சனி, 27 ஏப்ரல், 2019

தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவும்
புழுவினும் இழிந்த கூத்தாடி ராகவா லாரன்ஸ் மற்றும்
குட்டி முதலாளித்துவ ஊடக முட்டாள்களின் அறியாமையும்!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
1) ஆசிய தடகளப் போட்டி கத்தார் நாட்டின் தலைநகர்
தோஹாவில் (Doha Qatar) நடைபெற்றது.
2) இதில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம்
வந்து தங்கம் வென்றுள்ளார் கோமதி. இந்த 800 மீட்டர்
தூரத்தைக் கடக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம்
2:02.70  நிமிடம் ஆகும்.
3) கோமதி மாரிமுத்து (வயது 30) திருச்சியைச் சேர்ந்தவர்.
இவர் மத்திய அரசு ஊழியர் ஆவார். தற்போது இவர்
வருமானவரித்துறையில் பெங்களுரூவில் பணியாற்றி
வருகிறார்.
4) இவர் ஸ்போர்ட்ஸ் ஒதுக்கீட்டில் (sports quota) பணிக்கு
அமைத்தப் பட்டுள்ளார். இவருக்கு வருமானவரித்துறை
குடியிருக்க வீடு (குவார்ட்டர்ஸ்) வழங்கி உள்ளது.

5) இவர் இரண்டு காலிலும் வெவ்வேறு நிறத்தில் உள்ள
காலணிகளை (ஷூ) அணிந்து ஓடும் காட்சி
புகைப்படமாக ஏடுகளிலும் சமூக வலைத்தளங்களிலும்
வெளியாகி உள்ளது.

6) வறுமையின் காரணமாகவே அவர் ஒவ்வொரு காலிலும்
ஒவ்வொரு நிறத்தில் ஷூ அணிந்திருக்கிறார் என்பதாக
குட்டி முதலாளித்துவ ஊடக முட்டாள்கள் பொய்ச்செய்தி
பரப்பி வருகின்றனர்.

7) வெவ்வேறு நிறத்தில் ஷூ அணிவதற்குக் காரணம்
அவருடைய பயிற்சியாளரின் அறிவுரையே. கோமதி
மட்டுமல்ல, பல ஓட்டப்பந்தய வீரர்களும் இவ்வாறு
அணிவது ஸ்போர்ட்ஸ் சார்ந்த விஷயமே. அதற்கு
வறுமை காரணம் அல்ல.  அறிவியலுக்கு  எதிரான
பிற்போக்கான செய்திகளைப் பரப்ப வேண்டாம்.

8) எவ்வளவு குறைத்து மதிப்பிட்டாலும் கோமதியின்
மாதச்சம்பளம் ரூ 30,000 ஆகும். பொய்களை எழுதுகிற
ஊடக முட்டாள்களின் சம்பளத்தை விட கோமதியின்
சம்பளம் ரூ 10,000 அதிகம்.

9) போட்டிகள் அறிவிக்கப்பட்டு தீவிரமாகப் பயிற்சி
எடுக்கும் காலத்தில், கோமதி வாரத்துக்கு ஒருநாள்
அலுவலகத்துக்கு வந்து கையெழுத்துப் போட்டால்
போதும். இது ஸ்போர்ட்ஸ் கோட்டா ஊழியர்களுக்கு
அவர்களின் அலுவலகம் வழங்குகிற வாய்ப்பு.

10) கோமதியின் வறுமைப் பின்னணி அவர் மத்திய
அரசுப் பணியைப் பெறுவதற்கு முன்னதாக இருந்த
நிலை. ஒரு விளையாட்டு வீரரை எப்படி நடத்த
வேண்டும், எப்படி கெளரவிக்க வேண்டும்  என்பது
வருமானவரித் துறைக்குத் தெரியும். எனவே குட்டி
முதலாளித்துவ ஊடக முட்டாள்கள் சமூக
விரோதக் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று
எச்சரிக்கிறோம்.
*****************************************************    




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக