சனி, 4 மே, 2019

தமிழ்நாட்டு வேலைகள்
பிற மாநிலத்தவர்க்குப் போனது எப்படி?
-----------------------------------------------------------
பின் எழுபதுகளில் (1975-80) எங்கள் தலைமுறையினர்
படிப்பை முடித்து வேலை தேடியபோது, பிற மாநிலத்தவர்
பிரச்சினை எதுவும் இல்லை.

தமிழக அரசு வேலைவாய்ப்புக்கு TNPSC தேர்வுகள்
எழுத வேண்டும். வேலை கிடைக்கும். ஆனால் லஞ்சம்
கொடுக்க வேண்டும். அப்போது மின்வாரியத்தில்
ஆள் எடுத்தார்கள். ஒரு வேலைக்கு ரூ 2000 லஞ்சம்.
அன்று ரூ 2000 லஞ்சம் என்பது இன்று ரூ 2 லட்சத்திற்குச்
சமம். என்றாலும் லஞ்சம்தான் பிரச்சினையாக
இருந்ததே தவிர, வெளிமாநிலத்தவர் நமது
வேலைகளைப் பறிக்கும் நிலைமை  இல்லை.  

லஞ்சம் கொடுக்காமல் வேலை வேண்டுமென்றால்,
மத்திய அரசில்தான் வேலை தேட வேண்டும்.
அஞ்சல், தந்தி, தொலைபேசி, ரயில்வே, வருமானவரி
ஆகிய துறைகளில் ஆண்டுதோறும் வேலை வாய்ப்பு
இருந்தது. அதற்கு உரிய தேர்வுகளை எழுதித் தேற
வேண்டும். லஞ்ச லாவண்யம் கிடையாது.

ரயில்வே வேலைக்கு ரயில்வே சர்வீஸ் கமிஷன்
தேர்வை எழுத வேண்டும். அன்றைய RSC இன்று RRB.
அது போல வங்கியில் வேலை பெற வங்கித்தேர்வு
(இன்றைய BSRB) எழுத வேண்டும்.

எல்லா வேலைகளும்  தமிழர்களுக்கே கிடைத்தன.
வெளி மாநிலத்தவர் நமக்குரிய வேலைகளைக்
கவர்ந்து செல்லும் நிலைமையே அப்போது
கிடையாது.

அதிலும் அஞ்சல் துறையில், அந்தந்த டிவிஷன் வாரியாக
ஆள் எடுப்பார்கள். ஒரு டிவிஷனில் உள்ள
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து இருப்பவர்கள்
அந்த டிவிஷனில்தான் விண்ணப்பிக்க முடியும்.

இந்த நிலைமை எல்லாம் தற்போது மாறி இருக்கிறது
என்று தெரிய வருகிறது. எப்போது மாறியது?
எப்படி மாறியது? இது குறித்து எவரும் எழுதவில்லை.

தமிழக வேலைகள் தமிழருக்கே என்று போராடும்
அன்பர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றிய இந்த
வரலாறு தெரியுமா என்று தெரியவில்லை.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதீர்க்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
என்கிறார் வள்ளுவர்.

எனவே இந்த மாற்றங்கள், அதாவது வெளி
மாநிலத்தவர்க்கும் வேலையாளிக்கும் இந்த
மாற்றங்கள், அதற்கான சட்டத் திருத்தங்கள்
ஆகியவை எப்போது கொண்டுவரப் பட்டன
என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான் நமது இலக்கை நாம்
அடைய முடியும்.
**********************************************

லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சராக
இருந்தபோதுதான் ஒரு மாநிலத்துக்கு
உரிய வேலைக்கு மற்ற மாநிலத்தவரும்
விண்ணப்பிக்கலாம் என்று சட்டம் கொண்டு
வந்தார்.

 யமுனா ராஜேந்திரன் படுபயங்கர குட்டி முதலாளிய
சிந்தனையாளன். மார்க்சிய வேடத்த்தில் இருக்கும்
மார்க்சிய  எதிரி.




 
  
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக