செவ்வாய், 16 ஏப்ரல், 2019

Numerator, Denominator என்று சொல்லும்போது,
அதைப்பற்றி முதன் முதலில் தெரிந்து கொள்ளும்
ஒரு மாணவன் தன்னுடைய சிந்தனையில் ஒரு
தகு பின்னத்தையே எண்ணிக் கொள்கிறான்.
அதாவது Numerator சிறிதாகவும் Denominator
பெரிதாகவும் உள்ள ஒரு பின்னத்தையே மனதில்
நினைக்கிறான். உதாரணம்: 3/4, 1/3, 5/8 முதலியன.

ஆனால் இதை உணர்த்தும் சொற்கள் எதிர்மறையாகப்
பொருள் தருகின்றன. Numerator = தொகுதி. எல்லாவற்றையும்
தொகுத்துத் தரும் ஒரு பெரிய எண்ணைப் பற்றிய
சித்திரத்தை இச்சொல் உணர்த்துகிறது. பல வீடுகள் சேர்ந்த
இடம் தொகுதி (block) என்ற பொருள் ஏற்கனவே
இருக்கிறது. இவ்வாறு எதிர்மறையான பொருள்
உணர்த்தப் படுகிறது.

Denominator = பகுதி என்ற சொல் சிறிய எண்ணைப் பற்றிய
ஒரு சித்திரத்தைத் தருகிறது. பகுதி = part. பகுதி என்ற
சொல்லே முழுமையற்ற வெறும் பகுதிதான்
(just a part of the whole) என்ற பொருளை அதாவது
எதிர்மறையான பொருளைத் தருகிறது.

பெருவாரியான தமிழாக்கம் இப்படித்தான் இருக்கிறது.  
தமிழில் புதிய கலைச்சொற்களை உருவாக்கும்போதெல்லாம்,
அல்லது தமிழில் அறிவியலை எழுதும்போதெல்லாம்
பிணத்துக்குச் சிங்காரிக்கிறோமோ என்ற எண்ணம்
எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக