வெள்ளி, 31 மே, 2019

தமிழ்நாடு மின்வாரியத்தில் வெளி மாநிலத்தவர்க்கு வேலை!
எடப்பாடி அரசு சட்டமன்றத்தில் கொண்டுவந்த
சட்டத் திருத்தம்! அதை எதிர்த்துப் போராடாத திமுக!
ஸ்டாலின் தமிழர்களுக்குச் செய்த துரோகம்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
1) தமிழ்நாடு மின்வாரியம் என்பது தமிழர்களுக்கு
வேலை கொடுக்கும் ஒரு அமைப்பு. ஜெயலலிதா
முதல்வராக இருக்கும் வரை அப்படித்தான்
இருந்தது.

2) ஜெயலலிதா இறந்த பின்னர் எடப்பாடி முதல்வர் ஆனார்.
அப்போது 01.09.2016ல் சட்ட மன்றத்தில் அமைச்சர் பன்னீர்
செல்வம் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்.
தமிழ்நாடு அரசுப பணியாளர் முறைப்படுத்தல் சட்டமானது
திருத்தப்பட்டு வெளிமாநிலங்கள், வெளி நாடுகளைச்
சேர்ந்தோரும் தமிழக அரசுப் பணிகளில் சேரலாம் என்று 
ஆக்கப் பட்டது.

3) இது ரகசியமாகச் செய்யப்பட திருத்தம் அல்ல.
பகிரங்கமாக சட்ட மன்றத்தில் கொண்டு வரப்பட்ட
திருத்தம். சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
திருத்தம். தமிழனுக்குரிய வேலைவாய்ப்பை வெளி
மாநிலத்தவர்க்கு வழங்கும் துரோகத்தை சட்ட
பூர்வமாக அதிமுக அரசு கொண்டு வந்தது.

4) இந்த துரோகத்தை திமுக எதிர்க்கவில்லை. ஒத்து
ஊதியது. இவ்வளவு மோசமான சட்டத் திருத்தத்தை
எதிர்த்தாரா ஸ்டாலின்? மக்களைத் திரட்டிப்
போராடினாரா ஸ்டாலின்? இல்லை; இல்லவே இல்லை.

5) இதன் விளைவு என்ன தெரியுமா? அண்மையில்
மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் வேலைக்கு
300 காலி இடங்களுக்கு ஆள் எடுத்தார்கள். இதில்
38 பேர் வெளி மாநிலத்தவர் தேர்ந்தெடுக்கப் பட்டு
உள்ளனர். இந்த 38ல் 25 பேர் தெலுங்கர்கள்.

6) ஆளுங்கட்சி கொண்டு வரும் மக்கள் விரோத
சட்டங்களை கண்கொத்திப் பாம்பாக இருந்து
கண்காணித்து முறியடிக்க வேண்டியது
எதிர்க்கட்சியின் வேலை. ஆனால் மு க ஸ்டாலின்
அதைச் செய்தாரா? 90 எம் எல் ஏக்கள் இருந்து
மக்களுக்கு என்ன பயன்?

7) தமிழக இளைஞர்களே, ஆளுங்கட்சியும் எதிர்க்
கட்சியும் சேர்ந்து கூட்டுக் களவாணித்தனம் செய்யும்
இந்த அநீதியை எதிர்த்து ஏதேனும் செய்யப்
போகிறீர்களா?

8) இல்லை, நீங்கள் செய்ய மாட்டீர்கள். போய்
கூத்தாடிகளின் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுங்கள்!
***********************************************

 

  
    
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக