செவ்வாய், 16 ஏப்ரல், 2019

தமிழரசன் பற்றி 
சிறு வயதில் தந்தையை இழந்து தாய் மாமனால் வளர்க்கப்பட்டவர் தமிழரசன். மாமா நன்றாக படிக்க வைத்தார்.கோயம்பத்தூர் CIT கல்லூரியில் கெமிக்கல் இன்சினியரிங் படிக்க வைத்தார்கள்.
மூன்றாம் வருடத்திலே
பாதியிலே நக்ஸல்பாரி பாதையில் தமிழரசன் செல்கிறார்.மாமா கண்டித்தும் கேட்கவில்லை.
இது போல் 33 பேர் இஞ்சினியரிங் மாணவர்கள் நக்ஸல்பாரி பாதையில் செல்கிறார்கள். பின்னர் அவர்களில் தமிழரசனை தவிர எல்லாரும் படிப்பை முடித்து சமூகத்தில் இணைகிறார்கள்.
தமிழரசன் மட்டும் சிறு குழுவாக இயங்கி மருதையாற்று பாலம் தகர்த்ததன் மூலம் முப்பதுக்கும் மேற்பட்டோரையும், அழித்தொழிப்பு நடவடிக்கைகள் மூல 10 க்கும் மேற்பட்டோரையும் அவருக்கு பின் வந்த தமிழர்விடுதலைப்படை அவர்களுக்குள்ளாக மோதிக்கொண்டதில் இருபது பேர் இறப்புக்கு காரணமாக இருந்தார்.
இன்று தமிழரசனை முன்னிறுத்தி கூட்டம் சேர்ப்பவர்களும் அமைப்பு கட்டுபவர்களும் அவரது பாதையிலே ஆயுதம் எடுத்து சமூகத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிர்வினை ஆற்றி விட்டு இங்கு வந்து பொங்கட்டும்.இவர்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்துகொண்டு வன்னியர்,பரையர் போன்றவர்களை உசுப்பேத்தி விடுகிறார்கள். இவர்களை
அடையாளம் கண்டு இது போன்ற அயோக்கியர்களை புறம் தள்ள வேண்டும்.
தமிழரசனால் சமூகத்துக்கு பெரிய பின்னடைவு.இழப்புகள் ஏராளாம்..
தமிழரசனை படிப்போம்.தியாகத்தை அர்பணிப்பை மதிப்போம்.போற்றுவோம்.
பின்பற்றமட்டும் வேண்டாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக