திங்கள், 1 ஏப்ரல், 2019

போலிப்பயல்களே,
ஒன்று ஈழ ஆதரவைக் கைவிடுங்கள்!
அல்லது காங்கிரஸ் ஆதரவைக் கைவிடுங்கள்!
இரண்டிலும் சவாரி செய்ய முடியாது!  மருதுபாண்டியன்


இந்தப் பதிவு அண்ணன் தியாகு அவர்களின் நிலைபாடு
குறித்த எதிர்வினை மற்றும் மறுப்பு. இது நக்சல்பாரிகளின்
1970 வேலைத்திட்டத்தைப் பேசுபொருளாகக் கொண்டது.
தாங்கள் பிறழ்புரிதலுக்கு இலக்காகி இருக்கிறீர்கள்.
தமது நிலைபாடு மார்க்சிய வழியிலானதுதான் என்று
நிரூபிப்பது அண்ணன் தியாகு அவர்களின் பொறுப்பு.
அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் நீங்கள்
அவருக்கு உதவ இயலாது. 1970 வேலைத்திட்டம் என்பது
இரும்பு அடிக்கும் இடம் .எனவே தங்களுக்கு இச்சூழலில்
பொருத்தமான பாடல் ஒன்றை டெடிகேட் பண்ணுகிறேன்.

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறைவன்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன் றும்அறிந் திலனே.     

பார்ப்பன ஞானி என்பது வசவு சார்ந்தது அல்ல.
அப்படிக் கருதுவது சிறுபிள்ளைத்தனமான
பிறழ்புரிதல்  அது ஒரு நிலைபாடு சார்ந்தது.
அது வசவு அல்ல. பார்ப்பன ஞானி எமது தாக்குதலின்
இலக்காக இருந்தவர்: இருப்பவர். எனவே கணைகள்
பாயவே செய்யும். கணைகளைப் பாய்ச்சுவது
எமது வேலை.



இங்கு பார்ப்பன ஞானி கூறியது பற்றி விவாதிக்க
விரும்பவில்லை. குட்டி முதலாளித்துவ ஆசாமிகளுக்கு
உகந்த விஷயத்தை அவர் கூறி இருக்கலாம். அதில்
எமக்கு ஆட்சேபம் எதுவும் இல்லை.

இங்கு அண்ணன் தியாகு அவர்கள் ஞானியின்
கோட்பாட்டைப் பற்றி ஒழுகுவது குறித்து விமர்சனம்
எழுப்பப் படுகிறது. குட்டி முதலாளித்துவ நபர்களுக்குப்
பொருந்துகிற ஒரு கோட்பாட்டை அண்ணன் தியாகு
அவர்கள் மேற்கொள்ள முடியாது. இங்கு இதுதான்
விமர்சனம். இது ஞானியை விமர்சிக்கும் பதிவல்ல.
Mr Gnani is a MISFIT here. 


இது மிகுந்த வெறித்தனமானது. உண்மைக்குப் புறம்பானது.
நீங்கள் உங்கள் கூற்றை நிரூபிக்க வேண்டும். நீங்கள் உங்கள்
வரம்பை வெகுவாக மீறுகிறீர்கள். ஒருமுறை கூட நேரில்
பார்த்திராத என்னைப் பற்றி உங்களுக்கு எதுவும்
தெரியாத நிலையில், கேவலம் ஒரு புழுவினும் இழிந்த
சவுண்டிப் பாப்பானை விட எனது வாழ்வு குறைந்தது
என்று கூறுவதற்குப்பெயர்தான் குட்டி முதலாளியத்
திமிர். இது  தண்டனைக்குரிய குற்றம்.   

தியாகு மார்க்சியத்தில்  நீடிக்கிறாரா அல்லது
வெளியேறி விட்டாரா என்பதை அவர்தான் கூற
வேண்டும். அவருக்குப் பதிலாக நீங்கள் கூற
முடியாது. மார்க்சியத்தையே ஏற்றுக் கொள்ளாத
நீங்கள், மார்க்சிய வேலைத்திட்டம் சார்ந்த
ஒரு விவாதத்தில் சம்மந்தமே இல்லாமல்
புகுந்து கொண்டுகருத்துச் சொல்லுவது
சரியா என்று நீங்களே சிந்தித்து முடிவுக்கு வரவும்.

திரும்பத் திரும்பக் கூறுகிறேன். இங்கு ஞானியை
விமர்சிக்கவில்லை. இங்கு தியாகுதான் விமர்சிக்கப்
படுகிறார். ஞானி விமர்சனத்துக்கு அருகதை இல்லாதவர்.

ஞானி ஆளும் .வர்க்கத்தின் பக்கம் நின்றவர்.
குட்டி முதலாளித்துவ ஆசாமிகளுக்கு உகந்த
சில கருத்துக்களைச் சொன்னவர். அவர் பாட்டாளி
வர்க்கத்தின் பக்கம் நின்றவர் அல்லர். எனவே அவரைப்
பற்றிய எமது மதிப்பீட்டில் தவறில்லை.

ஞானி என்ன கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டத்தை
ஏற்றுக் கொண்டு செயல்பட்டவரா? இல்லையே. இதெல்லாம்
நிரூபிக்கப்பட்ட உண்மை. நீங்கள் அவரை இறைத்தூதராகக்
கொண்டாடலாம். எமக்கு ஆட்சேபணை இல்லை.
இங்கு 1970 வேலைத்திட்டத்தை விவாதிக்கிற இடத்தில்
ஞானியோ நீங்களோ எப்படிப் பொருந்தி நிற்க முடியும்?
    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக