செவ்வாய், 30 ஏப்ரல், 2019

மாலையில் சந்தித்தேன்
மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது
கைகளை வந்தித்தேன்!

தங்கத் தாமரை மலர்ந்த பின்பு மூடு மோ 
பட்டுப் பூங்கொடி படர இடம் தேடுமோ
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ

இந்த அழகு மல்லிகை தேவ கன்னிகை தானமா?
மழை காமன் காட்டில் பெய்யும் காலம் அம்மா? 

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்!

உன்னை நினைத்திருப்பேன்
என்னை மறந்திருப்பேன்
கண்ணில் கலந்திருப்பேன்
நெஞ்சில் நிறைந்திருப்பேன்.

தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி
நம்ம கதையிலே இருக்குதடி
சிங்கார மதுரையில் வெள்ளையம்மா
கதை தினம் தினம் நடக்குதடி

அடி தப்பாமல் நான் உன்னைச் சிறை எடுப்பேன்
ஒண்ணு ரெண்டாக இருக்கட்டுமே

கச்சிருக்கும்போது கரும்பானேன்
கைக்குழந்தை வச்சிருக்கும்போது வேம்பானேன்/
வேண்டும்போது உள்ளங்கைத் தேன் ஆனேன்
ஓர் மழலை பெற்ற பின்பு உள்ளங்கைத்தேனோ நான் உனக்கு  

கோடி ஒரு வெள்ளைக்கு
குமரி ஒரு பிள்ளைக்கு!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக