புதன், 24 ஏப்ரல், 2019

(2) கடவுளே நினைத்தாலும்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் EVMகளில்
முறைகேடு செய்ய இயலாது!
நம் நாட்டின் தனித்த கணினிகள்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
நம் நாட்டின் EVMகள் அனைத்தும் எந்த
வலைப்பின்னலுடன் இணைக்கப்படாத தனித்த
கணினிகள் (standalone and non networked).
நம் நாட்டில் ஒட்டு மொத்த தேர்தல் நடைமுறையும்
முழுவதுமாகக் கணினிமயம் ஆக்கப் படவில்லை.
வாக்குப்பதிவு மட்டுமே இங்கு கணினி மூலமாக
(அதாவது EVMகள் மூலமாக) நடைபெறுகிறது. மீதி
அனைத்தும் மனிதச் செயல்பாடுகள்தான் (manual actions).

தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் சராசரியாக
250 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்த 250 சாவடிகளையும்
ஒரு LAN மூலம் இணைக்கலாம். (LAN = Local Area Network).

தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து
சற்றேறக்குறைய மொத்தம் 60,000 வாக்குச்சாவடிகள் உள்ளன
இந்த 60,000 வாக்குச் சாவடிகளையும் ஒரு WAN மூலம்
இணைக்கலாம் (WAN = Wide Area Network).

அல்லது ஒவ்வொரு வாக்குச் சாவடியையும்
இணையதள வலைப்பின்னலுடன் (internet)
இணைக்கலாம். ஆனால் அப்படி எந்த ஒரு
வலைப்பின்னலுடனும் EVMகளை இணைக்கக் கூடாது
என்ற முடிவை  EVMகளுக்காக அமைக்கப்பட்ட
இந்திய விஞ்ஞானிகள் குழு எடுத்தது. 1980களில்
விஞ்ஞானிகள் எடுத்த இந்த முடிவு மகத்தான
முக்கியத்துவம் வாய்ந்தது. பெரும் தீர்க்க
தரிசனத்துடன்  எடுக்கப்பட்ட இந்த முடிவின் மூலமாக
இந்திய EVMகள் STAND ALONE வகைப்பட்ட தனித்த
கணினிகளாக இன்று வரை இருந்து வருகின்றன.
    
எனவே மற்ற நாடுகளைப் போல் அல்லாமல், நமது
EVMகள் அனைத்தும்  தனித்தவையாக எந்த  ஒரு வலைப்பின்னலுடனும் இணைக்கப் படாதவையாக
(stand alone and non networked) இருப்பதால், இவற்றை
ஹேக் (hack) செய்வது எளிதல்ல.இந்த அம்சத்தில்
இவை பிற நாடுகளின் EVMகளை விடப் பாதுகாப்பானவை.

வீட்டில் கதவைப் பூட்டிக் கொண்டு பாதுகாப்புடன்
இருக்கும் பெண் போன்றது தனித்த EVM.
வெளியில் நெரிசலில் சாலையில் நடந்து செல்லும் பெண்
போன்றது வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்ட EVM.

நம் நாட்டின் EVMகளுடன் எந்த ஒரு
"தொடர்புக்கருவி"யையும் (communication device)
பொருத்த முடியாது. அதாவது ஒரு ப்ளூ டூத் (Bluetooth)
கருவியையோ அல்லது வேறு ஏதாவது வயர்லெஸ்
கருவியையோ (Wi-Fi device) நம் நாட்டு EVMகளில்
பொருத்த முடியாது.

பொருத்தவே முடியாதபோது, அதை வெளியே வேறொரு
இடத்தில் இருந்து கொண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம்
இயக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

எந்த அதிர்வெண்ணில் (any frequency) சமிக்ஞைகள்
அனுப்பப் பட்டாலும், அதைப் பெறுவதற்கான
எந்தவொரு ஏற்பியும் (frequency receiver) நம் EVMகளில்
கிடையாது. ஈரிலக்க முறையில் (digital) வரும் சமிக்ஞைகளை
குறியீட்டு நீக்கம் செய்யவல்ல எந்தவொரு குறியீட்டு
நீக்கியும் (decoder) நம் EVMகளில் கிடையாது.

அறிவியல் மாணவர்கள் பயன்படுத்தும் கால்குலேட்டர்
போன்றதே நமது EVM. உங்கள் வீட்டில் உங்கள் மேஜையில்
இருக்கும் கால்குலேட்டரில் வெளியில் வேறெங்கோ இருந்து
கொண்டு ஒருவரால் திருத்தம் செய்ய இயலாதல்லவா!
அதைப்போலவே நம் நாட்டு EVMகளிலும் ரிமோட் கன்ட்ரோல் மூலம் திருத்தம் செய்ய இயலாது.

இந்தக் கட்டுரை சொல்கிற உண்மையைப் புரிந்து
கொள்ள வேண்டுமென்றால், STAND ALONE கணினிக்கும்
Network connected கணினிக்கும் இடையிலான பாரதூரமான
வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு
கணினி பற்றிய ஆழமான பரிச்சயம் (robust literacy)
வேண்டும். குறைந்தது ப்ளஸ் டூ வரையிலான
கணினி அறிவியல் (computer science) படித்திருப்பது
அவசியமாகிறது.
-------------------------------------------------------------------------
தொடரும்
***************************************************

HATE THE SIN BUT NOT THE SINNER BIBLE.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக