புதன், 1 மே, 2019

போராளி முகிலன் எங்கே?
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
---------------------------------------------------------------
கலையியல் நிறைஞர் புலவர்
வீரை பி இளஞ்சேட்சென்னி
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.
----------------------------------------------------------------
தங்கத் தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ!
பட்டுப் பூங்கொடி படர இடம் தேடுமோ!
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ!
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்!

திலீபன் சுதட்சணையின் மலர் முகத்தை மோந்து
பார்க்கிறான். முகத்தின் நறுமணம் கிறங்க வைக்கிறது.
மீண்டும் மீண்டும் அவள் முகத்தை மோந்து பார்த்துக்
கொண்டே இருக்கிறான்.

மெலிதான மழை பெய்தபின் எழும் மண்வாசத்தை
முகரும் யானைகள் அதில் கிறங்கிப்போய்
மீண்டும் மீண்டும் தம் கால்களால் மண்ணைக் கிளறி
எழும் மண்வாசனையை முகரும் என்கிறார் மகாகவி
காளிதாசர். யானைகளின் செய்கையை திலீபனின்
செயலுக்கு ஒப்பிடுகிறார் மகாகவி.

காமனின் காட்டில் எப்போதுமே கார்காலம்தான்.
32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை என்பதெல்லாம்
இல்லாத இடம் காமனின் காடு. எனவே அங்கு
எப்போதுமே மழை பொழிந்து கொண்டே இருக்கும்.

சம்பந்தப் பட்டவர்கள் இன்னும் நம்பிக்கையை
இழக்கவில்லை. பிரிவாற்றாமையை தீரத்துடன்
எதிர்கொண்டே வாழ்கின்றனர் இரு பெண்டிரும்.
வள்ளுவன் வரைந்த தமிழச்சிகள் அல்லவா?

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர் (குறள்-1160)

பிரிவாற்றாமையால் ஒரு நாள் ஏழு நாள் போலச்  செல்லும்;
மேனி பசலை உறும்; தோள்கள் மெலிவதால் வளையல்கள்
கழன்று விழும்.

உன்னை நினைத்திருப்பேன்
என்னை மறந்திருப்பேன்
கண்ணில் கலந்திருப்பேன்
நெஞ்சில் நிறைந்திருப்பேன்.

எண் என்பேன் கலை ஏடென்பென்
கண்கள் நான் என்றால் பார்வை நீ என்பேன்!

எரிக் செகாலின் லவ் ஸ்டோரி (Love Story Erich Segal)
என்ற பெரும்புகழ் பெற்ற ஆங்கில நாவலை
தமிழ்நாட்டில் எத்தனை பேர் படித்திருக்கக் கூடும்
என்று என்னால் கணிக்க முடியவில்லை.
A non zero probabilityஐ மனம் நாடுகிறது.

1970களில் என்னுடைய கல்லூரி நாட்களில் இது மிகவும்
பிரபலம். இந்த நாவலைப் படிக்காதவர்கள் மீது
தீண்டாமையே கடைப்பிடிக்கப் பட்டது. அநேகமாக
எல்லாத் தமிழ்ப் படங்களுக்கும் கரு தானம் (plot donor)
செய்தது இந்த நாவலே. கமலஹாசனின் "நம்மவர்"
உட்பட.

நாவலின் கதாநாயகி ஜென்னி காதலன் ஆலிவரிடம்
கேட்பாள்: "Did I tell you that I love you?" ஆலிவர் யோசித்துப்
பார்ப்பான். (இந்நிகழ்வை விவரித்தால் மேலும் மூன்று
பத்திகள் செலவாகும். எனவே நீங்களே நாவலைப்
படித்துத் தெரிந்து கொள்க).

லவ் ஸ்டோரியின் காலம் காதலின் காலம். இந்தக்
காலம் முடிந்து விட்டது. சமகாலம் அதாவது தற்காலம்
காமத்தின் காலம். எங்கும் காமம் கொலுவிருக்கிறது.

காதலை ஒழித்துக்கட்டி காமத்தை ஆட்சியில்
அமர்த்தி விட்டது பின்நவீனத்துவம். முகிலன் ஒரு
பின்நவீனத்துவவாதி. பின்நவீனத்துவத்தை ஏற்றுக்
கொண்டவர்கள் காதலை உதாசீனம் செய்வதும்
காமத்தைக் கொண்டாடுவதும் இயல்பே. காதல்
நேர்மையைக் கோரும். காமத்திற்கு நேர்மை
தேவை  இல்லை.

மாலையில் சந்தித்தேன்
மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது
கைகளை வந்தித்தேன்!  .          

இது தமிழகத்தில் 1960களில் காதலின் நிலை.
கைகளை வந்தித்தேன் என்பதற்குப் பலருக்கும்
பொருள் தெரியாது. அதற்கு அபிராமி அந்தாதி
படித்திருக்க வேண்டும். வந்திப்பவர் உன்னை என்ற
செய்யுளைப் படித்திருக்க வேண்டும். கண்ணதாசன்
காலத்திலேயே அதைப் படித்தவர்கள் குறைவு
என்பதால், வந்தித்தேன் என்ற சொல்லை மன்னித்தேன்
என்று மாற்றினார் கவியரசர்.

இன்று தீண்டாதவனைக் 'காதலி'யே நிந்திக்கிறாள்.
ஏனெனில் இது காதல் அல்ல; காமம்.

கோடி ஒரு வெள்ளைக்கு
குமரி ஒரு பிள்ளைக்கு!
இப்படி ஒரு பழமொழி தமிழ்நாட்டில் உண்டு. இந்தப்
பழமொழியின் காரணமாகத்தான் சிசேரியன்
மூலம் பிள்ளை பெற்றுக் கொள்ளும் பெண்கள்
தமிழ்நாட்டில் அதிகமாகி விட்டார்கள். தங்களின்
கணவன்மார்களை மணவாழ்க்கையின் வரம்புக்குள்
நிறுத்தும் பெண்களின் முயற்சி இது.

மணவாழ்க்கைக்கு அப்பாற்பட்ட உறவு
(extra marital relationship)  என்பதை பின்நவீனத்துவம்
தீவிரமாகக் கொண்டாடுகிறது. முகிலனின்
வாழ்வியல் கோட்பாடும் இதுவே.

ஒரு போராளியின் வாழ்வியல் கோட்பாடாக இது
(extra marital relationship) இருக்க முடியாது.ஒரு போராளி
கம்பீரமானவன்; அவன் சபலங்களுக்கு அப்பாற்பட்டவன்.
அவன் சபலங்களை வென்றவன். அவன் புரட்சிகர
வைராக்கியம் கொண்டவன்.

நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் மக்களும்
போராளிகளும்  தமது சொந்த வாழ்க்கையில்
பல்வேறு வைராக்கியங்களைப் பற்றி ஒழுகினார்கள்.
பல ரவுடிகள் கூட சில விஷயங்களில் வைராக்கியத்துடன்
வாழ்ந்து உதாரண புருஷர்களாக இருந்து வந்துள்ளனர்.

தமிழ் ஈழத்தில் விடுதலைப்புலிகளின் வாழ்க்கையில்
இருந்து நாம் கைக்கொள்ள வேண்டிய வைராக்கியங்கள்
நிறையவே உண்டு. எதிரி வர்க்கத்தில் கூட, சிலர்
தீவிரமான வைராக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

தென் தமிழ்நாட்டில் தனிப் பேரரசை நடத்தி வரும்
வைகுண்டராஜன் எதிரி வர்க்கத்தைச் சேர்ந்தவர்.
அவரிடம் ஒரு வைராக்கியம் உண்டு. இன்று வரை
அவர் தம் காலில் செருப்பு அணிவதில்லை.
தேரிக்காட்டில் சுடுமணலில் செருப்பு இல்லாமல்
வெறுங்கால்களுடன் மணலில் கால்கள் புதையப்
புதைய அவர் இன்றும் நடந்து வருவதைப் பலரும்
கண்டிருக்கின்றனர், இந்தக் கட்டுரை ஆசிரியர் உட்பட.

 எடப்பாடியை எதிர்க்க வேண்டுமானால் நாம்
எடப்பாடியை விட யோக்கியமாக இருக்க வேண்டும்.
ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதானால் நாம் ஸ்டெர்லைட்டை
விட யோக்கியமாக இருக்க வேண்டும்.

போராளி என்ற பிம்பத்தை தமது தனிப்பட்ட இழிந்த
ஒழுக்கக்கேடான செயல்களுக்கான கவசமாகப்
பயன்படுத்துகிறவன் போராளி அல்ல.

1) ஒரு ML கட்சியின் வெகுஜன அமைப்பில் சேர்க்கப்பட்ட
முகிலனால் அங்கு ஏன் செயல்பட முடியவில்லை? என்ன
காரணம்? பாலியல் பிறழ்வு நடத்தை.

2) கூடங்குளம் உதயகுமாருடன் ஏன் இறுதி வரை
சேர்ந்து செயல்பட முடியவில்லை? என்ன காரணம்?
பாலியல் பிறழ்வு நடத்தை.

3) மணல் கொள்ளை எதிர்ப்புப் போராட்டத்தில் அந்தப்
பெண்ணைக் கெடுத்து நாசமாக்கி, இதன் விளைவாக
அங்கும் செயல்பட முடியவில்லை. தோழர் அரங்க
குணசேகரனின் தலைமையில் நடந்த பஞ்சாயத்தில்,
குற்றம் நிரூபிக்கப் பட்ட நிலையில்  அங்கிருந்து ஓடினார்.

4) அடுத்து காவிரியாற்றுப் பாதுகாப்பு இயக்கம்.
இங்கும் அதே பாலியல் பிறழ்வு நடத்தை. பாதிக்கப்
பட்ட பெண் இவர் மீது காவல் துறையில் புகார்
கொடுத்துள்ளார். பிரிவு 376 (rape charge), பிரிவு 420
(ஏமாற்றி மோசடி செய்தல்) ஆகிய பிரிவுகளில்
இவர் மீது வழக்கு. குற்றம் நிரூபிக்கப் பட்டால்
10 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும்.

மேற்கூறிய அனைத்து விவகாரங்களையும் நான்
நன்கறிவேன். எண்-3, எண்-4ல் உள்ள பாதிக்கப்பட்ட
பெண்கள் என்னிடம் முறையிட்டு உள்ளனர்.
எண்-4ல் குறிப்பிட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின்
பக்கம் நான் உறுதியாக நிற்கிறேன். அவருக்கான
நியாயத்தைப் பெற்றுத் தருவேன்.  .

தென் மாவட்டங்களில் முகிலன் தலைமறைவாக
இருப்பதாக முகிலனின் மனைவி கருதுகிறார்.
அவரை மேலும் புண்படுத்தாமல், முகிலன்
தமது அஞ்ஞாத வாசத்தை முடிவுக்குக் கொண்டு
வர வேண்டும்.
**********************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக