புதன், 3 ஏப்ரல், 2019

மார்க்சியம் லெனினியம் என்பது
நாடாளுமன்றத்துப் புறம்பான போராட்டங்களை
(extra parliamentary struggles) மக்களைத் திரட்டி
நடத்துவது! காங்கிரசுக்கு மாமா வேலை பார்ப்பதல்ல!
----------------------------------------------------------------------------
கார்முகில் TNML அவர்களே,

காங்கிரசும் பாஜகவும் சரிசமமே.
இரண்டும் ஆளும் வர்க்கக் கட்சிகளே.
இரண்டும் பாசிசத்தை நடைமுறைப்படுத்தத்
தயங்காது.

இதில் பாஜகவை விட காங்கிரஸ் மேல் என்று
சொல்வதோ, அல்லது காங்கிரசை விட
பாஜக மேல் என்று சொல்வதோ மார்க்சியம் அல்ல.

இரண்டையும் ஒருசேர எதிர்க்க வேண்டும். அது
கடினமான பணி. ஆனால் அது மட்டுமே மார்க்சியப்பணி.

காங்கிரசுக்கு மாமா வேலை பார்க்க நாட்டில்
ஆயிரம் பூர்ஷ்வா கட்சிகள் உள்ளன. அது  ஒரு
ML கட்சியின் வேலை அல்ல.   

மார்க்சியம் லெனினியம் என்பது
நாடாளுமன்றத்துப் புறம்பான போராட்டங்களை
(extra parliamentary struggles) மக்களைத் திரட்டி
நடத்துவது! காங்கிரசுக்கு மாமா வேலை பார்ப்பதல்ல!
***************************************************** 

மார்க்ஸ் எங்கல்ஸ் எழுதிய
கம்யூனிஸ்ட் அறிக்கையை விட
ராகுல் காந்தி வெளியிட்ட
தேர்தல் அறிக்கை உயர்வானது
என்கிறாரோ TNML கார்முகில்!


இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள்
காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள்.
இரண்டுக்குமே ஒரே பொருளாதாரக் கொள்கைகள்தான்.
இரண்டுமே மக்கள் விரோதக் கட்சிகள்தான்.
இரண்டின் வர்க்க அடித்தளமும் ஒன்றுதான்.

இரண்டுக்கும் இடையில் பாரதூரமான வேறுபாடு
இருக்கிறது என்று நம்புவது பேதைமையுள்
எல்லாம் பேதைமை.

தேர்தல் அரசியலில் தீர்வு கிடைக்கும் என்று
நம்புவது பாமரத்தனம் ஆகும். பாஜகவின்
கருத்தியலை தேர்தல் அரசியல் வெற்றி தோல்வி
மூலம் அகற்ற முடியாது.


மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின்
ராகுல் காந்தி மு க ஸ்டாலின்
உதயநிதி துரைமுருகன் பாரிவேந்தர்
உதயநிதி துரைமுருகன் பாரிவேந்தர்
ஆகியோரே மார்க்சிய மூல ஆசான்கள்
 என்கிறாரோ கார்முகில்! 

புழுவினும் இழிந்த இந்தக் கல்விக் கொள்ளையன்
இதுவரை எதிர் முகாமில் இருந்த பலரை
இந்தத் தேர்தலை முன்னிட்டு விலைக்கு
வாங்கிப் போட்டுள்ளான்.

வேலை கிடைக்கும்! விண்ணப்பியுங்கள்!
தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு
20 சத இட ஒதுக்கீடு உண்டு!
--------------------------------------------------
SC ST BC MBC வயது வரம்பு = 35.
BE, MSc, BSc பட்டதாரிகள் விண்ணப்பிக்கவும்!


70ன் பத்தாண்டுகளை விடுதலையின்
பத்தாண்டுகளாக ஆக்குவோம் என்ற முழக்கத்தை
அப்போது சாரு மஜூம்தார் முன்வைத்தார்.
விரைவில் புரட்சி நாடெங்கும் பரவி விடும் என்ற
(தவறான) கணிப்பு அப்போது CPI ML கட்சியிடம்
இருந்தது. எனவே புரட்சி முடியும் வரை தேர்தலில்
பங்கேற்பதில்லை என்ற முடிவை சரியாகவே
எடுத்திருந்தது CPI ML.

காங்கிரசை ஆதரிக்கும் தோழர் கார்முகிலின் நிலைபாடு!
---------------------------------------------------------------------------------------- 
1) காங்கிரசை ஆதரித்து பாஜகவை தேர்தலில்
தோற்கடிப்பதன் மூலம் இந்துத்துவத்தை
முறியடிக்கலாம் என்பது பேதைமையுள் எல்லாம் பேதைமை!

2) இந்துத்துவம் பாஜகவிடம் மட்டும்தான் இருக்கிறது
என்பது 100 சதம் தவறான கணிப்பு. காங்கிரசின்
இந்துத்துவம் பாஜகவின் இந்துத்துவத்துக்குச்
சற்றும் சளைத்ததல்ல.

3) காணாக்குறைக்கு திராவிட இந்துத்துவக்
கட்சிகளாக திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய
கட்சிகள் உள்ளன.

4) இந்துத்துவம் என்பது இந்தத் துணைக்கண்டம்
முழுவதும் விரவிக் கிடக்கிறது (all pervading).
அதை பாஜகவின் தனிச்சொத்தாகப் பார்ப்பது
மடமை.

5) Hold the bull by its horns என்று ஒரு பழமொழி உண்டு.
முட்ட வரும் காளையை அதன் கொம்பைப் பிடித்து
அடக்க வேண்டும் என்று இதற்குப் பொருள்.
எனவே இந்துத்துவத்தை தத்துவ அரசியல் களத்தில்
சந்தித்து முறியடிக்க வேண்டும்.

6) இதைச் செய்ய இயலாத கோழைகள், இதற்குத்
திட்டம் வகுக்காத கோழைகள் தேர்தல் களத்தில்
பாஜகவைத் தோற்கடிப்பதன் மூலம் இந்துத்துவத்தை
வீழ்த்த முடியும் என்ற பிரமையில் மிதக்கிறார்கள்.
இது குடிகாரனின் போதை போன்றது.

7) ஆக திமுக காங்கிரஸ் கூட்டணியை தேர்தலில்
ஆதரிப்பதன் மூலம் இந்துத்துவத்தை வீழ்த்த
முடியும் என்று எவர் கூறினாலும், ஒன்று அவர்
பரிதாபத்துக்கு உரிய பாமரராக இருக்க வேண்டும்;
அல்லது ஏமாற்றுக்காரராக இருக்க வேண்டும்.

8) திமுக மற்றும் காங்கிரசை ஆதரிப்பது, மார்க்சிய
லெனினியத்தைப் பொறுத்த மட்டில் பஞ்சமா பாதகமே.

9) தோழர் கார்முகில் அவர்களின் இத்தேர்தலில்
காங்கிரஸ்-திமுகவை ஆதரிக்க வேண்டும் என்ற
நிலைபாடு மார்க்சியத்தைக் குழிவெட்டிப்
புதைப்பதாகும்.   துக்கு எதிரானது.

10) நக்சல்பாரி இயக்கம், அதன் பாரம்பரியம்
ஆகியவை காலாவதி ஆகி வருகின்றன என்பதை
தோழர் கார்முகில் அவர்கள் முன்னறிவிக்கிறார்
என்பதையே அவரின் நிலைபாடு வெளிப்படுத்துகிறது.
***********************************************


ஆளும் வர்க்கக் கட்சியை ஆதரிப்பதே மார்க்சியம்!
தோழர் கார்முகில் பாணி  மார்க்சிய லெனினியம! 
-------------------------------------------------------------------------
தோழர் கார்முகில் அவர்களின் நிலைபாடு மார்க்சிய
லெனினிய  வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது. இப்படி ஒரு நிலையை SOC
எடுக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்
தோழர் கார்முகில் முந்திக் கொண்டு விட்டார்.

இந்தியா முழுவதும் தற்போதைய காலக்கட்டம்
மாநிலக் கட்சிகள் எழுச்சி அடைந்து வருகிற ஒரு
காலக்கட்டம். இந்த நேரத்தில் போய், தமிழ்நாடடின்
சுயநிர்ணய உரிமையைப் பேசும் தநாமாலெ கட்சி
பெரு முதலாளித்துவ காங்கிரஸ் கட்சியை
ஆதரித்து நிற்பது ஏற்க இயலாத ஒன்று.

நாம் தமிழர் கட்சி போன்ற சிறிய கட்சிகளை
ஆதரிப்பது என்று தோழர் கார்முகில் முடிவு
எடுத்திருந்தால் கூட, அது பெரிய அளவுக்கு
விமர்சிக்கப்பட்டு இருக்காது. காங்கிரசை
ஆதரிப்பது என்பதை எவர்தான் ஏற்க முடியும்?

காங்கிரஸ் பாஜக இரண்டுமே பெருமுதலளித்துவ
வர்க்க நலன் பேணும் கட்சிகள். அவற்றில் எதையும்
ஆதரிக்க முடியாது.

தோழர் கார்முகில் அவர்களின் நிலைபாடு சரிதான்
என்றால், அதற்குரிய நியாயங்களை அவர் தரப்பு
முன்வைக்க வேண்டும். இதுவரை அப்படி எதையும்
தநாமாலெ முன்வைக்கவில்லை.
மாறாக சில ஆதரவாளர்கள் அவதூறில் இறங்குகின்றனர்.
இது சகித்துக் கொள்ளப் படாது.

காலங்காலமாக லிபரேஷன் குழு தேர்தலில் போட்டி
இடுகிறது. SUCI போட்டி இடுகிறது. ஆனால் TNML
காங்கிரசை ஆதரித்து தேர்தல் வேலை செய்யச்
சொல்வது எப்படிச் சரியாகும்?

முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பு வேட்பாளர்களிடம்
உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்து வாங்க
வேண்டும் என்று ஒரு இயக்கம் நடத்தியது TNML.
அதாவது அன்றைய TNOC. கேடயம் பத்திரிகை
இருந்தால் அதில் செய்தியைப் படிக்கலாம்.
அந்த நிகழ்வு சிரிப்புக்கு இடமானது. நல்லது,
காலம் பதில் சொல்லும்.  
****************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக