புதன், 29 மே, 2019

அமெரிக்க டைம் பத்திரிகையின் ஊடக அதர்மம்!
சோரம் போகும் குட்டி முதலாளித்துவம்!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
உங்கள் வாழ்க்கையில் என்றாவது டைம் பத்திரிகையை
(TIME) வாசித்து இருக்கிறீர்களா?

டைம் பத்திரிகையின் அட்டைப் படத்தில் இடம் பெறுவது
எவ்வளவு பெரிய கெளரவம் தெரியுமா?

டைம் பத்திரிக்கை அமெரிக்காவில் இருந்து வெளிவரும்
வாராந்திர செய்திப் பத்திரிகை. இது ஆங்கில மொழியில்
மட்டும் வரும் பத்திரிகை ஆகும்.

ராஜிவ் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங்,
மோடி ஆகியோர் இப்பத்திரிகையின் அட்டைப்
படத்தில் இடம் பெற்ற இந்தியர்கள் ஆவர். (இது
நான் படித்த வரையில் மட்டுமே என்று வாசகர்களை
caution செய்ய விரும்புகிறேன்).

 ராஜிவ் காந்தி பிரதமர் ஆனதும், அவரைப் பற்றி
The youngest PM of India) என்று ஒரு கவர் ஸ்டோரி எழுதியது
டைம் பத்திரிக்கை (1985ல் என்று நினைக்கிறேன்).
அதை நான் படித்தேன். ராஜிவ் காந்தி என்ன படித்தார்
என்று இந்தியாவில் அநேகமாக ஒருவருக்கும் தெரியாது.
காங்கிரஸ்காரனுக்கு சுத்தமாகத் தெரியாது. ஆனால்
டைம் பத்திரிக்கை ராஜீவின் கல்வித் தகுதியைப்
பற்றி நிறைய எழுதி இருந்தது. சுருங்கக் கூறின்,
ராஜிவ் காந்தி குறித்த ஒரு rosy picture அந்தக் கவர்
ஸ்டோரியில் தரப்பட்டு இருந்தது.

டாக்டர் மன்மோகன்சிங்கைக் கேவலப் படுத்தி
Under achiever என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி
எழுதியது டைம் பத்திரிக்கை.

2019 தேர்தல் சூடு பிடித்த நேரத்தில், டைம் பத்திரிகை
மோடி குறித்த ஒரு அட்டைக் கட்டுரையை எழுதி
இருந்தது. இந்தியாவைப் பிரிக்கும் தலைமைப்
பிரிவினைவாதி மோடி என்று அக்கட்டுரை இருந்தது.
(India's divider in chief). மோடியை மிக மோசமாகச்
சித்தரித்த கட்டுரை அது.

மோடி அரசை ஐந்தாண்டுகள் இந்தியா தாங்குமா?
என்று ஒரு கட்டுரையும் அந்த இதழில் இருந்தது.

ஆங்கிலம் தெரியாத காங்கிரசுக்காரர்கள், மத
வெறியர்கள், குட்டி முதலாளித்துவ அற்ப ஜீவிகள்
இப்படிப் பலரும் அந்தக் கட்டுரையைத் தலையில்
தூக்கி வைத்துக் கூத்தடித்துக் கொண்டு இருந்தனர்.
சவுண்டிப் பாப்பான் நரேன் ராஜகோபாலன் அந்தக்
கட்டுரை வந்ததும் அவுத்துப் போட்டு ஆடினான்!

இந்தக் கட்டுரை எப்போது வந்தது தெரியுமா?
2019 மே 10 இதழில். அடுத்தா சில நாட்களுக்குள்
அதாவது மே 27ல் தேர்தல் முடிவுகள் வந்து
விட்டன. மோடி பெருவெற்றி அடைந்து விட்டார்.

உடனேயே தனது நிலைபாட்டைத் தலைகீழாக
மாற்றிக் கொண்டது டைம் பத்திரிக்கை. இப்போதைய
இதழில் " இந்தியாவை இணைக்கும் மோடி" என்று
கவர் ஸ்டோரி எழுதி உள்ளது.

வர்க்க வேறுபாட்டை ஒழிப்பவர் மோடி என்று
புகழாரம் சூட்டுகிறது அந்தக் கட்டுரை.

பத்தே நாட்களுக்குள் சோரம் போய் விட்டது
டைம் பத்திரிக்கை. அதன் இரண்டு கட்டுரைகளுமே
உண்மையைச் சொல்லவில்லை. டைம் பத்திரிகை
ஒரு கட்டுரை எழுதுகிறது என்றால், அதற்கு மிகத்
திட்டவட்டமான ஒரு வணிக நோக்கு உண்டு.
இதை குட்டி முதலாளித்துவ அற்பஜீவிகள் புரிந்து
கொள்ள வேண்டும்.

டைம் பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்து விட்டால்,
ஏதோ ஒரு தேவதூதன் எழுதிய கட்டுரை போல,
அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்
ஈனத்தனமான அடிமை மனப்பான்மை ஒழிய வேண்டும்.

மேலே குறித்த இரண்டு கட்டுரைகளுமே அருவருத்து
ஒதுக்க வேண்டியவை. அவை வணிக ஆதாயத்துக்காக
எழுதப் படுபவை. மோடி தோற்று விடுவார் என்று
கணித்த டைம் பத்திரிகை காங்கிரஸ் ஆட்சியில்
வணிக ஆதாயம் பார்ப்பதற்காக மோடியை இழிவுபடுத்தி
எழுதியது. தற்போது மோடி வெற்றி பெற்றதும்,
மோடியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறது.

முதல் கட்டுரையைத் தலையில் தூக்கிக் கொண்டு
ஆடிய குட்டி முதலாளித்துவ அற்பஜீவிகள் இப்போது
என்ன செய்வார்கள்?

ஊடகங்களுக்குத் திட்டவட்டமான வணிக நோக்கு
உண்டு என்றும் அந்த வணிக நோக்கின் அடிப்படையிலே
அவைகள் கட்டுரை எழுதுகின்றன என்றும் வாசகர்கள்
புரிந்து கொள்ள வேண்டும். டைம் பத்திரிக்கை எழுதிய
இரண்டு கட்டுரைகளையும் அறிவுள்ளவர்கள் புறந்தள்ள
வேண்டும். அதற்காகத்தான் இந்தக் கட்டுரையை
எழுதி இருக்கிறேன்.
******************************************************     











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக