ந்து டிரைவரை கொடூரமாகத் தாக்கி தெருவில் வீசி இருக்கிறார்கள். டிரைவரால் அதன் பின் எதிர்த்துப் போராட முடியவில்லை. வாகனத்தை எரித்த அந்த 16 பேர் பிறகு மூன்று பெண் அதிகாரிகளை அருகில் உள்ள வயல்கள் நிறைந்த பகுதிக்கு கொண்டு போய் மறைவிடத்தில் மாறி மாறி கொடூரமாக வன்புணர்வு செய்திருக்கிறார்கள். அதன் பின் நிர்வாணமாக அந்தப் பெண்களை மயக்க நிலையில் அங்கேயே சாலையோரம் கிடத்திவிட்டு ஓடி இருக்கிறார்கள். பலாத்காரத்தின் போது கொடூரமாக தாக்கப்பட்டதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துவிட்டார்.
இரவு 11.30 மணியளவில் பாதகம் நடந்த இடத்திற்கு வந்த மாநில போலீஸார், மூர்ச்சையாகி சாலை ஓரத்தில் கிடத்தப்பட்டிருந்த மூன்று பெண்களையும் கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
மயக்க நிலையில் நிர்வாணமாக கொண்டு வரப்பட்ட 3 பெண்களில் ஒருவர் உயிர் இழந்து விட்டார் என்பதை அந்தப் பெண் மருத்துவர் பரிசோதித்து அறிவித்தார்.
அடுத்து இறந்து போன உடலை முழுமையாக பரிசோதிக்கையில் அந்தப் பெண் மருத்துவர் மூர்ச்சையானார் :
காரணம்?
16 நபர்களால் கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்த அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பில் காணப்பட்ட உலோக டார்ச்!
இவர்களுடன் பலமாக தாக்கப்பட்ட அந்த வாகன ஓட்டிக்கும் அங்கு சிகிச்சை தந்து மேற் சிகிச்சைக்கு எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பலனின்றி அந்த வாகன ஓட்டி 04/06/1990 அன்று உயிரிழந்தார்.
காரணம் – அவர் உடலின் பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்ட ஆழமான 43 காயங்கள் ஆறவில்லை. மேலும் அவரது ஆண் குறியானது முற்றிலுமாக சிதைக்கப்பட்டிருந்தது.
இறந்து போன அபானி குறித்த இந்த தகவல்களை மேற்கு வங்காள அரசு மருத்துவர் திரு. பிஸ்வநாத் கஹாலி தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இது நடந்த கொடூரம்.
இது குறித்து மார்க்ஸிய கட்சியை சார்ந்த அப்போதைய மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பிரசந்தா சுர் அவர்கள் “வாகனத்தில் வந்த நால்வரைப் பிள்ளை கடத்தல்காரர்கள் என்று தவறுதலாக நினைத்திருக்கிறார்கள்” என உயரிய கருத்துகளைத் தெரிவித்தார்.
அடுத்து மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அம்மாநில முதல்வர் (அப்போது) தோழர். ஜோதி பாசு அவர்கள் இது குறித்து சர்வ சாதாரணமாக அலட்சியமான முறையில் கருத்து தெரிவித்தார்.
****************
பல கொடூர நிகழ்வுகளை நினைவு வைத்து வருடந்தோறும் ஆர்வலர்கள், போராளிகள், தோழர்கள் போன்றோரிடம் கருத்து கேட்கும் ஊடகங்கள் இது குறித்து தோழர்கள் முத்தரசன், அருணர், ராமகிருஷ்ணன் போன்றோரிடம் இந்த கருப்பு தினத்தன்று கேள்வி கேளுங்கள்...
குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை என்ன?
குற்றம் செய்தவர்களுக்கு தையல் எந்திரம், பண முடிப்பு மேலும் இது போன்ற பணிகளை தொடர்ந்து செய்ய ஆயுதங்கள் ஏதேனும் கருணை அடிப்படையில் வழங்கப்பட்டதா?
தோழர்கள் தலைமையில் தமிழகத்திலிருந்து “உண்மை அறியும் குழு” ஏதேனும் விசாரணை நடத்தியதா?
கேள்விகளைக் கேட்டு பதிலளிக்க சொல்லுங்கள்...
இந்தக் கொடூரத்தை செய்த கட்சி இன்று அதே மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு பாராளுமன்றத் தொகுதியைக் கூட வெல்லவில்லை. தொடர்ந்து இருமுறை மாநிலத்தின் ஆட்சி அதிகாரப் பொறுப்பிலும் இல்லை.
இருப்பினும் அந்த ரேப்பிஸ்ட் கட்சி தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வென்றிருக்கிறது.
இந்த மே 30 ஐ இணையத் தமிழன் ஏதோ ட்ரெண்ட் செய்து கொண்டாடுகிறானாம்.
தமிழன் என்றொரு...  Rasu Sathiya 
-----------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக