கப்போன் பாதிரியாரின் வாரிசுகள்!
--------------------------------------------------------
காங்கிரசும் பாஜகவும் இரண்டுமே பாசிசக்
கூறுகளைக் கொண்டிருப்பவை. இந்திய அரசை
நடத்தும் வலிமை பெற்ற இவ்விரு கட்சிகளும்
தேவையானபோதெல்லாம் அரைப்பாசிச அல்லது
முழுப்பாசிச நடைமுறைகளை மேற்கொள்ளும்
என்ற வரையறுப்பு உள்ளது. இது பழங்காலத்திய
வரையறுப்பு அல்ல. புதியதுதான்.
பாசிச எதிர்ப்பு முன்னணி என்பது தேர்தல்
கூட்டணி அல்ல. அது வர்க்கங்களின் கூட்டணி.
இத்தகைய ஓர் எதிர்ப்பு முன்னணியைக் கட்டுவது
மிகவும் சிரமமான பாணி. பாசிச எதிர்ப்பைக்
கொள்கையாகக் கொண்டு, பாசிச எதிர்ப்பில்
சமரசமின்றி ஊன்றி நிற்கும் அனைவரின்
பொறுப்பும் கடமையும் இது. பாசிச எதிர்ப்பணியைக்
கட்டும் சக்திகளின் அகநிலை வலிமையைப்
பொறுத்தே எதிர்ப்பணியானது அமையும்.
இதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று
அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களே.
சந்தர்ப்பவாத பூர்ஷ்வா கட்சிகளின் மீது பிரமை
கொண்டு, அவர்கள் ஒரு சொர்க்கத்தைப் படைத்துக்
காட்டுவார்கள் என்று தானும் ஏமாந்து மக்களையும்
ஏமாற்றுவது ஒன்றும் புதிதல்ல. ரஷ்யாவில் கப்போன்
பாதிரியார் செய்து காட்டிய ஒன்றுதானே! அதில்
பயனில்லை.
கடந்த பல தேர்தல்களில் பங்கேற்றுள்ளது
லிபரேஷன் கட்சி. இந்த 2019 தேர்தலிலும்
போட்டி இடுகிறது. இக்கட்சியினர் தேர்தலில்
பங்கெடுத்ததன் மூலம் சாதித்ததுதான் என்ன?
தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று கரடியாகக்
கத்தும் அன்பர்கள், லிபரேஷன் கட்சியின்
தொடர்ச்சியான பங்கேற்பால் விளைந்த நன்மை
என்ன என்று கூற வேண்டாமா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக