யாகம் என்னும் மூட நம்பிக்கையும்
அதற்கு மூல காரணமான மஞ்சள் துண்டும்!
திராவிட இந்துத்துவத்தைச் சுட்டெரிப்போம்!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
மழை பெய்ய வேண்டும் என்பதற்காக கோவில்களில்
யாகம் நடத்த வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை
உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தமிழக அரசின்
உத்தரவு ஆகும்.
இந்த உத்தரவின் மூலம் தமிழ்ச் சமூகத்தை ஆயிரம்
ஆண்டுக்கு முந்திய காலத்துக்கு தமிழக அரசு
அழைத்துச் செல்கிறது. இது கடைந்தெடுத்த பிற்போக்குத்
தனம் ஆகும். இது அறிவியலுக்கு முற்றிலும் எதிரானது.
இந்த உத்தரவின் மூலம் திராவிட இந்துத்துவம் தன்
பிற்போக்கு முகத்தை அனைவரும் வெளிச்சம் போட்டுக்
காட்டுகிறது. ஆர் எஸ் எஸ்சின் வழிகாட்டுதலில்
நடத்தப்படும் பாஜக அரசுகள் கூடச் செய்யத் தயங்கும்
ஒரு கடைந்தெடுத்த பிற்போக்குத்தனத்தை திராவிட
இந்துத்துவ அதிமுக அரசு மிகுந்த துணிச்சலுடன்
செய்துள்ளது. Fools rush in where angels fear to tread!
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
என்று வள்ளுவர் கூறியதற்கு இணங்க,
மழைக்கு யாகம் செய்யச் சொல்லும் திராவிட
இந்துத்துவத்தின் தோற்றம், வளர்ச்சி, இயக்கம்
ஆகியவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
அறிஞர் அண்ணா உயிருடன் இருந்தவரை திமுகவில்
மூடநம்பிக்கைகள் அனுமதிக்கப் படவில்லை.
திராவிட இந்துத்துவத்தின் முதல் செங்கல்லை
ராமச்சந்திர மேனன் பகிரங்கமாக ஆரம்பித்து
வைத்தார். கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு
அனைவரும் அறிய வெளிப்படையாகச் சென்று
சுவாமி தரிசனம் செய்தார் மேனன். இதன் மூலம்
பகுத்தறிவு, கடவுள் மறுப்பு ஆகியவற்றுக்கு
அதிமுக பாடை காட்டுகிறது என்று உலகிற்கு
உணர்த்தினார்.
ஜெயலலிதா தமது கடவுள் நம்பிக்கையை என்றுமே
மறைத்ததில்லை. அதில் அவர் வெளிப்படையானவராக
இருந்தார்.
ராமச்சந்திர மேனன் தமது கடவுள் பக்தியை பகிரங்கமாக
வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது அதையெல்லாம்
ரகசியமாகச் செய்து கொண்டிருந்தார் கலைஞர்.
ஒரு கட்டத்தில் ரகசியம் அவருக்குச் சலித்துப் போக,
பகிரங்கமாக மஞ்சள் துண்டை அணிந்தார். இது
முற்றிலும் ஜோசியப் பித்தின் விளைவு. அந்த மஞ்சள்
துண்டையே தமது நிரந்தர அடையாளமாக ஆக்கிய
கலைஞர் இறுதி மூச்சு வரை அந்த மஞ்சள் துண்டுடனே
வாழ்ந்து மறைந்தார்.
ஒரு நிறத்தில் உள்ள துண்டை ஓரிரு நாட்கள் அணிவதும்,
பின் அதைக் கழற்றி விட்டு வேறு நிறத் துண்டு
அணிவதும் மனித இயற்கை. ஆனால் கலைஞரோ,
என்றும் மஞ்சள் துண்டு, எப்போதும் மஞ்சள் துண்டு
என்ற லட்சியத்துடன் திராவிட இந்துத்துவத்தை
ஸ்திரப் படுத்தினார்.
பாஜகவின் இல கணேசனோ, ஹெச் ராஜாவோ கூட
நிரந்தரமாக ஒரு மஞ்சள் துண்டை அணிய முன்வராத
நிலையில் கலைஞர் நிரந்தர மஞ்சள் துண்டுடன் காட்சி
அளித்தார். இதன் மூலம் இந்துத்துவத்தின் நிரந்தரப்
பிரச்சாரகர் ஆனார். ராஜனை மிஞ்சிய ராஜ விசுவாசி
ஆனார். இல கணேசனும் ஹெச் ராஜாவும்
நாணந்த்தால் வெட்கித் தலைகுனிந்தனர்.
கலைஞர் மஞ்சள் துண்டு அணிவதை எக்காரணம்
கொண்டும் சங்கத் பரிவாரங்கள் விமர்சிக்கக்
கூடாது என்றும் கலைஞரின் மஞ்சள் துண்டை
வரவேற்க வேண்டும் என்றும் கேடு கேட்ட ஆர் எஸ் எஸ்
தன் அணிகளுக்குச் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியது
என்ற செய்தி நாடறிந்ததே.
போலிப் பகுத்தறிவு பேசும் கட்சிகளோ அவற்றின்
தலைவர்களோ கலைஞரின் மஞ்சள் துண்டு
மகாத்மியத்தைக் கண்டித்தார்களா என்றால்
இல்லை. சில போலிகள் கண்டு கொள்ளாமல்
கள்ள மௌனம் காத்தனர். சில போலிகள்
வாங்கிய எச்சில் காசுக்கு வஞ்சகம் இல்லாமல்
மஞ்சள் துண்டுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு
இருந்தனர். இவர்கள் தங்களின் இழிசெயலுக்கு
நாண மாட்டார்கள்.
பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்க(து) உடைத்து.
இன்றைக்கு எடப்பாடியின் அரசு மழைக்காக யாகம்
செய்யுங்கள் என்று உத்தரவு போடுகிறது என்றால்,
இதற்கான தைரியம் எடப்பாடிக்கு எங்கிருந்து வந்தது?
எல்லாம் ராஜாத்தி அம்மாள் கொடுத்த தைரியம்தான்!
எல்லாம் துர்கா ஸ்டாலின் கொடுத்த தைரியம்தான்!
"யாகம் செய்யச் சொல்லி உத்தரவு போடுகிறோமே,
எதிர்க்கட்சியான திமுக நம்மைச் சும்மா விடுமா"
என்ற பயம் எடப்பாடிக்கு இருந்தால், இந்த உத்தரவைப்
போட்டிருப்பாரா?
திமுக இதைத் தட்டிக் கேட்காது. ராஜாத்தி அம்மாளையும்
துர்கா ஸ்டாப்களின் அம்மையாரையும் மீறி,
திமுகவால் இதைத் தட்டிக் கேட்க முடியாது என்ற
தைரியம்தான் எடப்பாடிக்கு.
ஆக, திராவிட இந்துத்துவம் தன் உச்சத்தை அடைந்து
விட்டது. அது சங்கப் பரிவாரங்களின் இந்துத்துவத்தைத்
தோற்கடித்து முதல் இடத்தைப் பிடித்து விட்டது.
இந்துத்துவம் இந்த அளவு உச்சத்தை அடைய
முழு முதல் காரணமாக கலைஞரின் மஞ்சள் துண்டு
அமைந்து விட்டது. கலைஞரை மிஞ்சிய இந்துத்துவப்
பிரச்சாரகர் யாரும் ஆர் எஸ் சில் கிடையாது.
இனி ஒரே ஒரு விஷயம்தான் பாக்கி இருக்கிறது. அது
இதுதான்! ராமகோபாலன் வகையறாக்கள் இந்து
முன்னணியைக் கலைத்து விட்டு, உதயநிதி ரசிகர்
மன்றத்தில் போய்ச் சேர வேண்டியதுதான்!
----------------------------------------------------------------
பின்குறிப்பு: தந்தை பெரியார் உயிரோடு இருந்தால்,
கலைஞர் மஞ்சள் துண்டு அணிந்திருப்பாரா?
அணிந்திருந்தால் பெரியார் அவரைச் சும்மா
விட்டிருப்பாரா?
பின்குறிப்பு-2
யாகம் செய்தால் மழை வராது! மயிர்தான் வரும்!
இதை எடப்பாடியும் ஸ்டாலினும் உணர வேண்டும்.
**********************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக