வெள்ளி, 19 ஏப்ரல், 2019

காட்டிக் கொடுத்தது யார்?
டைம்ஸ் ஆப் இந்தியா ஏடு அம்பலப் படுத்துகிறது!
துரைமுருகன் இடங்களில் பிடிபட்ட பணம்!
---------------------------------------------------------------------
துரைமுருகனின் உறவினர் ஒருவரே காட்டிக் கொடுத்தார்
என்று ஆங்கில ஏடு சொல்கிறது.

எந்த வங்கியில் பணத்தை மாற்றினார்கள்?
மாற்றிக் கொடுத்த வங்கி அதிகாரி யார்?

கனரா வங்கியில் சீனியர் மானேஜராகப் பணியாற்றும்
தயாநிதி என்ற அதிகாரி மாற்றிக் கொடுத்துள்ளார்.

எல்லா உண்மைகளும் வெளியாகி விட்டன.
நடவடிக்கை எடுக்க வேண்டியது மட்டுமே மீதி உள்ளது.
-------------------------------------------------------------------------------


ஜெகத் ரட்சகனின் Elite Distilleries மதுபானமா?
T R பாலுவின் Golden Vats மதுபானமா?
எது அதிக பாசிச எதிர்ப்பு கொண்டது?
என் தலைமையில் பட்டிமன்றம்!
       
எருதின் நோய் காக்கைக்குத் தெரிவதில்லை!
--------------------------------------------------------------------
திருத்தணிக்கு அருகில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு
Presiding Officerஆக ஒரு தலைமையாசிரியை நியமிக்கப்
பட்டார். அவர் சென்னையில் வாழ்ந்து வருபவர்.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே
எல்லாம் முடிந்து விடுகிறது என்று எவரேனும்
கருதினால் அது தவறு.

வாக்குப் பதிவு எந்திரத்தை காவல் துறையிடம்
ஒப்படைக்க வேண்டியது அதிகாரியின் பொறுப்பு.
நேற்று இரவு 11 மணி வரை காவல் துறை வரவில்லை.
இரவு 2 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து ஒரு ரயில்
சென்னை செல்கிறது. நான் கூறிய பெண் அதிகாரி
அந்த ரயிலைப் பிடிக்க வேண்டும். அதற்கு காவல்துறை
குறித்த நேரத்தில் பெட்டியைப் பெற வர வேண்டும்.

திருத்தணியில் இருந்து இரவு நேர
பேருந்து கிடையாது. எனவே ரூ 400, ரூ 500 கொடுத்து
ஆட்டோவிலோ கால் டாக்சியிலோ அரக்கோணம் செல்ல
வேண்டும். கொடுக்கிற ரூ 1300ல் இதெல்லாம்
சாத்தியம் ஆகாது.

The wearer knows where the shoe pinches. எருதின் நோய்
காக்கைக்குத் தெரிவதில்லை.

இதைப்போல பல நிகழ்வுகளை என்னால் சுட்டிக்
காட்ட இயலும். இதுவே remote area, hilly area, disturbed area
என்றால் எவ்வளவு கஷ்டம் என்று தொடர்புடையவர்களுக்கு
மட்டுமே தெரியும்.

எனது சிறுவயதில் இருந்தே தேர்தல் பணி பற்றி அறிவேன்.
1967ல் நெல்லை கடையநல்லூர் தொகுதியில் உள்ள
ஒரு வாக்குச்சாவடியில் என் தந்தையார் (school HM)
தேர்தல் பணிக்குச் சென்றார். அந்தக் காலத்தில்
பேருந்து வசதி இன்றுபோல் இல்லை. அந்த ஊரிலியே
தங்கி விட்டு மறுநாள் காலை வீடு வந்து சேர்ந்தார்.
பொறுப்பும் அதிகம். டென்சன் அதிகம். பலருக்கும்
பதில் சொல்லியாக வேண்டும்.

MPக்களுக்கு ரூ 1 லட்சம் சம்பளமும் பென்ஷனும்
ஏகப்பட்ட சலுகைகளும் தரும் அரசு, தேர்தல் பணிக்குச்
செல்லும் அரசு ஊழியர்களுக்கு நியாயமான remuneration
கொடுத்தால் என்ன? 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக