செவ்வாய், 16 ஏப்ரல், 2019

எது தமிழ்ப் புத்தாண்டு..?
====================
தமிழ்ப் புத்தாண்டு நாள்
என்பதே பண்டை இலக்கியங்களில் கிடையாது. நமக்கு "விருப்பமான உண்மைகள்" என்பது வேறு, "உண்மையான உண்மைகள்" என்பது வேறு. தமிழ் என்பது தொன்மம். தொன்மத்தில், நம் சுய விருப்பு-வெறுப்புகளை ஏற்றி விடக் கூடாது, இன்று இன்றாக இருக்கட்டும். தொன்மம் தொன்மமாக இருக்கட்டும். தமிழைத் தமிழாக அணுகும் முயற்சி இது. எது தமிழ்ப் புத்தாண்டு தையா? சித்திரையா?
பிரபவ-விபவ என்னும் 60 ஆண்டுகள், தமிழ் ஆண்டுகளே அல்ல! அத்தனையும் சம்ஸ்கிருதப் பெயர்கள்! வராஹமிஹிரர் பயன்படுத்திய சுழற்சி முறை இவற்றுக்கு 60 சம்வத்ஸரங்கள் என்றே பெயர். இவை ஆண்டுகள் அல்ல.
ஒரு முறை நாரத முனிவர் கண்ணனிடம் நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க,
அதற்குக் கண்ணன் நான் எந்த வீட்டில் இல்லையோ அந்தப் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்று கூற, நாரதர் 60,000 வீடுகளிலும் தேடிப்பார்த்த்தால் எல்லா இடத்திலும் கண்ணன் இருந்தானாம். ஏமாந்த நாரதர் வெறுங்கையுடன் திரும்பி கண்ணனிடம் வந்தாராம்.
கண்ணன் யமுனையில் நாரதரை குளிக்கச் செய்ய ஏவ, முனிவர் அவ்வாறே செய்து ஒரு அழகுள்ள பெண்ணானார். அவளுடன் (நாரத முனிவர்) கண்ணன் அறுபது வருடம் அடங்காக் காமம் கொண்டு கலந்து அறுபது பிள்ளைகள் பெற்றனர். அவர்கள் பெயர் பிரபவ முதல் அக்ஷய இறுதியானவர்களாம். இவர்களே வருடங்கள் என புராணம் கூறுகிறது. இதுவா தமிழ்ப் புத்தாண்டு..? அபிதான சிந்தாமணி என்று பின்னாள் ’கலைக் களஞ்சியமும்’ இந்தப்பொய்க் கதைகளை உறுதி செய்கிறது! இந்த சமஸ்கிருத ஆபாசக் கதைகளால் கூச்சப்பட்டார்களோ என்னவோ 60 சம்ஸ்கிருத வருஷங்களையும்.. "வலிந்து" தமிழில் மொழிபெயர்த்து, முழிபெயர்த்து, திருட்டுத்தனமாப் பரப்பி விட்டார்கள் இவை தமிழென்று. எந்தவொரு தமிழ் இலக்கியத்திலும் விகாரி, ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி என்ற பெயர்கள் இல்லவே இல்லை.
புத்தாண்டு தொல்காப்பியத்தில் இல்லை! ஆனால், எதை முதல் பருவமாகத் தொல்காப்பியம் சொல்கிறது?
"காரும் மாலையும்-முல்லை
குறிஞ்சி, கூதிர், யாமம்' என்மனார் புலவர்"
கார் காலத்தையே (மழைக் காலம்) திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்! முதல் திணை என்பது முல்லை, முதற் காலம் என்பது மழைக் காலம் ஆகும். இங்கு புத்தாண்டு பற்றிய குறிப்பில்லை என்றாலும் தொல்காப்பியத்துக்கு உரை செய்த நச்சினார்க்கினியர் கார்காலமே ஆண்டின் துவக்கமென வெளிப்படையாக் காட்டிச் செல்வார்.
நச்சினார்க்கினியர் உரை:
ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை (ஆவணி) முதலாக,
தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை (ஆடி) ஈறாக..
வந்து முடியுந் துணை ஓர் ஆண்டாம்.
நச்சினார்க்கினியர் சொல்வது போலவே, இன்றும் மலையாளப் புத்தாண்டு அமைந்துள்ளது, அறிவீர்களா? சிங்க மாதமே (ஆவணி) மலையாள முதல் மாதம்!
மலையாளப் புத்தாண்டு (அ) கொல்லம் ஆண்டு, சித்திரை விஷூக் கனி அல்ல! ஆவணிச் சிங்க மாதமே! முன்பே சொன்னது போல், கார்காலமே, மங்கலம் கருதி.. முதற் காலமாக அமைந்தது! மலையாளத்தில் மட்டுமல்ல! நம் ஆதித் தமிழ்த் தொல்காப்பியத்திலேயே!
பல பாடல்கள், "தைஇத் திங்கள்" பற்றிப் பேசுகின்றன, ஆனால் அதுதான் "ஆண்டின் துவக்கம்" -ன்னு சங்கத் தமிழ் சொல்கிறதா என்றால் இல்லை.
#நற்றிணை -தைஇத் திங்கள் தண்கயம் படியும் பெருந்தோள் குறுமகள்
#குறுந்தொகை - தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
#புறநானூறு - தைஇத் திங்கள் தண்கயம் போல் கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்
#ஐங்குறுநூறு - நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் திங்கள் தண்கயம் போல
#கலித்தொகை - தையில் நீராடித் தவம் தலைப்படுவாயோ?
இவ்வளவு பாடல்கள் இருப்பினும் தை "ஆண்டின் துவக்கம்" என்று எங்கும் நேரடியாக சொல்லப் படவில்லை. தமிழறிஞர்கள் பலர் 1935 இல், பச்சையப்பன் கல்லூரியில் (அதன் பின்பு திருச்சியிலும்) ஒருங்கே கூடினார்கள். வள்ளுவரின் காலம் பற்றி, ஆய்ந்து அறிவித்தார்கள், மறைமலை அடிகள், திரு.வி. க, ந.மு. வேங்கடசாமி நாட்டார், சோம. சுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் மற்றும் பலர் அறிவித்தது.
திருவள்ளுவர் பெயரில், நாம் ஒரு தொடர் ஆண்டினைப் பின்பற்றல் நலம்! அதையே "தமிழ் ஆண்டு" என இனிக் கொள்ள வேண்டும்! திருவள்ளுவர் காலம் கி.மு. 31 , எனவே ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு! (2019 + 31 = 2050). மறைமலை அடிகளின் மாணவரான நாவலர் சோமசுந்தர பாரதியார், வள்ளுவர் ஆண்டை உறுதி செய்ததோடு, தை-02 ஆம் நாளை வள்ளுவர் திருநாள் எனவும் வகுத்தளித்தார்! அதற்குத் தமிழறிஞர்களும் இசைவு தந்தனர்; அதுவே 1971-இல் அரசு விழாவாகவும் ஆனது!
தமிழ் இலக்கியங்களில் இது தான் புத்தாண்டு என்று நேரடிக் குறிப்பேதும் இல்லை! மழை துவங்கும் "கார் காலம்" எனும் ஆவணி (அல்லது) "பனி முடங்கல்" (winter solstice) எனும் தை முதன்மைக் காலமாகக் கொள்ளும் திணை மரபு, தொல் தமிழில் உள்ளது! பண்டைத் தமிழர்கள் ஆண்டுக்கென்று எந்தப் பெயரோ, எண்ணோ வைக்கவில்லை, கண்டிப்பாக பிரபவ-விபவ-ருத்ரோத்காரி என்று ஒருக்காலும் இல்லை. ஒவ்வொரு ஆண்டுக்கும், தொடர்ச்சியான எண் கொண்டு குறிக்கும் வழக்கமும் பண்டைத் தமிழரிடம் இல்லை. ஒரு பெரிய இனத்தின் ஆளுமையின் பிறப்பை ஒட்டி அல்லது மன்னன் ஆட்சிக் கட்டில் ஏறிய ஆண்டையொட்டி, எண்ணால் குறிக்கும் வழக்கம் பின்னாளில் வந்ததே.
அதற்காக தமிழர்களுக்குக் கால அளவே தெரியாது என்று முடிவு செய்ய இயலாது. உலகெங்கும், பல பண்பாடுகளில் ஆண்டுகளுக்குப் பெயர்கள் இல்லை; எண்ணால் குறிக்கும் வழக்கமே உள்ளது. எனவே தமிழறிஞர்கள், மறைமலை அடிகள் தலைமையில் கூடிச் சொன்ன திருவள்ளுவராண்டின் துவக்கமே தமிழ் ஆண்டின் துவக்கம் என்றே கொள்ள வேண்டும். இந்த 60 சமஸ்கிருத் ஆண்டு அசிங்கத்தில் இருந்து ஒழியவும் தொடர்ச்சியான எண் முறைக்கும் நம் தமிழினத் தலைமகன் வள்ளுவரை அடிப்படையாக வைத்து ஒரு புதிய கணக்கிடும் முறை, கைக்கொள்ளப் பட்டது அதுவே தமிழ்ப் புத்தாண்டு.
தைத்திங்கள் தமிழ் இலக்கியங்களில் அதிகமாகப் பேசப்படும் மாதம், தை என்றால் மதம் கலவாமல் தமிழ் மட்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக