வியாழன், 16 மே, 2019

புழுத்துப்போன புழுத்தறிவு!
-------------------------------------------
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்
கனிமொழியின் கணவர் அரவிந்தன்
சுவாமி தரிசனம் செய்தார்!
கனிமொழி வெற்றி பெற அர்ச்சனை!

ஒருபக்கம் போலியான நாத்திகப் பிரச்சாரம்!
மறுபக்கம் கோவில் கோவிலாக அரச்ச்னை!

கடவுள் இருக்கிறார் என்று நம்பினால்
கும்பிடுங்கள்! அதில் தப்பில்லை!
கடவுள் இல்லை என்று சொல்லி விட்டு
ரகசியமாக கடவுளைக் கும்பிடுவது ஈனத்தனம்!

ஒரு எளிய விஷயத்தில் பொய் புரட்டு பித்தலாட்டம்
செய்து கொண்டு, நாத்திக வேடம் போட்டுக்
கொண்டிருப்பது நரக வேதனை!

பகுத்தறிவு வேறு!
புழுத்தறிவு வேறு!
-------------------------------------------------------
புதிய இலக்கணம் ஏன் வேண்டும்?
------------------------------------------------------
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில்
தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகள்
மட்டுமே இருந்தன.

அரபு, உருது, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய
மொழிகள் அன்று இல்லை. இன்று ஈராயிரம்
ஆண்டுகளுக்குப் பின்னர், மேற்கூறிய அத்தனை
மொழிகளும், (குறிப்பாக ஆங்கிலம்) தமிழ்ச் சூழலில்
பெரும் தாக்கத்தை விளைவிக்கின்றன.
இதை மறுக்க இயலாது.

தற்பவம் தற்சமம் ஆகியவை சமஸ்கிருதம்
சார்ந்து இயற்றப்பட்டவை. இன்று ஆங்கிலம்
சார்ந்து தற்பவம், தற்சமம் உருவாக்கப்பட
வேண்டும் அல்லவா?
(cycle = சைக்கிள்; தற்சமம்)
(quantum = குவான்டம்; தற்பவம்).

பற்பொடி என்று எழுதச் சொன்னால்,
பற்ப்பொடி என்று எழுதுகிற மாணவர்கள்
குறைந்தது 50 சதம் இருப்பர். ஏன் மாணவன்
தவறாக எழுதுகிறான்? பிறமொழித் தாக்கம்
அவன் மீது அழுத்துகிறது. இதை உணர மறுப்பது
சரியன்று.

தமிழ் pre feudal காலத்தில் தோன்றி, feudal காலத்தில்
உச்சம் பெற்ற மொழி. தமிழ் ஆடசி மொழியாக 
இருந்த காலத்தில் இலக்கணம் சமைக்கப் பட்டது.

இன்று தமிழ் உற்பத்தியில் இல்லை; எனவே ஆட்சி
மொழியாகவும் இல்லை. உற்பத்தி சார்ந்த சொற்கள்
தமிழில் இல்லை. எனவே பிறமொழிகளை, குறிப்பாக 
ஆங்கிலத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த மாற்றத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தும் புதிய இலக்கணத்தின் தேவையை
உணர்த்தும் காரணிகள்.

உச்சரிப்பு பற்றி.....
இன்பம் துன்பம் ஆகிய சொற்கள் தொடக்கத்தில்
INPAM, THUNPAM என்றே உச்சரிக்கப்பட்டன.(கவனிக்கவும்
P உச்சரிப்பு)
தற்போதைய INBAM THUNBAM என்னும் உச்சரிப்பு
(கவனிக்கவும்: B உச்சரிப்பு) காலத்தால் பிந்தியதே
என்று என் பேராசிரியர் கூறினார் (முதுகலை வகுப்பில்).
எனவே உச்சரிப்புகளும் காலந்தோறும் மாறும்.

"வெட்கம்" என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்று
என்னதான் நாம் வலியுறுத்தினாலும், "வெக்கம்"
என்றுதான் மக்கள் உச்சரிக்கின்றனர். ஏன்?
இதை CLUSTER என்கிறது தொல்காப்பியம்.

எனவே உச்சரிப்பு என்பதும் மாறக்கூடியதே.
தமிழ் மொழியின் உச்சரிப்பு மட்டுமே மனித
உடலமைப்புக்கு ஏற்றது என்றும் ஏனைய மொழிகளின்
உச்சரிப்பு மனித உடலமைப்புக்கு ஏற்றதன்று என்றும்
கருதுவதில் உண்மை இல்லை. மனித உடல் சூழலுக்கு
ஏற்பத் தகவமைக்கும் பண்பு கொண்டது.

நான் அறிந்த மொழிக்கொள்கைளில் இரண்டே
இரண்டு கொள்கைகள்தான் தலைசிறந்தவை.
1. தொல்காப்பியரின் மொழிக்கொள்கை
2. மார்க்சிய மொழிக்கொள்கை.

மார்க்சிய மொழிக்கொள்கை என்பது தொல்காப்பியம்
போன்று இலக்கணம் வகுத்து வெளியிடும் கொள்கை
அன்று. மாறாக மொழி சார்ந்த கோட்பாடுகளை
முன்னிறுத்தும் கொள்கை ஆகும்.

எனவே எந்நிலையிலும் நாம் பயன்படுத்தும் மொழி
ஒரு தொடர்புறுத்த வல்ல மொழியாக
(communicable language) இருக்க வேண்டும் என்ற
மார்க்சியக் கோட்பாட்டை நான் 1000 சதம்
கடைப்பிடித்து வருகிறேன்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
விரிவஞ்சி நிறுத்துகிறேன்.
----------------------------------------------------------       



யாப்பிலக்கணத்தில் தொல்காப்பியர்
நேர்பு நிரைபு என்னும் அசைகளைக் கூறுகிறார்.
நன்னூலார் காலத்தில் நேர்பு நிரைபு அசைகள்
இல்லை.
"படையியங்கு அரவமும் பாக்கத்து விரிச்சியும்"
என்னும் தொல்காப்பியர் காலத்து இலக்கணம்
இன்று எங்கே உள்ளது? (பொருள் இலக்கணம் குறித்து)

அனைத்தும் மாறும்; மாறுகின்றன. இலக்கணம் மட்டும்
மாறக்கூடாது என்பது என்ன நியாயம் ஆகும்?
  






  
 
 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக