வெள்ளி, 12 ஏப்ரல், 2019


புரட்சி என்பது மாலை நேரத்து விருந்து அல்ல!
---------------------------------------------------------------------
மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இது 17ஆவது தேர்தல். இதற்கு முன்பு 16 தேர்தல்கள்
நடந்து 16 முறை மக்களவை (Lok Sabha) அமைக்கப்
பட்டுள்ளது. பல குட்டி முதலாளித்துவ மூடர்களுக்கு
இந்த உண்மை தெரியாது.

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்பது போல,
இந்தியாவில் இதுதான் முதல் தேர்தல் என்ற
உற்சாகத்துடன் குட்டி முதலாளித்துவ விடலைகள்
சுயஇன்பம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

சில முதிர்ந்த விடலைகள் நடப்பது நாடாளுமன்றத்
தேர்தல் என்பதையே மறந்து விட்டு, ஏதோ மூன்றாம்
உலகப்போர் நடப்பது போலவும் அதில் இவர்கள்
எல்லாம் பாசிச எதிர்ப்புப் பாத்திரம் மேற்கொண்டு
இருப்பதாகவும் கற்பனை செய்து கொண்டு, ஒரு வித
பாசிசச் சுய இன்பம் அனுபவித்துக் கொண்டு
திரிகிறார்கள். இவர்களில் ஒரு பயலுக்கும் கூட
பாசிசத்துக்கும் பாயாசத்துக்கும் உள்ள வேறுபாடு
தெரியாது.

இவர்கள் முகக்கண்ணாடியில் தங்கள் முகத்தைப்
பார்க்கின்ற போது, அதில் இவர்களின் சொந்த முகம்
தெரிவதில்லை! மாறாக ஜார்ஜ் டிமிட்ரோவின்
முகம்தான் தெரிகிறது.

நடைபெற்றுக் கொண்டிருக்கிற பெரும் பாசிச எதிர்ப்பு
உலகப்போரில்  கலந்து கொள்ள இவர்களின் பட்டாளம்
மத்திய சென்னைக்குச் செல்கிறது. பெரும் கார்ப்பொரேட்
கொள்ளையன் தயாநிதி மாறனை ஆதரித்துப்
பிரச்சாரம் செய்து இந்தக் குட்டி முதலாளித்துவப்
போராளிகளின் நுரையீரலில் இருந்து ரத்தம் வருகிறது.

பல்லக்கில் தயாநிதி மாறனை, ஜகத் ரட்சகனை,
புழுவினும் இழிந்த பாரிவேந்தரை இன்ன பிற
சாராய ஆலை அதிபர்களை அமரவைத்து தோள்பட்டை
காய்ச்சுப் போகிற வரை  பல்லக்கைச் சுமந்து
கொண்டு தொகுதி முழுவதும் சுற்றி வருகிறார்கள்
இந்தக் குட்டி முதலாளித்துவ விடலைகள்.

இந்தப் புழுவினும் இழிந்த விடலைகள் 
புரட்சியாளர்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள்:
" வாருங்கள், திமுகவை ஆதரிப்போம்; அதுதான்
புரட்சி" என்று.

புழுவினும் இழிந்த குட்டி முதலாளித்துவச் சுய இன்ப
ஈனப்பயல்களே, நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும்
சோரம் போங்கள்.

ஆனால் எங்களுக்குப் பாடம் எடுக்காதீர்கள்.
புரட்சி என்பது மாலை நேரத்து விருந்து
அல்லடா குட்டி முதலாளித்துவ கீழ்மகன்களே!

மீண்டும் கூறுகிறோம்!
நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஆதரித்துக்
கொள்ளுங்கள். அது உங்களைச் சார்ந்தது.

நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்களோ அதே ஆசாமிகளை
நாங்களும் ஆதரிக்க வேண்டும் என்று சொல்ல
வேண்டாம். அவ்வளவுதான்.
*********************************************************


புரட்சி பற்றி குட்டி முதலாளித்துவம் எங்களுக்கு
அறிவுரை தர வேண்டாம். இதில் வசவு எதுவும் இல்லை.
எவனோ ஒரு புழுவினும் இழிந்த குட்டி முதலாளித்துவ
விடலையின் உளறலை நீங்கள் பைபிளாகக்
கருதலாம். எங்களுக்கு அந்த அவசியம் ஏதும் இல்லை.

இங்கு குட்டி முதலாளித்துவத்துக்கு எவ்விதமான
கருத்து சுதந்திரத்தையும் நாங்கள் தருவதில்லை.


ஒரு மார்க்சிய லெனினியக் கட்சி, சமூக நிலைமைகளை
ஆய்வு செய்து ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கி
உள்ளது. அதில் காங்கிரசும் பாஜகவும் இந்திய
பாசிசத்தின் இரு முகங்கள் என்று நிரூபிக்கப்
பட்டுள்ளது. நாங்கள் கட்சித் திட்டப்படி செயல்
படுகிறோம். இதில் மறுபேச்சுக்கு இடமில்லை.
இதில் விவாதிக்க ஏதுமில்லை.

வே பாரதி


பாசிச பாஜகவின் ஹெச் ராஜாவை எதிர்க்கும்
பாசிசமற்ற காங்கிரஸ் வேட்பாளர்
கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து
கூட்டணி மேடையில் தோழர் கார்முகில் பேச வேண்டும்!


அவர் பகுத்தறிவாளர் என்று இங்கு வந்து வீம்பு
பண்ண வேண்டாம். இதைப்போல ஆயிரம்
படங்கள் உள்ளன. இதில் மூளையைக் கசக்க
வேண்டாம். இது கறாரான பொருள்முதல்வாதத்துக்கு
உரிய இடம். அருள்கூர்ந்து இதை உணர்க.
நெற்றியில் குங்குமம் வைத்திருப்பது இறையருள்
சார்ந்த விஷயம். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக