வெள்ளி, 24 மே, 2019

வெனிசுலா விவகாரம்


வெனிசுலாவின் மக்களின் போராட்டம் எப்படி அமைய வேண்டும்,
நாட்டை கைப்பற்றி உள்ள ரஷ்ய-சீனா எதிர்த்தா???
அல்லது
கொலம்பியாவில் இருந்து மிரட்டும் அமெரிக்காவை எதிர்த்தா???
வெனிசுலா ரஷ்ய சீன வின் புதிய காலனிய நாடு, ரஷ்யா சீனா ஏகாதிபத்திய நிறுவனங்களே எண்ணெய் வளங்களை பெரும்பான்மையாக கைப்பற்றி எண்ணெய் சந்தையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
மேலும் சீனா உற்பத்தி துறையிலும் எண்ணெய் துறையிலும் கூடுதல் நிதி உதவி வழங்கியும்,
ரஷ்யா சீனா இடையே அதிக அளவிலான ஆயுதங்களை வாங்குவதற்காக, இராணுவ அடிப்படை ஒப்பந்தங்களை போட்டுள்ளது.
லத்தீன் அமெரிக்காவில், ரஷ்யா சீனா வின் ராணுவ தளமாக உள்ளது.
ரஷ்யா சீனா உலக அளவில் 300 முதல் 400 வரை தனது ராணுவம் தளங்களை அமைத்துள்ளது, இது அமெரிக்காவின் அரசியல், இராணுவ மற்றும் வியாபார நலன்களை குறைத்துள்ளது.
#அமெரிக்கா ஏகாதிபத்திய பொருளாதார மிகை நெருக்கடியில் இருந்து இன்று வரை மீளமுடியாத மிக கடுமையாக நிர்ப்பந்தத்தில் உள்ளது.
என் தனது அரசியல், பொருளாதார நிலைமைகளை சரி செய்துகொள்ள ஒரே வழி புதிய காலனிய பகுதிகளை கைப்பற்றுவதே என் பிற்போக்கு முறையை கையாள்வதும்,
செல்வாக்கு மண்டலங்களை நிறுவுவதற்கான போட்டி காலமாகவே,
ஈரான் சிரியா சூடான் போன்ற நாடுகளிலும்.
வெனிசுலா போன்ற நாடுகளும் இந்த ஆக்கிரமிப்பு யுத்தங்களின் கலமாக மாற்றப்பட்டுள்ளது.
வெனிசுவேலா அரசியல் பொருளாதார ரீதியாக நாட்டின் ஆளும் கட்சியின் துணையோடு அரசியல் சட்டங்கள் துனையேடும் தனது புதிய காலனிய ஆட்சிமுறையை செய்கிறது ரஷ்யா சீனா,
இந்த பகுதியை தக்கவைப்பதற்காக பல சலுகைகளை மக்களுக்கு வழங்கி ஏமாற்றி வருகிறது.
அமெரிக்காவானது வெனிசுலாவை மிரட்டி வருகிறது,
பொருளாதார தடை, எண்ணெய் வியாபார தடை, என தொடர்ந்து நெருக்கடியை வழங்கி வருகிறது.
அமெரிக்கா தன்னுடைய இராணுவ பலத்தை காட்டி வெனிசுலா வில் இருந்து ரஷ்யா சீனா வை விரட்டியடிக்க முடியும்.
என பகல் கனவு காண்கிறது. 
ஆனால் அமெரிக்கா உலக அளவில் 900 இராணுவ தளங்களை நிறுவியிருந்தாலும், இராணுவ ஆயுதங்களை கொண்டு மீரட்டிவிட முடியும் என எண்ணி தோல்வியை சந்தித்து உள்ளது...
ஆனால் இந்த கட்டத்தில் வெனிசுலா விட்டு அமெரிக்கா முகாமையும்- ரஷ்யா சீனா முகாமையும் வெளியேற்றுது தான் சரியான நிலைப்பாடு,
ஆனால் சிலர்
ரஷ்யா சீனா எதிர்ப்பதோடு நிறுத்தி கொள்ளுவது.
அல்லது
அமெரிக்கா முகாமை எதிர்ப்பது,
அமெரிக்காவே உலக மேலாதிக்கம் என்பது,
போன்ற அதீத ஏகாதிபத்திய கோட்டை, காவுட்ஸ்கிவாதத்தை முன்வைப்பது.
போன்ற பிறப்போக்கு நிலைப்பாட்டை முன்வைத்து ஏகாதிபத்தியங்களுக்கு சாமாரம் வீசுவது.
குறிப்பாக இன்று உதாரணமாக இந்நிலை எடுத்து கொள்வோம்
இந்தியா அமெரிக்காவின் புதிய காலனிய நாடு, இந்தியாவிற்க்குள் உள்ள அமெரிக்காவை எதிர்க்காமல்.
வெளியிருந்து தாக்குகிற ரஷ்யா சீனா வை எதிர்த்து அமெரிக்காவோடு கூட்டணி வைத்து கொள்வோம் என்று கூறமுடியுமா???
இது தான். குறிப்பான சூழலில் குறிப்பான திட்டத்தை முன்வைப்பதா???
அப்படி கூறுவது சரியா???
இது ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாடு இல்லையா???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக