சனி, 20 ஏப்ரல், 2019

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் எனப்படும் EVM குறித்து..........
-------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
1) EVM என்பது ஒரு கம்ப்யூட்டர்.
2) கம்ப்யூட்டர் என்பது ஒரு Rule following machine.
3) கம்ப்யூட்டர் பின்பற்றும் இந்த ruleதான் அதன்
program ஆகும். இது மென்பொருள் (software) என்றும்
மக்களால் சொல்லப் படுகிறது. 

4) இந்த programஐ கணினி மொழியில் source code என்று
சொல்கிறார்கள்.
5) இந்த source code எப்படி எழுதப்படுகிறது? இது ஒரு
programming language மூலம் எழுதப் படுகிறது.
6) ஜாவா, C ஆகியவை programming languages ஆகும்.

7) இந்த programming languageல் எழுதப்பட்டதை கணினி
அறிவு உடையோரால் புரிந்து கொள்ள இயலும்.
இதைத் தவிர்க்க இந்த program வேறு ஒரு மொழிக்கு
மாற்றப்படுகிறது. அதாவது machine languageக்கு 
மாற்றப் படுகிறது.

8) machine languageல் எழுதப்பட்டதை மனிதர்களால்
படித்துப் புரிந்து கொள்வது கடினம். எல்லாமே 0,1,0,1,01
என்றுதான் இருக்கும்.

9) இந்த machine languageல் எழுதப்பட்ட programஐ
கம்ப்யூட்டர் சிப்பில் வைத்துப் புதைத்து விடுவார்கள்.
இந்த சிப் மைக்ரோ கண்ட்ரோலர் என்னும் கணினியில்
பொருத்தப்படும். இதுதான் EVM.

10) எப்படி வேண்டுமானாலும் PROGRAM எழுதிக்
கொள்ளலாம். எழுதப்பட்ட PROGRAMக்கு கம்ப்யூட்டர
வேலை செய்யும்.
............................தொடரும்.........................
**********************************************************
பின்குறிப்பு: கம்ப்யூட்டர் என்பது rule following machine என்ற
வரையறையை வழங்கி உள்ளேன். இதன் பொருள் என்ன?
கம்ப்யூட்டருக்கு சுயசிந்தனை இல்லை என்று பொருள்.
Computer does not have free will. மனிதன் ஒரு rule following
machine அல்ல. ஏனெனில் மனிதன் சுதந்திர சித்தம்
(free will) உடையவன்.
5 + 3 = 9 என்று கூட்டுமாறு program எழுதினால்
கம்ப்யூட்டர் அப்படித்தான் கூட்டும்.
********************************************************* 

எந்திர மொழியில் எழுதுவதன் நோக்கம் அது
சாத்தியப் படக்கூடிய வழிகளில் புரிந்து கொள்ளப்
படுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே.
Easy access to the program என்பதைத் தவிர்க்கவே.
         



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக