திங்கள், 8 ஏப்ரல், 2019

தலைமறைவாக இருக்கும் அந்த அய்யர் யார்?
-----------------------------------------------------------------------
அண்மையில் கோவை குன்னூர் சென்றிருந்தேன்.
அங்கு ஒரு இளைஞருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது,
ஒரு ஆர்வமூட்டும் விஷயம் வெளிவந்தது.

ஒரு அய்யரின் பெயரைக் கூறிய அந்த இளைஞர்
அவர் தலைமறைவாக இருக்கிறார் என்று கூறினார்.
எனக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்து விட்டது.

இங்கு தலைமறைவு என்பது மார்க்சிய லெனினியக்
கட்சிகள் கூறும் தலைமறைவு ஆகும். முகிலனின்
பாலியல் தலைமறைவு போன்றதல்ல இது.

மார்க்சிய லெனினிய அர்த்தத்தில் தலைமறைவாக
இருந்த தலைவர் தோழர் ஏ எம் கே அவர்கள்.
அவரும் அண்மையில் இறந்து விட்டார்.

இனி மேற்கூறிய அய்யரும் பிரிந்து போன அவரின்
பங்காளிகளும் (ஓடுகாலிகள் என்று தங்களின்
பங்காளிகளால் இழித்துரைக்கப் பட்டவர்கள்) 
தலைமறைவாக இருப்பதாகக் கூறிக்கொண்டால்
அது இழிந்த சுயஇன்பம் அடைவதாகும்.
அப்படிக்  கூறிக்  கொள்வோர் அசிங்கப்பட நேரும்.

இந்த இடத்தில் மறைந்த தோழர் வி எம் (லிபரேஷன்)
அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.
வெளிப்படையான முடிவு எடுத்து நடைமுறைப்
படுத்தினார். எவ்வித ஊசலாட்டத்திற்கும் இடம்
கொடுக்கவில்லை.

தலைமறைவுக் கட்சி என்பதை முடிவுக்குக் கொண்டு
வந்தார். கட்சியை வெளிப்படையாக இயக்கினார்.
ஆயுதப் படைகளைக் கலைத்தார். ஆயுதங்களை
டிஸ்போஸ் செய்தார். தேர்தல் புறக்கணிப்பைக்
கைவிட்டார். தேர்தலில் பங்கெடுத்தார். 

சரியோ தவறோ, ஒரு முடிவை எடுத்தார்.
முடிவெடுக்கும் அறிவும் துணிச்சலும் அவருக்கு
இருந்தது. இது பலருக்கும் இல்லை.
********************************************************  
இதில் எந்த விதமான தனிநபர் தாக்குதலும் இல்லை.
தனிநபர் தாக்குதல் என்று நழுவிச் செல்வது கோழைத்தனம்.
நக்சல்பாரிக் கட்சி தொடங்கிய நாள் முதலே
தேர்தல் புறக்கணிப்புதான். இன்று நிலைப்பாட்டை
மாற்றியுள்ளார் கார்முகில். இது PARADIGM SHIFT ஆகும்.

இதற்கான நியாயம் என்ன என்று கேட்கிறோம்.
அவ்வளவுதான். நியாயத்தைச் சொல்லாமலே
காங்கிரசை ஆதரித்த தேர்தல் வேலை செய்ய வேண்டும்
என்று சொல்லி விட்டு ஓடி ஒளிந்து கொள்ளும்போது
கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். 

பதிவுக்குப் பொருத்தமற்ற பின்னூட்டம் இது.
இப்பதிவு கார்முகிலைப் பற்றியது. மாவோவைப்
பற்றியதல்ல. கார்முகில் குறித்துப் பேசுவதற்கு ஏதேனும்
இருந்தால் பேசுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். பதிவுக்குப்
பொருத்தமற்ற, பதிவின் கருத்தைத் திசை திருப்புகிற
பின்னூட்டங்களை நீக்கி விடுவோம் என்பதை
மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக